5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

வேட்டையன் திரைப்படம் எப்படி இருக்கு..! டுவிட்டர் விமர்சனம் இதோ..!

Vettaiyan : தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ஜெயிலர், லால் சலாம் படங்களைத் தொடர்ந்து அடுத்து நடித்துள்ள புதிய படம் ‘வேட்டையன்’. தமிழ் திரைப்படங்களில் ஜெய் பீம் படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இயக்குனர் ஞானவேல் இந்த ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினியுடன் அமிதாப் பச்சன், டக்குபதி ராணா, மஞ்சு வாரியர், ஃபஹத் ஃபாசில், ரித்திகா சிங், துசாரா விஜயன் போன்ற பிரபல நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் சுவாரஸ்யமாக இருந்ததால், படம் வெளியாவதற்கு முன்பே பாசிட்டிவ் வைபை உருவாக்கியது.

வேட்டையன் திரைப்படம் எப்படி இருக்கு..! டுவிட்டர் விமர்சனம் இதோ..!
வேட்டையன்
barath-murugantv9-com
Barath Murugan | Published: 10 Oct 2024 14:55 PM

வேட்டையன் : ரஜினிகாந்த்தின் ஜெயிலர், லால் சலாம் படங்களைத் தொடர்ந்து அடுத்து நடித்துள்ள புதிய படம் ‘வேட்டையன்”. இப்படத்தை ஜெய் பீம் படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஞானவேல் இந்த ஆக்‌ஷன் த்ரில்லரை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் லைகா தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ராணா, மஞ்சு வாரியர், ஃபஹத் ஃபாசில், ரித்திகா சிங், துசாரா விஜயன் போன்ற நட்சத்திர நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். டீசர் மற்றும் ட்ரெய்லர் சுவாரஸ்யமாக இருந்ததால், படம் வெளியாவதற்கு முன்பே நல்ல வரவேற்பை  உருவாக்கியது.

இந்த திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் அனிரூத் இசையமைப்பில் வெளியான எல்லா பாடல்களும் மக்கள் மத்தியில் பிரபலமாகியது. அதோடு இந்த திரைப்படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் ரஜினியின் ஸ்டெப்ஸ் போட்ட ‘மனசிலாயோ’ பாடல் இன்னும் ட்ரெண்டிங்கில் உள்ளது. வியாழன் (அக்டோபர் 10) இன்று வேட்டையன் திரைப்படம் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பல இடங்களில் அதிகாலைக் காட்சிகளும், வெளிநாட்டுக் காட்சிகளும் வெளியிட்ட நிலையில் ரஜினியின் வேட்டையன் திரைப்படத்தைப் பார்த்த பலரும் ட்விட்டரில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க :Vettaiyan Review: ரஜினியின் வேட்டையன் மிரட்டலா? சொதப்பலா? – விமர்சனம் இதோ!

 

திரை விமர்சனம் :

வேட்டையன் படத்தில் ரஜினியின் மாஸ் எண்ட்ரி நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும், அமிதாப், ராணா, ஃபஹத் ஃபாசில் ஆகியோரின் கதாபாத்திரங்களும் சுவாரஸ்யமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படமானது சிறப்பான மக்களை ஈர்க்கும் திரைப்படமாகும் என மஞ்சு வாரியர் பாராட்டியுள்ளார். இந்த திரைப்படத்தின் விமர்சனங்கள் தனது பாடல்கள் மூலம் படங்களின் ஹைப்பை உயர்த்தி வரும் அனிருத், ‘வேட்டையன்’ படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இதையும் படிங்க :Vettaiyan Movie Release: ரஜினியின் வேட்டையன் படத்தை ஏன் பார்க்க வேண்டும்? – இதைப் படிங்க!

இந்த வரிசையில் தான் அனிருத் தனது பிஜிஎம்மை சிறப்பாக செய்துள்ளதாக கமெண்ட்கள் வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் வெளியான படங்களில் சிறந்த முதல் பாதியில் ஒன்றான, சமூக செய்தியுடன் கூடிய குற்ற விசாரணை திரில்லர் கதையான வேட்டையன் இயக்குநர் ஞானவேல் அற்புதமாக இயக்கியுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில் ரஜினியின் படத்திற்கு எல்லா இடங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த திரைப்படம் கண்டிப்பாக வெற்றியைத் தரும் என்றும் மற்றொருபக்கம் இந்த திரைப்படம் ஹைப் ஏற்றும் விதத்தில் ஒன்றும் இல்லை என்றும் தங்களது கருத்துக்களை ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க :Vettaiyan: முன்பதிவில் சாதனை.. அசால்ட்டாக வேட்டையாடும் ரஜினியின் வேட்டையன்!

வேட்டையன் திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ..!

 

 

இதையும் படிங்க :“ஒருத்தர் நிஜ வாழ்க்கையில் இவ்ளோ லவ் பண்ண முடியுமா”- நடிகை சாய் பல்லவி..!

 

Latest News