Rajinikanth: அழுகையை அடக்க முடியவில்லை.. கண்டிப்பா பாருங்க.. அமரன் பற்றி ரஜினி பெருமிதம்! - Tamil News | actor rajinikanth emotional speech about amaran movie and appreciated sivakarthikeyan rajkumar periyasamy | TV9 Tamil

Rajinikanth: அழுகையை அடக்க முடியவில்லை.. கண்டிப்பா பாருங்க.. அமரன் பற்றி ரஜினி பெருமிதம்!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகியுள்ள அமரன் படத்துக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இதனிடையே தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் அமரன் படத்தைப் பாராட்டி அப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோரை நேரில் அழைத்து பாராட்டியதோடு  அதனை வீடியோவாகவும் பதிவிட்டுள்ளார்.

Rajinikanth: அழுகையை அடக்க முடியவில்லை.. கண்டிப்பா பாருங்க.. அமரன் பற்றி ரஜினி பெருமிதம்!

அமரன் படக்குழுவினரை பாராட்டிய ரஜினி

Updated On: 

02 Nov 2024 19:59 PM

அமரன் படம்: சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “அமரன்”. இந்த படம் தீபாவளி வெளியீடாக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி திரைக்கு வந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகியுள்ள அமரன் படத்துக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.  இந்த படம் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. உண்மைக்கு மிக நெருக்கமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படம் திரையிட்ட இடமெங்கும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் படம் பார்த்தவர்கள் அனைவரும் ஒரு கணம் கண்ணீர் சிந்தி மேஜர் முகுந்துக்கு தன்னுடைய வீர வணக்கங்களை செலுத்தும் அளவுக்கு அமைந்துள்ளது என பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். அமரன் படம் 2 நாட்களில் சுமார் ரூ.60 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாக்டர், டான் படங்களைத் தொடர்ந்து ரூ.100 கோடி வசூலைப் பெற்ற அவரின் 3வது திரைப்படம் என்ற பெருமையை அமரன் இன்று அல்லது நாளை பெற்று விடும்.

Also Read: IND vs NZ 3rd Test Day 2 Highlights: முடிந்த 2வது நாள்! 9 விக்கெட்டுகளை இழந்த நியூசி.. அசத்திய இந்திய அணி!

இதனிடையே தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் அமரன் படத்தைப் பாராட்டி அப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோரை நேரில் அழைத்து பாராட்டியதோடு  அதனை வீடியோவாகவும் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக ராஜ்கமல் நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் பேசும் ரஜினிகாந்த், “அனைவருக்கும் வணக்கம். நேற்று தான் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ள அமரன் படம் பார்த்தேன். முதலில் கமல்ஹாசனை எவ்வளவு பாராட்டினாலும் பத்தாது. காரணம் மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க வேண்டும் என அவர் எடுத்த முடிவை எடுத்ததற்காக முதலில் எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்த படத்தை நினைத்து பார்ப்பதை விட ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய விதம் மிக மிக அருமை. ராணுவத்தைப் பற்றி எவ்வளவோ படம் எடுத்திருக்கிறார்கள். ஆனால் இந்த மாதிரி எடுத்தது இல்லை. கேமரா மேன், எடிட்டர், இசையமைப்பாளர் என எல்லாரையும் வைத்து ரொம்ப அருமையாக எடுத்துள்ளார்.

நம்முடைய சிவகார்த்திகேயன் கேரக்டராகவே வாழ்த்திருக்கிறார். அவரின் கேரியரில் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக இது இருக்கும். அந்த மாதிரி தனது கேரக்டரில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சாய் பல்லவி நடித்துள்ள இந்து கேரக்டர் 2 பேரும் அமரன் படத்தை தூக்கி நிறுத்தியுள்ளார்கள். படம் பார்த்து முடிக்கும்போது என்னால் அழுகையை அடக்க முடியவில்லை.

இப்படத்தைப் பார்க்கும்போது எனக்கு தனிப்பட்ட முறையில் உணர்வுப்பூர்வமாக இருந்தது என்னவென்றால், என்னுடைய இரண்டாவது அண்ணன் நாகேஸ்வர ராவ் கெய்க்வாட் 14 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றினார். அவர் சீனாவுடனான போரில் களம் கண்ட நிலையில் முதுகில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்து அதன்பிறகு விருப்ப பணி ஓய்வுப் பெற்றார். அமரன் படம் எல்லோரும் பார்க்க வேண்டிய படம். ராணுவ வீரர்கள் எல்லாரும் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் எல்லையில் நம்மை காக்கவிட்டால் ஒன்னுமே இல்லை. தயவு செய்து எல்லாரும் இந்த படத்தை பாருங்கள் என தெரிவித்துள்ளார். ரஜினியின் இந்த வாழ்த்து படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Also Read: கேரளாவில் ரயில் மோதி 4 தமிழர்கள் பலி.. தண்டவாளத்தில் தூய்மை பணியிம்போது நேர்ந்த சோகம்!

இதனிடையே சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப் பதிவில், “அமரனுக்கு படத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த பாராட்டுக்களால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். படத்தின் ஒவ்வொரு நுணுக்கத்தையும் அவர் ரசித்தது எனக்கும், குழுவினருக்கும் மறக்க முடியாத அனுபவமாக உள்ளது. உங்கள் நிலையான ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றி தலைவா!” என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

மனைவியை ஏன் கொண்டாட வேண்டும் தெரியுமா?
உங்கள் வாழ்க்கையை மாற்றும் முக்கிய விஷயங்கள்!
வெறும் வயிற்றில் வேப்ப இலைகள் சாப்பிடலாமா?
தினமும் பூசணி விதை சாப்பிட்டால் என்னாகும்?