5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

சூர்யா படத்தை இயக்கும் ஆர்.ஜே.பாலாஜி? வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்னர் மக்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்தவர் ஆர்.ஜே. பாலாஜி. தனது வானொலி நிகழ்ச்சிகள் மூலம் நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்ற வரவேற்பின் முலம் தமிழ் சினிமாவிற்குள் நடிகராக காலடி எடுத்து வைத்து, தான் நடித்த படங்களில் கவனம் ஈர்த்தார். நடிப்பது மட்டும் இல்லாமல், எல்.கே.ஜி., மூக்குத்தி அம்மன் போன்ற படங்களை இயக்கவும் செய்தார்.

சூர்யா படத்தை இயக்கும் ஆர்.ஜே.பாலாஜி? வைரலாகும் தகவல்
சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Oct 2024 16:38 PM

நடிகர் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்க உள்ளதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிக் கட்டிப் பறப்பவர் நடிகர் சூர்யா. தமிழில் மட்டும் கவனம் செலுத்தி வந்த சூர்யா தற்போது ஹிந்தி சினிமா பக்கமும் கவனத்தை திருப்பியிருக்கிறார். விரைவில் அவர் ஒரு ஹிந்தி படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தோல்வியையே சந்தித்தது. அதனையடுத்து வணங்கான், கங்குவா, வாடிவாசல், புறநானூறு ஆகிய படங்களில் கமிட்டானார். இவற்றில் வணங்கானிலிருந்து வெளியேறிய அவர் வாடிவாசலில் நடிக்கிறாரா இல்லையா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.

நடிகர் சூர்யாவின் உண்மையான பெயர் சரவணன் சிவக்குமார். இதுதான் அவரது பெற்றோர்கள் அவருக்கு வைத்த பெயர். சரவணனின் பெயரை சூர்யா என்று மாற்றியது இயக்குநர் மணிரத்னம். சரவணன் என்று ஒரு நடிகர் திரைத்துறையில் இருப்பதால் குழப்பம் ஏற்படாமல் இருக்கு இந்த பெயரை அவர் வைத்துள்ளார். சூர்யாவுக்கு ஆரம்பத்தில் நடிப்பில் ஆர்வம் இல்லை, சிறுவயதில் இருந்தே இயக்குனராக வேண்டும் என்றே விரும்பினார்.

படிப்பை முடித்துவிட்டு நடிக்கத் தொடங்குவதற்கு முன் கார்மென்ஸ் தொழிற்சாலை ஒன்றில் மேனேஜராக பணிபுரிந்துள்ளார். 1997-ம் ஆண்டு இயக்குநர் வசந்த் இயக்கத்தில் மணிரத்னம் தயாரிப்பில் உருவான ’நேருக்கு நேர்’ என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் சூர்யா. முதல் 4 வருடங்களுக்கு பெரிய ஹிட் கொடுக்க முடியாத சூர்யாவின் திரை வாழ்வில் திருப்பு முனையாக அமைந்தது 2001-ம் ஆண்டு வெளியான ‘நந்தா’ படம்.

Also read… நான் மதம் மாறினேன் என்று உங்களுக்கு தெரியுமா? நடிகை பிரியாமணி காட்டம்

2003-ம் ஆண்டு காவல் துறை அதிகாரியாக காக்க காக்க படத்தில் கலக்கியிருப்பார். இது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. கஜினி மற்றும் சிங்கம் போன்ற அவரது பல படங்கள் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டன. சமீபத்தில் சூரரைப் போற்று படமும் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது குறிப்பிடதக்கது. ராம் கோபால் வர்மாவின் கேங்ஸ்டர் படமான ரக்த சரித்ரா 2 மூலம் சூர்யா ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் அறிமுகமானார்.

Also read… Bigg Boss Tamil Season 8: ஆண்கள் VS பெண்கள்… அழுதுகொண்டே வெளியேறிய ஜாக்குலின்

கங்குவா, சூர்யா 44 என வரிசையாக படங்களில் நடித்து வரும் சூர்யா அடுத்ததாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்னர் மக்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்தவர் ஆர்.ஜே. பாலாஜி. தனது வானொலி நிகழ்ச்சிகள் மூலம் நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்ற வரவேற்பின் முலம் தமிழ் சினிமாவிற்குள் நடிகராக காலடி எடுத்து வைத்து, தான் நடித்த படங்களில் கவனம் ஈர்த்தார். நடிப்பது மட்டும் இல்லாமல், எல்.கே.ஜி., மூக்குத்தி அம்மன் போன்ற படங்களை இயக்கவும் செய்தார்.

அடுத்து ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை இயக்குவார் என கூறப்பட்ட நிலையில், அந்தப் படத்தை சுந்தர்.சி இயக்குகிறார். தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தகவல். அதன்படி, சூர்யாவின் 45-வது படத்தை நடிகர் ஆர். ஜே. பாலாஜி இயக்கவுள்ளார். படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் கங்குவா வெளியீட்டிற்குப் பின் துவங்கலாம் எனத் தெரிகிறது.

Latest News