Actor Vijay : விஜய் கட்சி குறித்து பேசிய ரஜினிகாந்த்.. என்ன சொன்னார் தெரியுமா? - Tamil News | Actor Rajinikanth wishes to Vijays political party | TV9 Tamil

Actor Vijay : விஜய் கட்சி குறித்து பேசிய ரஜினிகாந்த்.. என்ன சொன்னார் தெரியுமா?

Published: 

26 Aug 2024 12:14 PM

கடந்த வாரம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் சிவப்பு, மஞ்சள் நிறத்துடன் வெற்றியை குறிக்கும் வாகைப் பூ நடுவில் இடம் பெற்றிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வைத்ததுடன் கொடிக் கம்பத்திலும் விஜய் கொடி ஏற்றி வைத்தார். இதற்கு முன்னதாக, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் தொண்டர்கள், நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

Actor Vijay : விஜய் கட்சி குறித்து பேசிய ரஜினிகாந்த்.. என்ன சொன்னார் தெரியுமா?

விஜய், ரஜினி

Follow Us On

நடிகர் ரஜினிகாந்த் விஜய் கட்சி தொடங்கியது குறித்து பேசியது தற்போது சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது. விஜய் அரசியலில் களமிறங்க உள்ளார் என்ற தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்த நிலையில், அவர் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தனது கட்சி பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவர் தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம்(Tamizhaga Vetri kazhagam) என்று அறிவித்தார். கட்சி பெயரில் எழுதுப் பிழை இருப்பதாக பலர் கருத்து தெரிவித்ததும் கட்சியின் பெயரினை, தமிழக வெற்றிக் கழகம் என மாற்றி அறிவித்தார்.  தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். வரும் செப்டம்பர் 5ம் தேதி இந்தப் படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. அடுத்ததாக தளபதி 69 படத்தில் ஹெச் வினோத்துடன் விஜய் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த படங்களுடன் விஜய் சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளார். முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதால் படங்களில் நடிப்பதை நிறுத்துவதாகவும் விஜய் தரப்பில் இருந்து தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வந்தது. விஜய் கட்சி ஆரம்பித்த  கடந்த 4 மாதங்களில் தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளுக்கு தனது எக்ஸ் தளத்தின் மூலம் அறிக்கைகளை வெளியிட்டு வந்தார். தொடர்ந்து அறிக்கைகள் மூலமாக மக்களிடம் பேசி வரும் விஜய் களத்தில் இருந்து வேலை செய்ய வேண்டும். அறிக்கையில் பேசுபவன் தலைவன் அல்ல, களத்தில் இருந்து மக்களுக்காக பேசுபவனே உண்மையான தலைவன் என்றும் பலர் விமர்சனம் செய்து வந்தனர். அதனை தவிடுபொடி ஆக்கும் விதமாக விஜய் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அறிந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி தன் மீது வைத்த விமர்சனத்திற்கு பதிலளித்தார்.

2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அடுத்த சட்டசபைத் தேர்தல் நடைபெறும் 2026ம் ஆண்டு தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என்றும் அறிவித்திருந்தார்.  அதனைத் தொடர்ந்து கட்சியில் உறுப்பினர் சேர்க்கை, கட்சி செயல்பாடுகள் என தொடர்ந்து வேலை செய்து வருகிறார் விஜய்.

அந்த வகையில் கடந்த வாரம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் சிவப்பு, மஞ்சள் நிறத்துடன் வெற்றியை குறிக்கும் வாகைப் பூ நடுவில் இடம் பெற்றிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வைத்ததுடன் கொடிக் கம்பத்திலும் விஜய் கொடி ஏற்றி வைத்தார். இதற்கு முன்னதாக, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் தொண்டர்கள், நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அதன்படி, “நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.

Also read… தள்ளிப்போகிறதா சூர்யாவின் ‘கங்குவா’ படம்?

நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையான்மை மீதும் நம்பிக்கை வைத்து அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதிமொழி ஏற்றனர்.

இந்த நிலையில் இன்று விமான நிலையத்திற்கு வந்த நடிகர் ரஜினியிடம் விஜயின் கட்சி கொடி மற்றும் கட்சி பாடல் அறிமுகத்தைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய ரஜினி அவருக்கு எனது வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்ற எளிய வழிகள் இதோ!
கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையா பிறக்குமா?
உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
பல் வலியிலிருந்து நிவாரணம் பெற என்ன செய்யலாம்..?
Exit mobile version