வேட்டையன் படம் குறித்து நடிகர் ரக்சன் பகிர்ந்த நெகிழ்ச்சி பதிவு!
போலீஸ் என்கவுன்டருக்கு எதிராகவும், நீட் தேர்வு, கோச்சிங் சென்டர்களின் அராஜகத்தையும் கேள்வி எழுப்பியிருக்கிறது ரஜினியின் ‘வேட்டையன்’. படத்தின் கன்டென்ட் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், ரஜினிக்கான மாஸ் காட்சிகள் செயற்கையாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 10-ம் தேதி வெளியான வேட்டையன் படம் குறித்து நடிகர் ரக்சன் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த நடித்த படம் வேட்டையன். கூட்டத்தில் ஒருத்தன், ஜெய் பீம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் வெளியான இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. தவறு செய்தால், என்கவுண்டர் தான் ஒரே தீர்ப்பு என்று நினைக்கும் ரஜினி, என்கவுண்டரே இருக்க கூடாது என்று போராடும் அமிதாப் இருவருக்கும் நடக்கும் மோதல் படத்தின் கதை. துஷாரா விஜயன் சென்னையில் ஒரு வேலை வருகிறார்.
அப்படி வந்த இடத்தில், அசல் கோளாரால் கொலை செய்யப்பட, ரஜினி, அசல் கோளாரை என்கவுண்டர் செய்யப்படுகிறார். பின் அவன் நல்லவன் என்பது தெரியவர, துஷாராவை கொன்றது யார் என்ற தேடுதலை ரஜினி தொடங்க அதன் பின் என்ன ஆனது என்பது தான் படத்தின் கதை. போலீஸ் என்கவுன்டருக்கு எதிராகவும், நீட் தேர்வு, கோச்சிங் சென்டர்களின் அராஜகத்தையும் கேள்வி எழுப்பியிருக்கிறது ரஜினியின் ‘வேட்டையன்’. படத்தின் கன்டென்ட் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், ரஜினிக்கான மாஸ் காட்சிகள் செயற்கையாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.
வேட்டையன் படம் வெளியான முதல் நாளில் விஜயின் தி கோட் படத்தை விட குறைவான வசூலே பெற்றிருந்தது. விஜய் நடித்துள்ள தி கோட் படம் முதல் நாளில் ரூ. 25.55 கோடி வசூலித்து இருந்தது. அத்துடன் வழக்கமான ரஜினி படத்துக்கான ஓபனிங் வேட்டையன் படத்துக்கு இல்லை எனவும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையை குறி வைத்து வேட்டையன் திரைப்படம் ரிலீஸ் ஆன நிலையில் முதல் நான்கு நாட்கள் திரையரங்குகளில் நல்ல வசூல் வேட்டையை அந்த படம் பெற்றது. சுமார் 240 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாக தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த் வீடு திரும்பிய நிலையில் வேட்டையன் படத்தின் சக்சஸ் மீட்டில் சந்தித்த புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.
Also read… இணையத்தை கலக்கும் நடிகை ரம்யா நம்பீசனின் ரீசென்ட் போட்டோ
இந்நிலையில் படம் நான்காவது நாளில் இந்தியாவில் மட்டும் சுமார் 25 கோடிகள் வரை வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. அதேபோல் முதல் நாளில் படம் ரூபாய் 35 கோடிகள் வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகின்றது. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாலும், அடுத்து தீபாவளிக்கு படங்கள் வெளியாக உள்ள நிலையிலும், இது ரஜினி படத்தின் வசூலை பாதிக்கலாம் என திரை வர்த்தகர்கள் கணித்துள்ளனர்.
View this post on Instagram
இந்த நிலையில் படத்தில் நடித்த நடிகர்கள் தொடர்ந்து தங்களது அனுபவத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது படத்தில் நடித்த நடிகர் ரக்சன் தனது அனுபவம் குறித்து சமூக வலைதள பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “ரசிகனாக இருந்த ரக்சன் இப்போது குடும்பப் பையனாகிறான். தலைவர் ரஜினிகாந்த், மஞ்சுவாரியர், ஞானவேல் ஆகியோர் மிகவும் ஊக்கப்படுத்துபவர்காளாக உணர்கிறேன். உங்களின் அன்புக்கும், ஆதரவுக்கு நன்றி” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.