”வேட்டையாடவே வெறியோட சுத்துறான்”… வேட்டையன் ரிலீஸ் தேதி இதோ - Tamil News | Actor Rajinikanths Vettaiyan Movie Release Date Announced October 10th | TV9 Tamil

”வேட்டையாடவே வெறியோட சுத்துறான்”… வேட்டையன் ரிலீஸ் தேதி இதோ

Published: 

19 Aug 2024 10:47 AM

Vettaiyan Movie Update: அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் போலி என்கவுண்டருக்கு எதிரான கதைக்களம் கையாளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் கல்விக் கொள்கைக்கு ஆதரவான பல கருத்துக்களும் இந்த படத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் ரஜினிகாந்த் போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த், வேட்டையன் திரைப்படத்தில் இஸ்லாமியராக நடிப்பதாக கூறப்படுகிறது. ரஜினி, ஏற்கனவே லால் சலாம் படத்தில் இஸ்லாமியராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

”வேட்டையாடவே வெறியோட சுத்துறான்”... வேட்டையன் ரிலீஸ் தேதி இதோ

வேட்டையன்

Follow Us On

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேட்டையன்’ படம் வருகின்ற ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். கூட்டத்தில் ஒருத்தன், ஜெய் பீம் ஆகிய படங்களை இயக்கிய ஞானவேல் இப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. தென் மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு மும்பை ராஜஸ்தான் பகுதிகளில் நடைபெற்றதை தொடர்ந்து தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு உறுதி செய்துள்ளது.

அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் போலி என்கவுண்டருக்கு எதிரான கதைக்களம் கையாளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் கல்விக் கொள்கைக்கு ஆதரவான பல கருத்துக்களும் இந்த படத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் ரஜினிகாந்த் போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த், வேட்டையன் திரைப்படத்தில் இஸ்லாமியராக நடிப்பதாக கூறப்படுகிறது. ரஜினி, ஏற்கனவே லால் சலாம் படத்தில் இஸ்லாமியராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வேட்டையன் திரைப்படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் இன்று ஒரு அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, வரும் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி இப்படம் உலகெங்கிலும் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படம், தமிழ் மட்டுமன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் வெளியாகிறது.

Also read… Cinema Rewind: விக்ரம் வேதா படத்தில் டயலாக் ரைட்டர் ஆனது எப்படி? மணிகண்டன் சொன்ன விசயம்

முன்னதாக சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கங்குவா மற்றும் வேட்டையன் ஆகிய இரு படங்களும் ஒரே தேதியில் தற்போது மோதிக்கொள்ள உள்ளது உறுதியாகியுள்ளது. இந்த வருடத்தின் தீபாவளி, வரும் அக்டோபர் மாதம் கொண்டாடப்படுகிறது. இதைக்குறிவைத்து பல தமிழ் படங்கள் வெளியாக இருக்கின்றன. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் திரைப்படமும் அக்டோபர் மாதத்தில்தான் வெளிவருகிறது.

நாம் அதிகமாக சர்க்கரை எடுத்துக்கொள்வதற்கான அறிகுறிகள்..!
நெல்லிக்கனி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?
குழந்தைகள் அப்பாக்களை அதிகம் விரும்புவது ஏன் தெரியுமா?
உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்ற எளிய வழிகள் இதோ!
Exit mobile version