பிரபாஸின் ’கல்கி 2898 AD’ படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ! - Tamil News | Actor prabhas Kalki 2898 AD early X reviews | TV9 Tamil

பிரபாஸின் ’கல்கி 2898 AD’ படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

Updated On: 

27 Jun 2024 10:55 AM

Kalki 2898 AD review: வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ளது இந்தப் படத்தை. அறிவியல் புனைவு திரைப்படமான இதில் பிரபாஸின் அறிமுக வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தின் கதை 6000 ஆண்டுகள் நடக்கும் விஷயங்களை பேசுவதாக இயக்குநர் நாக் அஸ்வின் கூறியிருந்தார். படம் ரூ.600 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவானது. ஒரே நேரத்தில் இந்தியிலும், தெலுங்கிலும் படமாக்கப்பட்ட இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

பிரபாஸின் ’கல்கி 2898 AD’ படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

’கல்கி 2898 AD’

Follow Us On

பிரபாஸ் நாயகனாக நடித்துள்ள ‘கல்கி 2898 AD’ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் படம் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வந்துள்ளது. நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர்கள் அமிதாப்பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘கல்கி 2898 ஏடி’. இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடித்திருக்கிறார். பான் இந்திய படமாக இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ளது இந்தப் படத்தை. அறிவியல் புனைவு திரைப்படமான இதில் பிரபாஸின் அறிமுக வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தின் கதை 6000 ஆண்டுகள் நடக்கும் விஷயங்களை பேசுவதாக இயக்குநர் நாக் அஸ்வின் கூறியிருந்தார். படம் ரூ.600 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவானது. ஒரே நேரத்தில் இந்தியிலும், தெலுங்கிலும் படமாக்கப்பட்ட இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் தீபிகா படுகோனே, பசுபதி, திஷா பதானி, அன்னா பென் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இன்று உலகம் முழுவதும் இந்தப் படம் வெளியாகியுள்ள நிலையில் படம் பார்த்தவர்கள் தங்களது கருத்துகளை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

உடலுக்கு அற்புத பலன்களை தரும் வெண்டைக்காய்..!
யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
Exit mobile version