”எனக்கு கல்யாணம் ஆனா அவங்க கஷ்டப்படுவாங்க”… நடிகர் பிரபாஸ்! - Tamil News | Actor Prabhas breaks silence on wedding rumours | TV9 Tamil

”எனக்கு கல்யாணம் ஆனா அவங்க கஷ்டப்படுவாங்க”… நடிகர் பிரபாஸ்!

Actor Prabhas: அறிவியல் புனைவு திரைப்படமான இதில் பிரபாஸின் அறிமுக வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தின் கதை 6000 ஆண்டுகள் நடக்கும் விஷயங்களை பேசுவதாக இயக்குநர் நாக் அஸ்வின் கூறியிருந்தார். படம் ரூ.600 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகிறது. ஒரே நேரத்தில் இந்தியிலும், தெலுங்கிலும் படமாக்கப்பட்டு வருகிறது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

”எனக்கு கல்யாணம் ஆனா அவங்க கஷ்டப்படுவாங்க”... நடிகர் பிரபாஸ்!

நடிகர் பிரபாஸ்

Published: 

27 May 2024 09:12 AM

பாகுபலி படங்களின் பிரம்மாண்ட வெற்றி தொடர்ந்து தெலுங்கு நடிகர் பிரபாஸ் பான் இந்தியா நட்சத்திரமாக மாறினார். பாகுபலி படத்திற்கு பின்னர் வெளிவந்த சாஹோ, ராதே ஷ்யாம் படங்கள் தோல்வியை சந்தித்தன. அதன் பின்னர் வெளிவந்த ஆதிபுரூஷ் திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதனை தொடர்ந்து கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான சலார் திரைப்படம் பிரபாஸிற்கு ரசிகர்களிடையே கவனத்தை கொடுத்தது. இந்நிலையில் நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து வரும் திரைப்படம் ‘கல்கி 2898 ஏ.டி’. இந்த நிலையில் மிகப்பெரிய பொருட்செலவில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடிக்கும் கல்கி திரைப்படம் முழு வீச்சில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கோலிவுட் நடிகர் பசுபதி, திஷா பதானி, அன்னா பென் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் உருவாகிறது. அறிவியல் புனைவு திரைப்படமான இதில் பிரபாஸின் அறிமுக வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தின் கதை 6000 ஆண்டுகள் நடக்கும் விஷயங்களை பேசுவதாக இயக்குநர் நாக் அஸ்வின் கூறியிருந்தார். படம் ரூ.600 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகிறது. ஒரே நேரத்தில் இந்தியிலும், தெலுங்கிலும் படமாக்கப்பட்டு வருகிறது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இதனை தொடர்ந்து முழுக்க முழுக்க இந்த திரைப்படம் டூன் என்ற திரைப்படத்தின் காப்பி என கூறி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து விஷ்ணு பகவானின் கடைசி அவதாரமான கல்கி அவதாரத்தை வித்தியாசமாக எடுக்கிறேன் என்ற பெயரில் ஏதோ ஹாலிவுட் திரைப்படத்தின் ரீமேக்கை எடுத்து வைத்திருக்கிறார்கள் என்று பலரும் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

Also read… பகத் பாசிலின் நியூ லுக்… சோசியல் மீடியாவை கலக்கும் போட்டோ!

இந்த நிலையில் கல்கி திரைப்படம் ஜூன் மாதம் 27 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் படத்தின் புரோமோஷன் பணியில் ஈடுபட்ட நடிகர் பிரபாஸ் தன்னை பற்றி வரும் வதந்திகளுக்கு பதில் கொடுத்து இருக்கிறார். அதில் “நான் இப்போது திருமணம் செய்துகொள்ள மாட்டேன். ஏனென்றால் என்னுடைய பெண் ரசிகைகளை நான் hurt செய்ய விரும்பவில்லை” என பிரபாஸ் கூறி இருக்கிறார்.

வைரல் நாயகிதான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
12 வயதுக்குள் உங்கள் குழந்தை கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்!
உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்