5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Rajinikanth: மதுரையில் பிறந்த மதுரை வீரன் கேப்டன் விஜயகாந்த்… பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதற்கு ரஜினி வாழ்த்து!

Rajinikanth wishing Vijayakanth: 2ம் கட்ட விருதுகள் வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் தமிழகத்தை சேர்ந்த 5 பேருக்கு, விருதுகளை வழங்கி கௌரவித்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. இந்த விழாவில் விஜயகாந்த் சார்பில் கலந்து கொண்ட அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் குடியரசு தலைவரிடம் விருதை பெற்றுக் கொண்டார்.

Rajinikanth: மதுரையில் பிறந்த மதுரை வீரன் கேப்டன் விஜயகாந்த்… பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதற்கு ரஜினி வாழ்த்து!
குடியரசு தலைவருடன் பிரேமலதா விஜயகாந்த், ரஜினி
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 16 May 2024 14:02 PM

கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம், விளையாட்டு, சமூகப்பணி, பொறியியல், பொது விவகாரங்கள், வர்த்தகம், தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான சேவை மற்றும் சாதனைகளுக்காக மத்திய அரசின் சார்பில் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் 132 பேருக்கு அறிவிக்கப்பட்டன. கடந்த ஜனவரியில் விருது பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, 2024-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட்டன. அதில், மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஏப்ரல் 22-ம் தேதி முதல்கட்டமாக முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம், நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, பாடகி உஷா உதூப் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். இந்த நிலையில், 2ம் கட்ட விருதுகள் வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் தமிழகத்தை சேர்ந்த 5 பேருக்கு, விருதுகளை வழங்கி கௌரவித்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. இந்த விழாவில் விஜயகாந்த் சார்பில் கலந்து கொண்ட அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் குடியரசு தலைவரிடம் விருதை பெற்றுக் கொண்டார். இதற்கு நடிகர்கள் சத்யராஜ் மற்றும் பிரபு ஆகியோர் தங்களது வாழ்த்துகளை அப்போதே பதிவு செய்தனர். அவர்களை தொடர்ந்து திரைப் பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் அதற்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Also read… Mathew Thomas: விஜயின் ரீல் மகன் வீட்டில் நடந்த சோகம்… அதிர்ச்சியில் திரையுலகினர்!

இது குறித்து பேசிய நடிகர் “என்னுடைய அருமை நண்பர் விஜயகாந்த் அவர்களுக்கு பத்மபூஷன் விருது கொடுத்து கவுரவித்ததில் நமக்கெல்லாம் மிகவும் மகிழ்ச்சி. அதுமட்டுமில்லாமல் பத்ம விருதுகள் 2024 புத்தகத்தில் அவருடைய வரலாற்றை பதிவிட்டிருக்கிறார்கள். அது அவருடைய பெயருக்கு இன்னும் பெருமை சேர்க்கிறது.

விஜயகாந்த் நம்மோடு இல்லை என்பதை இன்னும் என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. திடீரென்று தோன்றி பல சாதனைகள் செய்து அப்படியே மறைந்துவிட்டார். இனிமேல் விஜயகாந்த் போன்ற ஒருவரை பார்க்கவே முடியாது. அவரை மிகவும் மிஸ் செய்கிறேன். மதுரையில் பிறந்த மதுரை வீரன் கேப்டன் விஜயகாந்த்” இவ்வாறு ரஜினிகாந்த அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

Latest News