5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

யார் இந்த ரஜினிகாந்த்? இவரின் திரைப்படங்கள் வெற்றியடைய காரணம் என்ன..?

Actor Rajinikanth : நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை முன்னணி கதாநாயகனாக வலம்வருகிறார். தமிழ்த் திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து தனது தனித்துவமான ஸ்டைல் மூலமாக ரசிகர்களைத் தனது பக்கம் ஈர்த்தவர். தமிழில் 170க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கிறார். 1975ல் வெளியான அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் தனது காலடி பதித்தார்.

யார் இந்த ரஜினிகாந்த்? இவரின் திரைப்படங்கள் வெற்றியடைய காரணம் என்ன..?
நடிகர் ரஜினிகாந்த்
barath-murugantv9-com
Barath Murugan | Published: 10 Oct 2024 16:44 PM

நடிகர் ரஜினிகாந்த் : தமிழ் சினிமாவையும் இவரையும் பிறக்க முடியாது என்ற இடத்தில் முக்கிய பங்குவகிப்பவர் நடிகர் ரஜினிகாந்த். தனது ஆரம்ப வாழ்க்கையில் பெங்களூரில் பேருந்து நடத்துநராகத் தனது வாழ்க்கையை ஆரம்பித்த இவர். நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தினால் 1973ல் ஒரு திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார். நடிப்பைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்ட இவர் 1975ல் இயக்குநர் கைலாசம் பாலச்சந்திரனின் இயக்கத்தில் உருவான “அபூர்வ ராகங்கள்” என்ற திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன், ஸ்ரீ வித்யா உடன் இணைந்து நடித்திருந்தார் இந்த திரைப்படத்தின் மூலமாகத் தமிழ் திரையுலகில் இவர் அறிமுகமானார். பின் தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

இது அவருக்கு அந்தளவு வரவேற்புகளைத் தரவில்லை. பின் 1976ல் தெலுங்கு ரீமேக் திரைப்படமான “முள்ளும் மலரும்” என்ற தமிழ்த் திரைப்படத்தில் ஸ்ரீ தேவி மாற்று கமல்ஹாசனுடன் இணைந்து நடித்தார். இந்த திரைப்படத்தில் நடிகை ஸ்ரீதேவியின் முதல் திரைப்படமாகும். இந்த திரைப்படத்திற்காக நடிகர் ரஜினிக்கு சுமார் 2000 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது.

இதையும் படிங்க :வேட்டையன் திரைப்படம் எப்படி இருக்கு..! டுவிட்டர் விமர்சனம் இதோ..!

 

சூப்பர் ஸ்டார் :

பின் அவர் பதினாறு வயதினிலே, பைரவி, அவள் அப்படித்தான் மற்றும் குப்பத்து ராஜா போன்ற திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இதன் காரணமாகத் தான் நடிகர் ரஜினிகாந்த்திற்கு “சூப்பர் ஸ்டார்” என்ற  பெயரும் வந்தது. இந்த திரைப்படங்களுக்குப் பின்னால் வந்த திரைப்படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றே அறியப்பட்டார்.

பின் பல தமிழ்த் திரைப்படங்களைத் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்த இவருக்குத் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்புகள் இருந்து வந்தது. இந்த வரவேற்புகளைப் பயன்படுத்தி நடிகர் ரஜினி அடுத்தடுத்த படங்களில் கதைகளைத் தெரிவு செய்து நடிக்க ஆரம்பித்தார். இதனால் அவரின் ரசிகர்களுக்கு நல்ல கருத்துக்களைக் கொடுக்கும் விதத்தில் கதைகளைத் தேர்வு செய்தார். இந்த மாதிரி தேர்வு செய்து நடித்து அந்தத்திரைப்படங்கள் நல்ல விதத்தில் பல விமர்சனங்களைப் பெற்ற நிலையில் நடிகர் ரஜினிக்குத் தமிழ் சினிமாவில் மவுசு கூடியது.

இதையும் படிங்க :Vettaiyan : திருவிழா போல களைகட்டும் ரஜினியின் வேட்டையன்..!

இத்திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சிறந்த கதைகளில் நடிக்க ஆரம்பித்த ரஜினி 2007ல் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான மாபெரும் வெற்றி திரைப்படமான “சிவாஜி” திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இத்திரைப்படமானது கோலிவுட் வரலாற்றிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் திரைப்படமாக ரஜினியின் சிவாஜி திரைப்படம் அமைந்தது. இந்த திரைப்படத்தில் நடிக இவர் அப்போதே சுமார் “26கோடி” சம்பளம் பெற்றுள்ளார். இது ஆசியக் கண்டத்தில் ஜாக்கி சான் அடுத்ததாக அதிகம் சம்ளம் வாங்கிய நடிகர் என ரஜினிக்குப் பெரிய பிரபலத்தை அப்போது வாங்கி கொடுத்தது.

வெற்றியின் தொடக்கம் :

பின் குசேலன் மற்றும் எந்திரன் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இந்த திரைப்படத்தில் 2010ல் வெளியான இயக்குநர் ஷங்கரின் மாபெரும் பட்ஜெட்டில் உருவான எந்திரன் திரைப்படம் தமிழில் வெளியான ரோபோட்களை வைத்து எடுக்கப்பட்ட முதல் திரைப்படமாகும். இந்த திரைப்படம் உலகம் முழுதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக அதிக‌ வசூல் பெற்று தமிழ்த் திரைப்படங்களில் அதிக அளவு வசூல் பெற்ற முதல் திரைப்படம் என்னும் பெருமையைப் பெற்றது.

அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களில் நடித்து ரஜினிகாந்த் மக்கள் மத்தியில் பிரபலமானார். திரைப்படங்களின் வெற்றிக்குப் பிறகு 2017ல் தான் அரசியலுக்கு வரவுள்ளதாகத் தகவல்களை வெளியிட்டார் இந்நிலையில் இது மக்கள் மத்தியில் இது ஓரும் பேசும் பொருளாகிவிட்டது. பின் 2021ல் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று கூறினார் , பின் சில பல காரணங்களால் நான் அரசியலில் இறங்க விரும்பவில்லை என்று பின்வாங்கினார்.

பின் திரைப்படங்களில் முழுமையாகக் கவனம் செலுத்திப் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் அசைக்கமுடியாத இடத்திலிருந்தார். பின் முன்னணி இயக்குநர்களுடன் கைகோர்த்து 2.0, பேட்ட, தர்பார், மற்றும் ஜெயிலர் போன்ற திரைப்படங்களில் நடித்து வயதானாலும் தனது நடிப்பினால் ரசிகர்களைச் சந்தோஷப்படுத்தி வருகிறார்.

இதையும் படிங்க :இத்தனை கோடிகளை? நடிகர் அமிதாப் பச்சன் வேட்டையன் திரைப்படத்தில் வாங்கிய சம்பள விவரம்..!

வேட்டையன்

தற்போது இவரின் நடிப்பில் அக்டோபர் 10 தேதியான இன்று வெளியான வேட்டையன் திரைப்படம் மாஸ் கட்டி வருகிறது. இந்த திரைப்படத்தில் அமிதாப்பச்சன், ராணா, மஞ்சு வாரியர், ஃபஹத் ஃபாசில், ரித்திகா சிங், துசாரா விஜயன் போன்ற நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறாக மக்கள் மற்றும் தனது ரசிகர்கள் மத்தியில் பிரபலமான “சூப்பர் ஸ்டார்” இதுவரை சுமார் 171 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “கூலி” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வருகின்ற 2025ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Latest News