Actor Vijay: “ஒரே போன் கால்” – விஜய்யுடன் ராதாரவிக்கு ஏற்பட்ட பிரச்சினை தெரியுமா?
Radharavi: நடிகர் விஜய் அறிமுகமான நாளைய தீர்ப்பு படம் தொடங்கி காதலுக்கு மரியாதை, என்றென்றும் காதல், பிரண்ட்ஸ், சுறா, சர்கார் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் சர்க்கார் படத்தில் அவர் ஏற்று நடித்த ரெண்டு என்கிற கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பிரபலமானது.
நடிகர் விஜய்: ஒரே நேர்காணலில் பேசிய ராதா ரவி, என்னுடைய பேரன் நடிகர் விஜய்யின் மிகத் தீவிர ரசிகன். மழலையாக இருக்கும்போதும் சரி, சர்கார் படம் வரும்போதும் சரி என்னிடம் ஒரு கோரிக்கை ஒன்றை விடுத்தான். அதாவது விஜய் உடன் போட்டோ எடுக்க வேண்டும் என கூறியிருந்தான். அப்போது அவனுக்கு 11 வயது ஆகி இருந்தது. நானும் முதலில் விஜய் தரப்பிடம் கேட்டேன். ஷூட்டிங்கில் படத்துக்கான மேக்கப் போட்டு இருப்பதால் புகைப்படம் எடுக்க வேண்டாம் எனவும் வீட்டுக்கு வருமாறு விஜய் தெரிவித்து இருந்தார். அந்தப் படத்துக்காக அவர் என்ன மாதிரியான மேக்கப் போட்டார் என தெரியவில்லை. அதன்பின் விஜய் வீட்டுக்கு எனது குடும்பத்தினரை கூட்டி சென்றேன் அவர் அனைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதனை தொடர்ந்து சர்கார் படத்தின் பொது சம்பவம் ஒன்று நடைபெற்றது.
விஜய்க்கு போன் போட்ட ராதாரவி
சர்கார் படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகு பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.அப்போது எனக்கு குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டது. மயக்க நிலைக்கு சென்ற நான் சுதாரித்துக் கொண்டு படிக்கட்டிலேயே உட்கார்ந்து விட்டேன். மேடை அருகிலேயே நான் சரிந்து விழ விஜய் உள்ளிட்ட அங்கிருந்தவர்கள் தான் உதவினார்கள்.அந்த நேரத்தில் விஜய் எனக்கு உதவி செய்தாரே என்பதால் அவருக்கு நன்றி தெரிவிக்க போன் செய்தேன்.
அவருடைய உதவியாளர் போனை எடுத்ததும் விவரத்தை சொன்னேன். அதற்கு விஜய் உங்களை வர சொல்லி விட்டார். ஆனால் அன்றைக்கு வந்த மாதிரி கூட்டத்தை அழைத்துக் கொண்டு வர வேண்டாம் என தெரிவித்தார். நான் வரவே இல்லை என போனை வைத்து விட்டேன். அவருக்கு வேண்டுமானால் அது கூட்டமாக இருக்கலாம் ஆனால் அது என்னுடைய குடும்பம் இல்லையா என தெரிவித்திருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் – ராதாரவி கூட்டணி
தமிழ் சினிமாவின் மிக முக்கிய நபராக திகழ்ந்தவர் ராதாரவி. நடிகவேள் எம் ஆர் ராதாவின் மகன் என்ற அடையாளத்துடன் திரைத்துறைக்குள் அடி எடுத்து வைத்த அவர், தனது நடிப்பு திறமை, மாறுபட்ட வசன உச்சரிப்பு, வில்லன் முதல் காமெடி கேரக்டர் வரை என வித்தியாசமாக பயணித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா ஒரு இடம் பிடித்தார்.
அதேசமயம் நடிகர் விஜய் அறிமுகமான நாளைய தீர்ப்பு படம் தொடங்கி காதலுக்கு மரியாதை, என்றென்றும் காதல், பிரண்ட்ஸ், சுறா, சர்கார் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் சர்க்கார் படத்தில் அவர் ஏற்று நடித்த ரெண்டு என்கிற கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. 71 வயதான ராதாரவி தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஆக்டிவ் ஆக செயல்பட்டு வருகிறார்என்பது குறிப்பிடத்தக்கது.