5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பாக்ஸ் ஆபிஸில் கொடிகட்டி பறக்கும் பிரபாஸின் கல்கி… 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Kalki 2898 AD Box office Collection : மகாபாரதத்தையும், கல்கி அவதாரத்தையும் கலந்து கட்டி ஒரு புதுக்கதையை நாக் அஸ்வின் ஹாலிவுட் ஸ்டைலில் கொடுத்திருக்கும் படம் தான் கல்கி 2898 ஏடி. இந்த படமே வெறும் அறிமுகம் தான். அடுத்த பாகத்தில் தான் கல்கி அவதாரமே வரும் என படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கல்கி 2898ஏடி படம் அருமை. பிரபாஸின் நடிப்பு சிறப்பு. அமிதாப் பச்சன், கமல் ஹாசன் தீயாக நடித்திருக்கிறார். இந்திய சினிமாவில் மறக்க முடியாத படமாக இருக்கிறது எனவும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

பாக்ஸ் ஆபிஸில் கொடிகட்டி பறக்கும் பிரபாஸின் கல்கி… 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
கல்கி
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Jul 2024 11:06 AM

நடிகர் பிரபாஸின் நடிப்பில் வெளியான ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் 10 நாள் வசூல் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. பாகுபலி படங்களின் பிரம்மாண்ட வெற்றி தொடர்ந்து தெலுங்கு நடிகர் பிரபாஸ் பான் இந்தியா நட்சத்திரமாக மாறினார். பாகுபலி படத்திற்கு பின்னர் வெளிவந்த சாஹோ, ராதே ஷ்யாம் படங்கள் தோல்வியை சந்தித்தன. அதன் பின்னர் வெளிவந்த ஆதிபுரூஷ் திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதனை தொடர்ந்து கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான சலார் திரைப்படம் பிரபாஸிற்கு ரசிகர்களிடையே கவனத்தை கொடுத்தது. இந்நிலையில் நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் ‘கல்கி 2898 ஏ.டி’. இந்தப் படம் கடந்த 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, பசுபதி, திஷா பதானி, அன்னா பென் உள்ள பலர் நடித்துள்ளனர். வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் உருவானது. அறிவியல் புனைவு திரைப்படமான இதில் பிரபாஸின் அறிமுக வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தின் கதை 6000 ஆண்டுகள் நடக்கும் விஷயங்களை பேசுவதாக இயக்குநர் நாக் அஸ்வின் கூறியிருந்தார். படம் ரூ.600 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவானது. ஒரே நேரத்தில் இந்தியிலும், தெலுங்கிலும் படமாக்கப்பட்ட இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

பொதுவாகவே பெரிய பட்ஜெட் படங்களை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிக தொகை கொடுத்து வாங்கிவிடும். ஆனால், பொன்னியின் செல்வன் போன்ற பீரியாடிக் படங்களை அமேசான் பிரைம் தான் வாங்கி வருகிறது. இந்நிலையில், கல்கி 2898 ஏடி திரைப்படத்தையும் பெரிய தொகை கொடுத்து அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தியேட்டரில் படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே டிஜிட்டல் பார்ட்னர் அமேசான் பிரைம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டனர்.

Also read… Indian 2 Review: இந்தியன் 2 எப்படி இருக்கு? வைரலாகும் முதல் விமர்சனம்!

மகாபாரதத்தையும், கல்கி அவதாரத்தையும் கலந்து கட்டி ஒரு புதுக்கதையை நாக் அஸ்வின் ஹாலிவுட் ஸ்டைலில் கொடுத்திருக்கும் படம் தான் கல்கி 2898 ஏடி. இந்த படமே வெறும் அறிமுகம் தான். அடுத்த பாகத்தில் தான் கல்கி அவதாரமே வரும் என படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கல்கி 2898ஏடி படம் அருமை. பிரபாஸின் நடிப்பு சிறப்பு. அமிதாப் பச்சன், கமல் ஹாசன் தீயாக நடித்திருக்கிறார். இந்திய சினிமாவில் மறக்க முடியாத படமாக இருக்கிறது எனவும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 27-ம் தேதி உலகம் முழுவதும் வெளியான கல்கி படத்தின் 10 நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகின்றது. ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இந்தப் படம் வெளியாகி 10 நாட்கள் கடந்த நிலையில் தற்போது வரை படம் இதுவரை 850 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஞாயிற்றுக்கிழமையான இன்று உலகம் முழுவதும் 60 முதல் 70 கோடி வரை வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest News