வேட்டையன் படத்தில் ஃபகத் பாசில் நடிப்பு குறித்து பேசிய ரஜினி! - Tamil News | Actor Rajinikanth talks about Fahadh Faasil acting in vettaiyan movie | TV9 Tamil

வேட்டையன் படத்தில் ஃபகத் பாசில் நடிப்பு குறித்து பேசிய ரஜினி!

வேட்டையன் படத்தில் ஃபகத் பாசில் நடிப்பு குறித்து பேசிய ரஜினி!

ஃபகத் பாசில், ரஜினி

Published: 

08 Oct 2024 17:19 PM

வேட்டையன் படத்தில் தன்னுடன் நடித்த நடிகர் ஃபகத் பாசிலின் நடிப்பு குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது தற்போது கோலிவுட்டில் வைரலாகி வருகின்றது. ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். கூட்டத்தில் ஒருத்தன், ஜெய் பீம் ஆகிய படங்களை இயக்கிய ஞானவேல் இப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. தென் மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு மும்பை ராஜஸ்தான் பகுதிகளில் நடைபெற்றதை தொடர்ந்து படம் தற்போது அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஆந்திரா மாநிலம், கடப்பாவில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு சூட்டிங்கினை முடித்துவிட்டு, இமயமலைக்கு ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பின்னர் பத்ரிநாத், கேதார்நாத் உள்பட பல்வேறு இடங்களுக்கு அவர் சென்று வந்தார். முன்னதாக மஞ்சுவாரியர், அபிராமி, துஷாராவைத் தொடர்ந்து ரித்திகா சிங் உட்படப் பலரும் டப்பிங் பேசிவிட்டனர். ரஜினி, கூலி படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால், அதில் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் வேட்டையன் படத்திற்கு டப்பிங் பேசுவார் என கூறப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் டப்பிங் பணியை முடித்தார்.

அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் போலி என்கவுண்டருக்கு எதிரான கதைக்களம் கையாளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் கல்விக் கொள்கைக்கு ஆதரவான பல கருத்துக்களும் இந்த படத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் ரஜினிகாந்த் போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த், வேட்டையன் திரைப்படத்தில் இஸ்லாமியராக நடிப்பதாக கூறப்படுகிறது. ரஜினி, ஏற்கனவே லால் சலாம் படத்தில் இஸ்லாமியராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

படம் பற்றிய அறிவிப்பு வெளியான சில மாதங்களில் படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. அதனைப் பார்த்தபோதே இந்தப் படம் கமர்ஷியல் ரீதியாகத்தான் உருவாகுமோ என்று சந்தேகத்தை ரசிகர்கள் எழுப்பினார்கள். படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் வேட்டையன் டீசரும் வெளியிடப்பட்டது. அதனைப் பார்க்கையில் இந்தப் படம் முழுக்க முழுக்க ஞானவேலுவின் ஸ்டைலில் இல்லாமல் ரஜினிக்காக கமர்ஷியல் பேக்கேஜாக உருவாகியிருப்பது உறுதியானது.

Also read… சூர்யா படத்தை இயக்கும் ஆர்.ஜே.பாலாஜி? வைரலாகும் தகவல்

இந்த நிலையில் கடந்த மாதம் 20-ம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைப்பெற்றது. இந்த விழாவில் ரஜினி போசியது கோலிவுட்டில் தற்போது வைரலாகி வருகின்றது. அவர் பேசியதாவது, “சகுனிகள் இருக்கிற இந்த சமுதாயத்தில் நல்லவனா இருந்தா பிழைக்க முடியாதுங்க. கொஞ்சம்ன் சாணக்கியத்தனமும், சாமர்த்தியமும் வேணும். உங்ககிட்ட சாணக்கியத்தனமும் இருக்கு, சாமர்த்தியமும் இருக்கு என்று இயக்குநர் ஞானவேல் குறித்து பேசியுள்ளார்.

Also read… நான் மதம் மாறினேன் என்று உங்களுக்கு தெரியுமா? நடிகை பிரியாமணி காட்டம்

அந்த இசை வெளியீட்டு விழாவில் தன்னுடன் நடித்த நடிகர்கள் குறித்தும் அவர்களது நடிப்பு குறித்தும் நடிகர் ரஜினி பேசியது தற்போது வைரலாகி வருகின்றது. ஃபகத் பாசில் இப்படத்தில் ஒரு சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்தை பற்றி படக்குழு என்னிடம் சொன்னபோது, இந்த கதாபாத்திரத்திற்கு யாரை நடிக்க வைப்பார்கள் என்று சிந்தித்தேன். அப்போது இயக்குனர், ‘இதற்காக அதிகம் யோசிக்க தேவையில்லை, இந்த கதாபாத்திரத்திற்கு ஃபகத் பாசில் மட்டுமே சரியாக இருப்பார்’ என்றார்.  இயக்குனர் கூறியது போல் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் ஃபகத் பாசில் என்று நடிகர் ரஜினிகாந்த் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

மன அழுத்தம் குறைய இதை செய்யுங்கள்!
இரவு உணவை தாமதமாக சாப்பிட்டால் என்னாகும்?
செரிமானத்தை மேம்படுத்த வேண்டுமா ? அப்போ இதை பாலோ பண்ணுங்க
மோகன் லால் உடன் இருக்கும் இந்த சிறுமி யார்?
Exit mobile version