5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ரஜினிகாந்த் 74-வது பிறந்தநாள்.. விஜய், கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து!

Rajinikanth Birthday wishes :தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி கதாநாயகனாக இருந்துவருபவர் ரஜினிகாந்த். திரைத்துறையில் சுமார் 50 வருடங்களுக்கு மேலாக அனுபவம் கொண்டுள்ளார் இவர். கே.பாலச்சந்தர் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தற்போது சுமார் 172 திரைப்படங்களுக்கு மேலாக நடித்துள்ளார்.

ரஜினிகாந்த் 74-வது பிறந்தநாள்..  விஜய், கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து!
கோப்பு புகைப்படங்கள்
barath-murugan
Barath Murugan | Published: 12 Dec 2024 11:39 AM

தமிழ்த் திரைப்படங்களில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திடாத பாத்திரமே கிடையாது, வில்லன் மற்றும் ஹிரோ எனப் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சினிமாவில் சுமார் 50 வருடங்களுக்கு மேல் சிறப்பான அனுபவம் கொண்ட இவர் 1975ம் ஆண்டு இயக்குநர் கே. பாலசந்திரன் இயக்கத்தில் உருவான அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் திரைப்படங்களில் அறிமுகமானார். சிறுவயதிலிருந்து நடிப்பின் மீது மிகுத்த ஆர்வம் கொண்ட இவருக்கும் வாழ்க்கையில் மிக முக்கியமானவராக அமைத்தவர் கே.பாலசந்தர். தொடர்ந்து தனது கடினமான உழைப்பினால் சினிமாவில் அடுத்தடுத்த நிலைக்கு வந்த ரஜினிக்குத் தமிழ்த் திரைப்படங்களைத் தாண்டி இந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு என பல மொழிகளில் ரசிகர்கள் குவியத் தொடங்கினர்.

இதைத் தொடர்ந்து 1983ம் ஆண்டு இயக்குநர் டி.ராமாராவ் இயக்கத்தில் உருவான “அந்த கானூள்” என்ற திரைப்படத்தில் நடித்து இந்தி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை வழங்கினார். தொடர்ந்து இந்தியில் முக்கிய கதாபாத்திரமாகவும், காமியோ ரோலிலும் பல படங்களில் நடித்துள்ளார். ஆக்ஷ்ன், காமெடி, ஸ்டைல் மற்றும் சோகம் போன்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். இதுவரை நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஒவ்வொரு படங்களிலும் தனது பாணியில் நடித்து மாஸ் காட்டியிருப்பார்.

ஆரம்பத்தில் சினிமாவில் நிறங்களுக்கு, அழகு இருந்தால் தான் திரைப்படங்களில் நடிப்பதற்கு அதிகமான வாய்ப்புகள் கிடைக்கும். அதைத் தனது நடிப்பினால் தகர்த்துக் காட்டியவர் நடிகர் ரஜினிகாந்த். சினிமாவில் நடிப்பதற்கு நிறங்கள் முக்கியமில்லை, நடிப்புதான் முக்கியம் என உணர்த்தியவரும் இவரே.

இதையும் படிங்க:தமிழ் சினிமாவின் பிராண்ட்.. சூப்பர் ஸ்டார் ரஜினி கடந்து வந்த பாதை!

தொடர்ந்து சுமார் 172 திரைப்படங்களுக்கும் மேல் திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் இன்று டிசம்பர் 12ம் தேதி தனது 74-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். படங்களைத் தாண்டி சமூகப் பொறுப்பிலும் இருக்கும் இவருக்கு அரசியல்வாதிகள், நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் மற்றும் ரசிகர்கள் எனப் பலரும் தங்களில் வாழ்த்துக்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

அதிலும் முக்கியமாகத் திரைப்படங்களிலிருந்து அரசியல் சென்ற விஜய் மற்றும் நடிகர் கமல்ஹாசன் எனப் பலரும் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் விதத்தில் இணையத்தில் வாழ்த்து செய்திகளைப் பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க:வெறிக்கொண்ட வில்லத்தனம்.. ரஜினி நெகட்டிவ் ரோலில் அசத்திய டாப் 5 படங்கள்!

நடிகர் ரஜினிகாந்த்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தமிசை சௌந்தர்ராஜன், இயக்குநர் கார்த்தி சுப்புராஜ், இசையமைப்பாளர் டி. இமான், சன் பிக்சர்ஸ், லைகா ப்ரொடக்ஷன், நடிகை ராதிகா மற்றும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் எனப் பலரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துவருகின்றனர்.

இதையடுத்து அவரின் ரசிகர்களும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு 1991ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான “தளபதி” திரைப்படம் இன்று ரீ ரிலீஸ் ஆகிறது. இதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படத்தைப் பற்றிய அப்டேட் இன்று மாலை வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க:‘ஜெயிலர் 2’ ரிலீஸ் அடுத்த வருஷமா..? மாஸ்டர் பிளான் போடும் இயக்குநர் நெல்சன்!

Latest News