5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

எம்.ஜி.ஆர் குறித்து அன்றே கணித்தார் ஜானகி… நூற்றாண்டு விழாவில் ரஜினி சொன்ன சுவாரஸ்ய தகவல்!

இந்த நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கும் அழைப்பு சென்றுள்ள நிலையில் அவர் நேரில் வர முடியாத காரணத்தால் வீடியோ மூலம் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அந்த வீடியோவை நிகழ்ச்சியின் மேடையில் ஒளிபரப்பியுள்ளனர்.

எம்.ஜி.ஆர் குறித்து அன்றே கணித்தார் ஜானகி… நூற்றாண்டு விழாவில் ரஜினி சொன்ன சுவாரஸ்ய தகவல்!
ரஜினி
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 24 Nov 2024 17:01 PM

சென்னையில் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா நடைப்பெற்ற நிலையில் இதில் மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜானகி குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது. தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், முன்னாள் முதல்வர் மறைந்த எம்ஜிஆரின் மனைவியுமானவர் மறந்த ஜானகி ராமச்சந்திரன். ஜானகி ராமசந்திரனின் நூற்றாண்டு விழா இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜானகி ராமச்சந்திரன் அவர்களுடன் சினிமா துறையில் பயணித்த நடிகை வெண்ணீராடை நிர்மலா, நடிகை ராஜ ஶ்ரீ, குட்டி பத்மினி, சச்சு உள்ளிட்டோருக்கு எடப்பாடி பழனிச்சாமி பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கினார்

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் எம்ஜிஆர், ஜானகி, ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவப்படங்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து ஜானகி அம்மாளின் முழு உருவப் படத்தை திறந்து வைத்த அவர் நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டார். அதனை எம்ஜிஆர் – ஜானகி தம்பதியின் வளர்ப்பு மகளான சுதா பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கும் அழைப்பு சென்றுள்ள நிலையில் அவர் நேரில் வர முடியாத காரணத்தால் வீடியோ மூலம் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அந்த வீடியோவை நிகழ்ச்சியின் மேடையில் ஒளிபரப்பியுள்ளனர்.

அதில் ரஜினிகாந்த் பேசியதாவது, ஜானகி அம்மாவும் எம்.ஜி.ஆர்., சாரும் சேர்ந்து நடித்த முதல் படம் ‘மருதநாட்டு இளவரசி’. 1940களின் இறுதியில் அந்தப் படம் வந்தது. அந்த காலகட்டத்தில் ஜானகி அம்மா மிகப்பெரிய நட்சத்திரம், உச்ச நட்சத்திரம் அவர். எம்.ஜி.ஆர் சாருக்கு அப்போதான் 2 அல்லது மூன்றாவது படம். அப்போதான் அவர் ஹீரோ அந்தஸ்திற்கு வருகிறார்.

Also read… நான் அவரை அவ்வளவு காதலிக்கிறேன்… ரகுமானை தவறாக பேசாதீர்கள் – சாயிரா பானு

அந்த காலக்கட்டத்திலேயே எம்.ஜி.ஆர் சாரைப் பற்றி இவர் சாதாரண மனிதர் இல்லை, மாமனிதர். ஒருநாள் மிகப்பெரிய நடிகராக வருவார் என்பதை கணித்து உச்சத்தில் இருந்த தனது திரை வாழ்க்கையை துறந்து ஜானகி அம்மா எம்.ஜி.ஆரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். கடைசி வரைக்கும் அவரை அவ்வளவு சந்தோஷமா பாதுகாப்பா பாத்துகிட்டாங்க.

எல்லாருக்கும் தெரியும், எம்.ஜி.ஆர் சாரோட ராமாபுரம் வீட்டிற்கு யார் எந்த நேரத்தில் போனாலும் சாப்பாடு கிடைக்கு. ஒரு நாளைக்கு 200 பேர், 300 பேர் சர்வ சாதாரணமா சாப்டுவாங்க அங்க. சும்மா ஒரு சாம்பார் சாதம் தயிர் சாதம் அப்டினு இல்லாம ஒரு கல்யாண விருந்து மாதிரி சைவம், அசைவம் என எப்போ போனாலும் இருக்கும்.

Also read… சிவனும் சக்தியும் சேர்ந்தா மாசுடா… இணையத்தை தெரிக்கவிடும் சிம்பு – தனுஷ் போட்டோஸ்!

அந்த விசயம் எல்லாம் ஜானகி அம்மா மேற்பார்வையில தான் நடக்கும். சமையலுக்கு தேவையான பொருட்கள் வாங்குறதுல இருந்து சாப்பாடு பரிமாறுவது வரைக்கும் எல்லாம் ஜானகி அம்மாதான். அத எம்.ஜி.ஆர் சாரே ஒரு இடத்தில சொல்லி இருப்பார். அந்த மாதிரி அவ்வளவு ஆதரவாக இருந்தவர் ஜானகி அம்மா.

இரட்டை இலை சின்னம் அதிமுக-வின் பிரம்மாஸ்திரம் என்று கூறிய ரஜினிகாந்த், அதிமுக இரண்டு அணியாகப் பிரிந்து சின்னம் முடக்கப்பட்டது. அப்போது கட்சிப் பதவியை விட்டுக் கொடுத்தவர் ஜானகி அம்மா. ஜானகி அம்மா தொண்டர்களின் சந்தோசம் தான் முக்கியம் என்றும் ரஜினிகாந்த் புகந்து பேசினார். மேலும் படங்களில் தான் புகைப்பிடிக்கும் காட்சியைத் தவிர்க்க வேண்டும் என எம்ஜிஆர் அறிவுறுத்தியதாக ஜானகி அம்மாள் கூறியதாகவும் ரஜினிகாந்த்  அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

Latest News