Actor Ram Charan: சபரிமலைக்கு மாலை.. தர்காவில் வழிபாடு.. ராம்சரண் சம்பவம்!
நடிகர் சிரஞ்சீவியின் மகனான ராம்சரண் ஆந்திர மாநிலம் கடப்பாவிலுள்ள புகழ்பெற்ற அமீன்பீர் பெரிய தர்காவில் நடைபெற்ற 80வது தேசிய முசைரா கஜல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வழிபாடு செய்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பே இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அழைப்பு விடுத்திருந்தார்.
நடிகர் ராம்சரண்: தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான ராம்சரண் கடப்பாவில் நடைபெற்ற தர்கா விழாவில் கலந்து கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்த அவரது செயல் மிகப்பெரிய அளவில் பாராட்டைப் பெற்றுள்ளது. தெலுங்கில் பிரபல நடிகராக திகழும் நடிகர் சிரஞ்சீவியின் மகனான ராம்சரண் ஆந்திர மாநிலம் கடப்பாவிலுள்ள புகழ்பெற்ற அமீன்பீர் பெரிய தர்காவில் நடைபெற்ற 80வது தேசிய முசைரா கஜல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வழிபாடு செய்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பே இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ராம்சரணுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
Also Read: டிசம்பரில் கீர்த்தி சுரேஷ் திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?
அதனை ஏற்று அவரும் கலந்து கொண்டு வழிபாடு செய்துள்ளார். இதில் என்ன சிறப்பு என்றால் ராம்சரண் தற்போது சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு வருகிறார். இப்படியான நிலையில் அவர் பிற மத நிகழ்வில் கலந்து கொண்டது மத நல்லிணக்கத்தை வலியுறுத்துவது போல் இருப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்களும் இணையவாசிகளும் ராம் சரணுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள துர்கா தேவி கோவிலிலும் சென்று ராம்சரண் சாமி தரிசனம் செய்தார். அவரின் வருகையை அறிந்த ரசிகர்கள் கடப்பா நகரம் முழுவதும் பெருமளவில் திரண்டு வந்து வரவேற்பளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The Charan’s Aura ❤️💫🔥
Maa Bangaram ❤️💫🥺@AlwaysRamCharan #Ramcharan #RamCharanStormInKadapa pic.twitter.com/ebTUTZKa68
— We Love Chiranjeevi 💫 (@WeLoveMegastar) November 18, 2024
ராம்சரணின் திரை வாழ்க்கை
1985 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி பிறந்த ராம்சரண் தற்போது தெலுங்கு சினிமாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் என்ற இடத்தை பிடித்துள்ளார். சிரஞ்சீவியின் மகன் என்ற அடையாளத்துடன் கடந்த 2007 ஆம் ஆண்டு சிறுத்தை என்ற படம் மூலம் தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமானார். 2009 ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கிய மகதீரா படம் மூலம் தெலுங்கு மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை பெற்றார்.
Ippude kallara dhaggaranunchi chusanu @AlwaysRamCharan anna nu 😍😍😍❤❤❤
Bhale unnaad asalu 👌👌👌🌟🌟🌟#RamCharanStormInKadapa #RamCharan pic.twitter.com/CcmoRSMN8a— relAAxx (@Lokesh_Bunnyfan) November 18, 2024
இந்தப் படம் தமிழில் மாவீரன் என டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. மகதீரா படம் வசூலில் சக்கைப்போடு போட்டது. இன்றளவும் இந்த படத்தின் வசூலை மற்ற படங்களால் தொட முடியாது. அந்த அளவுக்கும் இப்போது திரையிட்டாலும் வசூலை அள்ளும். இதனைத் தொடர்ந்து ஆரஞ்சு, ரச்சா, நாயக், எவடு, புரூஸ்லீ த பைட்டர், ரங்கஸ்தலம், துருவா, வினைய வித்யா ராமா, ஆர்.ஆர்.ஆர், ஆச்சார்யா என பல படங்களில் ராம்சரண் நடித்துள்ளார்.
தற்போது அவர் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என கொண்டாடப்படும் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் கேம் சேஞ்சர் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
Also Read: Amaran Collection:விஜய்யை முந்தும் சிவகார்த்திகேயன்.. எப்படிதெரியுமா?
இந்த படம் 2025 ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டுவரும் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேம் சேஞ்சர் படத்தில் ராம்சரண் ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த வாரம் கேம் சேஞ்சர் படத்தின் அப்டேட் வெளியானது. இந்தப் படத்தில் ஊழல் அமைப்புக்கு எதிராக போராடி நீதியை நிலைநாட்டும் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ராம்சரண் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பிரபல இயக்குனர் தில் ராஜு இந்த படத்தை தயாரித்திருக்க தமன் இசையமைத்துள்ளார். இந்த படம் ராம்சரணுக்கு மற்றுமொரு வெற்றிப்படமாக அமையும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.