5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

’கூலி’ படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு தயாராகும் ரஜினி… அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அப்டேட் இதோ!

இளம் நடிகர்களுக்கு போட்டியாக தொடர்ந்து படங்களை வெளியிட்டு வருகிறார் ரஜினி. சினிமா துறையில் 50 வருடங்களை கடந்தும் நடிகர் ரஜினி தனது மாஸ் குறையாமல் இளம் நடிகர்களுடன் போட்டிப் போட்டு தனது சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று நடித்து வருகிறார். 70 வயதை கடந்தும் தனது நடிப்பிற்கு ஓய்வு கொடுக்காமல் நடித்து வருகிறார் ரஜினி.

’கூலி’ படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு தயாராகும் ரஜினி… அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அப்டேட் இதோ!
கூலி
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Oct 2024 13:13 PM

நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் ‘கூலி’ பட படப்பிடிப்பில் இணையவுள்ளதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170 வது திரைப்படமாக கடந்த 10-ம் தேதி வெளியான படம் வேட்டையன். இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியானது. தவறு செய்தால், என்கவுண்டர் தான் ஒரே தீர்ப்பு என்று நினைக்கும் ரஜினி, என்கவுண்டரே இருக்க கூடாது என்று போராடும் அமிதாப் இருவருக்கும் நடக்கும் மோதல் படத்தின் கதை.

துஷாரா விஜயன் சென்னையில் ஒரு வேலை வருகிறார். அப்படி வந்த இடத்தில், அசல் கோளாரால் கொலை செய்யப்பட, ரஜினி, அசல் கோளாரை என்கவுண்டர் செய்யப்படுகிறார். பின் அவன் நல்லவன் என்பது தெரியவர, துஷாராவை கொன்றது யார் என்ற தேடுதலை ரஜினி தொடங்க அதன் பின் என்ன ஆனது என்பது தான் படத்தின் கதை.

இந்தப் படத்தை தொடர்ந்து லோகேஷ் உடன் கூட்டணி வைத்த ரஜினி தனது 171-வது படத்தில் விறுவிறுப்பாக நடித்து வந்தார். தளபதி விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’ மற்றும் ‘லியோ’ என இரண்டு ஹிட் படங்களையும், உலகநாயகன் கமல்ஹாசனுக்கு ‘விக்ரம்’ என்கிற பிளாக்பஸ்டர் வெற்றி படத்தையும் இயக்கிய லோகேஷ் கனகராஜ், முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது.

Also read… திருமணத்திற்கு தயாரான நடிகை ரம்யா பாண்டியன்… மாப்பிள்ளை யார் தெரியுமா?

இளம் நடிகர்களுக்கு போட்டியாக தொடர்ந்து படங்களை வெளியிட்டு வருகிறார் ரஜினி. சினிமா துறையில் 50 வருடங்களை கடந்தும் நடிகர் ரஜினி தனது மாஸ் குறையாமல் இளம் நடிகர்களுடன் போட்டிப் போட்டு தனது சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று நடித்து வருகிறார். 70 வயதை கடந்தும் தனது நடிப்பிற்கு ஓய்வு கொடுக்காமல் நடித்து வருகிறார் ரஜினி.

அன்பறிவு ஸ்டண்ட் இயக்குநர்களாக பணியாற்றுகின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்தப் படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்தது.

Also read… Bigg Boss Tamil Season 8: விறுவிறுப்பாக நகரும் பிக்பாஸ்… இந்த வார நாமினேஷனில் இடம் பிடித்தவர்கள் யார்?

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரஜினி உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வேட்டையன் படத்தை தொடர்ந்து இடைவெளி இல்லாமல் லோகேஷின் கூலி படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார் ரஜினிகாந்த். இப்படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வந்தது. இதில் மழையில் நனைந்தபடி ரஜினி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும், அதனால் அவருக்கு உடல் நலக்குறைப்பாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவருக்கு இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் வீக்கம் இருந்தது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சையின்றி செய்யப்படும் ஸ்டன்ட் கருவி பொருத்தப்பட்டது. சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ரஜினி சிறு நாட்களுக்கு பிறகு தற்போது மீண்டும் கூலி படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி இன்றுமுதல் சென்னையில் நடக்க உள்ள கூலி படப்பிடிப்பில் ரஜினிகாந்த் இணையுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Latest News