5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Rajinikanth: ரத்தநாள வீக்கம்.. ஸ்டண்ட் சிகிச்சை.. ரஜினிக்கு இதுதான் பிரச்னை.. மருத்துவமனை அறிக்கையின் முழு விவரம்!

7 3 வயதிலும் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்தின் உடல்நிலை அனைவரும் அறிந்தது ஒன்று தான். ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் அவர் விரைந்து உடல் நலம் பெற வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் பதிவு வெளியிட்டிருந்தனர்.

Rajinikanth: ரத்தநாள வீக்கம்.. ஸ்டண்ட் சிகிச்சை.. ரஜினிக்கு இதுதான் பிரச்னை.. மருத்துவமனை அறிக்கையின் முழு விவரம்!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 01 Oct 2024 18:51 PM

ரரஜினிகாந்த்: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்பட்டு வருபவர் ரஜினிகாந்த். இவர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை தூங்கியெழுந்த தமிழக மக்கள் சமூக வலைத்தளங்கள் மற்றும் டிவி சேனல்களில் வரும் செய்திகள் பார்த்து தான் ரஜினிகாந்த் உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவலை தெரிந்துக் கொண்டனர். குறிப்பாக ரஜினி ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

ரஜினிக்கு என்னதான் ஆனது என தெரியாமல் பலரும் குழம்பினர். இதனிடையே அப்பல்லோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டு அதனை சரி செய்ய ஸ்டண்ட் பொருத்தப்பட்டதாகவும் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியது.

மற்றொரு பக்கம் வெறும் வயிற்றில் பரிசோதனைகள் எடுக்க வேண்டும் என்பதற்காக தான் ரஜினி இரவில் மருத்துவமனை சென்றார் என்றெல்லாம் தகவல் பரவியது.இந்நிலையில் ரஜினிகாந்த் உடல்நிலை தொடர்பாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ள அப்பல்லோ மருத்துவமனை இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், “செப்டம்பர் 30ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு இதயத்தை விட்டு வெளியேறும் பிரதான ரத்த நாளத்தில் வீக்கம் இருந்து கண்டறியப்பட்டது. இதனை சரி செய்ய அறுவை சிகிச்சை இல்லாத டிரான்ஸ்கேட்டர் முறை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு ஸ்டாண்ட் பொருத்தப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளதாகவும்,  நலமுடன் இருப்பதாகவும் அவரின் நலம் விரும்பிகள், ரசிகர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து கொள்கிறது. இரண்டு நாட்கள் பிறகு ரஜினிகாந்த்  வீடு திரும்புவார்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் அவர் விரைந்து உடல் நலம் பெற வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் பதிவு வெளியிட்டிருந்தனர்.

ரஜினிகாந்த் உடல்நிலை

73 வயதிலும் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்தின் உடல்நிலை அனைவரும் அறிந்தது ஒன்று தான். சினிமாவின் நடிக்க தொடங்கிய காலக்கட்டத்தில் அவருக்கு இருந்த மது மற்றும் புகைப்பழக்கம் உடல்நல பாதிப்புக்கு காரணமாக அமைந்ததாக பலமுறை அவரே தெரிவித்தும் இருக்கிறார். அவரின் உடல்நிலை கடந்த 15 ஆண்டுகளாகவே சீரான நிலையில் இல்லை.

குறிப்பாக 2011ல் தொடங்கி இன்று வரை மருத்துவ உதவியுடன் தான் ரஜினிகாந்த் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.  சொல்லப்போனால் அந்த காலக்கட்டத்தில் அவர் மரணத்தின் விளிம்புக்கே சென்று வந்தார். அந்த அளவுக்கு மோசமாக உடல்நலம் இருந்தது.

ஆனாலும் மருத்துவ சிகிச்சையாலும் ரசிகர்களின் பிரார்த்தனையாலும் ரஜினிகாந்த் மீண்டும் வந்தார்.  அவருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன் பின்னர் சில காலம் ஓய்வில் இருந்த அவர் வருடத்திற்கு ஒரு படம் என்ற ரீதியில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக வேட்டையன் படம் வெளியாக உள்ளது. அக்டோபர் 10ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்படும் நிலையில் ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இப்படத்தை இயக்கி உள்ளார்.

மேலும் இந்த படத்தில் அமிதாப்பச்சன், மஞ்சுவாரியர், துஷாரா விஜயன், பகத் பாஸில், ரித்திகா சிங், ராணா டகுபதி, சர்வானந்த், ரோகிணி, அபிராமி, கிஷோர், ரமேஷ் திலக், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. அக்டோபர் 2 ஆம் தேதி வேட்டையன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதனை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News