’வலுவான எதிர்கட்சி ஜனநாயகத்திற்கு நல்லது’ – நடிகர் ரஜினிகாந்த்! - Tamil News | actor rajinikanth says a strong opposition is good for democracy | TV9 Tamil

’வலுவான எதிர்கட்சி ஜனநாயகத்திற்கு நல்லது’ – நடிகர் ரஜினிகாந்த்!

Updated On: 

09 Jun 2024 19:15 PM

Actor Rajinikanth: மோடியின் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க 7000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு அண்டை நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்துக் கட்சி தலைவர்களும், முக்கிய பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதால் டெல்லியே இன்று கலைக்கட்டியுள்ளது.

’வலுவான எதிர்கட்சி ஜனநாயகத்திற்கு நல்லது’ - நடிகர் ரஜினிகாந்த்!

’நடிகர் ரஜினிகாந்த்

Follow Us On

நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்ற ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தப்போது, இந்த தேர்தலில் வலுவான எதிர்க்கட்சியையும் மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இது ஆரோக்கியமான ஜனநாயகத்தை உருவாக்கும் என்றும் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 4-ம் தேதி நாடு முழுவதும் எண்ணப்பட்டது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை வென்று ஆட்சி அமைக்க தகுதிப் பெற்றது. இதனால் பாரதிய ஜனதா கட்சி மூன்றாவது முறையாக இந்தியாவை ஆளப்போவது உறுதியானது. 3வது முறையாக நாட்டின் பிரதமராக மோடி இன்று இரவு 7.15 மணிக்கு பதவி ஏற்க உள்ளார். இதில், பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்க உள்ளார். நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவுக்கு பிறகு தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் பதவி ஏற்பவர் என்று பெருமையை மோடி பெறுகிறார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொள்ள உள்ளனர். மோடியின் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க 7000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு அண்டை நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்துக் கட்சி தலைவர்களும், முக்கிய பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதால் டெல்லியே இன்று கலைக்கட்டியுள்ளது.

Also read… பிரேம்ஜி கல்யாணம்.. பொண்ணு யார் தெரியுமா, என்ன வேலை பாக்குறாங்க? விவரம்

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று மாலை நடைபெற உள்ள பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க உள்ளார்.  இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமான மூலமாக டெல்லி புறப்பட்டு சென்றார்.  முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் இன்று மாலை நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.  நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கவுள்ளது மிகப்பெரிய சாதனையாகும். அவருக்கு நல்வாழ்த்துக்கள். இந்த தேர்தலில் வலுவான எதிர்க்கட்சியையும் மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இது ஆரோக்கியமான ஜனநாயகத்தை உருவாக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்
இந்த குழந்தை பிரபல சினிமா குடும்பத்திற்கு மருமகள் ஆக போறாங்க...
கல்லீரலை சுத்தப்படுத்த இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
சியா விதையில் இவ்வளவு ஆபத்துகள் உள்ளதா?
Exit mobile version