5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

”இந்த உலகத்துல யோகியவானா இருந்தா பிழைக்க முடியாது” – ரஜினி!

Rajinikanth: ரஜினி பட ஆடியோ வெளியீட்டு விழா என்றாலே அவர் சொல்லும் குட்டி கதைக்காக ரசிகர்கள் காத்திருப்பதுண்டு. அந்தவகையில் வேட்டையன் இசை வெளியீட்டு விழாவிலும் ரஜினிகாந்த் ஒரு குட்டி கதை சொல்லியிருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

”இந்த உலகத்துல யோகியவானா இருந்தா பிழைக்க முடியாது” – ரஜினி!
ரஜினி
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 25 Sep 2024 09:19 AM

”சகுனிங்களா இருக்க இந்த உலகத்துல யோகியவானா இருந்தா பிழைக்க முடியாது” என்று வேட்டையன் பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் த.செ.ஞானவேல் குறித்து நடிகர் ரஜினிகாந்த பேசியது தீயாய் பரவி வருகின்றது. ரஜினிகாந்தின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும், ‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் களைகட்ட துவங்கியுள்ளது. இந்தச் சூழலில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் ரஜினிகாந்த், ஞானவேல் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். பொதுவாக இசை வெளியீட்டு விழாவில் வாழ்க்கை கதை என ரஜினி இதுவரை கூறிய கதைகள் ஹிட் அடித்தது. இந்த முறையும் கதை கூறியுள்ளார். மேலும் இயக்குநர் குறித்தும் படத்தில் பணியாற்றியவர்கள் குறித்தும் ரஜினி பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். கூட்டத்தில் ஒருத்தன், ஜெய் பீம் ஆகிய படங்களை இயக்கிய ஞானவேல் இப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. தென் மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு மும்பை ராஜஸ்தான் பகுதிகளில் நடைபெற்றதை தொடர்ந்து தற்போது வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.

அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் போலி என்கவுண்டருக்கு எதிரான கதைக்களம் கையாளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் கல்விக் கொள்கைக்கு ஆதரவான பல கருத்துக்களும் இந்த படத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் ரஜினிகாந்த் போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வேட்டையன் திரைப்படம், வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைப்பெற்றது. இந்த விழாவில் ரஜினி போசியது கோலிவுட்டில் தற்போது வைரலாகி வருகின்றது. அவர் பேசியதாவது, “சகுனிகள் இருக்கிற இந்த சமுதாயத்தில் நல்லவனா இருந்தா பிழைக்க முடியாதுங்க. கொஞ்சம்ன் சாணக்கியத்தனமும், சாமர்த்தியமும் வேணும். உங்ககிட்ட சாணக்கியத்தனமும் இருக்கு, சாமர்த்தியமும் இருக்கு என்று இயக்குநர் ஞானவேல் குறித்து பேசியுள்ளார்.

ரஜினி பட ஆடியோ வெளியீட்டு விழா என்றாலே அவர் சொல்லும் குட்டி கதைக்காக ரசிகர்கள் காத்திருப்பதுண்டு. அந்தவகையில் வேட்டையன் இசை வெளியீட்டு விழாவிலும் ரஜினிகாந்த் ஒரு குட்டி கதை சொல்லியிருக்கிறார். விழாவில் பேசிய அவர், “வேட்டையன் பட ஷூட்டிங் தொடங்க இரண்டு நாட்கள் இருக்கும். அப்போது ஞானவேல் என்னிடம் வந்து, சார் உங்களிடம் பேச வேண்டும் என்று சொன்னார். என்ன இப்போ வந்து பேச வேண்டும் என்கிறாரே என நினைத்துக்கொண்டு; சொல்லுங்க சார் என்றேன். உடனே அவர், சார் நீங்கள் நடித்த தளபதி படத்தை 17 முறை பார்த்திருக்கிறேன். புவனா ஒரு கேள்விக்குறி, ஆறிலிருந்து அறுபதுவரை படங்கள் எல்லாம் எனது ஃபேவரைட். நீங்கள் எவ்வளவு பெரிய நடிகர் தெரியுமா சார்; அந்த மாதிரி ஒரு படம் செய்ய வேண்டும் என்று சொன்னார். உடனே நான் அவரிடம் ஒரு கதை சொன்னேன்.

அதாவது, உத்திரகாசில (ஹிமாலயாஸ்) டோபி ஒருத்தர் இருந்தார். அவர் துணியை துவைக்க வேண்டுமென்றால் கீழே ஓடும் ஆறுக்குத்தான் வர வேண்டும். அவரிடம் இருக்கும் கழுதையில் துணி மூட்டையை வைத்துக்கொண்டு கீழே வந்து துணி துவைப்பார். அப்படி ஒருநாள் வந்து துணியை துவைத்துவிட்டு பார்க்கும்போது கழுதையை காணவில்லை. அந்த கழுதைதான் அவருக்கு உயிர், மூச்சு எல்லாமே. உடனே அவர் ஒருமாதிரி விரக்தி ஆகிட்டார். ஒருகட்டத்தில் மரத்தடியில் அமர்ந்திட்டார். உடனே அந்த வழியாக வந்தவர்கள் எல்லாம் இந்த டோபியை பார்த்து சாமியார்னு நினைத்து அவரிடம் பலன்கள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அவருக்கென்று சிஷ்யர்களும் சேர ஆரம்பித்துவிட்டார்கள். இப்போ ஒரு நாள் கழுதை திரும்ப வந்துடுது. மறுபடியும் அவனுக்குப் பழசெல்லாம் ஞாபகம் வந்திருச்சு. உடனே அவரது சிஷயர்களோ, ஏங்க இப்படி பேசுறீங்க நீங்க ஒரு சாமியார் இப்படிலாம் பேசாதீங்கனு சொன்னாங்க. உடனே இவர், யோவ் நான் டோபியா. என் கழுதையை காணவில்லைனுதான் இப்படி ஆகிட்டேன். வெளியே சொன்னால் கதை கந்தலாகிடும் சொல்லாதீங்க என்று சொன்னார் என்றேன்.

இதை கேட்டுவிட்டு ஞானவேல் என்னிடம், ஏன் சார் இதை என்னிடம் சொல்றீங்க என்று கேட்டார். உடனே நான் அவரிடம், ‘சார் அந்த டோபியே நான்தான்’ என்றேன். தளபதில ஓகேயான ஷாட்டை மட்டும்தான் நீங்க பார்ப்பீங்க. அதுக்கு பின்னாடி எத்தனை டேக் போனுச்சுனு எனக்கு மட்டும்தான் தெரியும் என்று ரஜினி சொன்ன கதை அரங்கையே சிரிக்க வைத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து பேசிய ரஜினி மனக்கஷ்டத்துடன் ஒரு தகவலையும் பகிர்ந்து கொண்டார். ஒருவேளை, சிவாஜி கணேசன் உயிரோடு இருந்திருந்தால்… அமிதாப்பச்சன் கேரக்டரில் அவர் தான் நடித்திருக்க வேண்டியது என பேசும் போது அங்காரமே அதிரும் அளவுக்கு ரசிகர்கள் கை தட்டி வரவேற்றனர்.

தொடர்ந்து இசையமைப்பாளர் அனிருத் குறித்து ரஜினி பேசியதாவது, “அனிருத் எனக்கு குழந்தை மாதிரி..அவருடைய வீட்டிற்கு சென்று பார்த்தால் என்னுடையை 10 அடி போட்டோவை மாட்டி வைத்திருப்பார். இவ்வளவு அன்பை நான் எப்படி திரும்ப தர போகிறேன் என்று தெரியவில்லை” என்று பேசியிருக்கிறார். “அனிருத்தை மன்னன் படத்தின் ஷூட்டிங்கின் போது அனிருத்தை முதன் முதலாக பார்த்தேன். அப்போது அவர் சிம்மாசனத்தில் அமர வைத்து, அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டேன். இப்போது இசையின் சிம்மாசனத்தில் அவர் அமர்ந்து கொண்டிருக்கிறார். என்று தெரிவித்துள்ளார்.

Latest News