OTT Update : ஓடிடியில் வெளியாகும் ‘சொர்க்க வாசல்’ படம்.. தேதி எப்போது தெரியுமா?
Sorgavasal Movie OTT Release : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குநராகவும் இருந்துவருபவர் ஆர்.ஜே.பாலாஜி. இவரின் நடிப்பில் மற்றும் இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சொர்க்கவாசல். இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் ரேடியோ ஜாக்கியாக இருந்து பின், துணை கதாபாத்திரத்தில் நடித்து பின் நடிகராகவும், இயக்குநராகவும் அடுத்தடுத்த கட்டத்திற்கு வளர்ந்து வருபவர் ஆர்.ஜே.பாலாஜி. இவரின் முன்னணி நடிப்பில் மற்றும் இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத்தின் இயக்கத்தில் மாறுபட்ட கதைக்களத்துடன் வெளியான திரைப்படம் சொர்க்கவாசல். கடந்த நவம்பர் 29ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகியது. ஸ்வீப் ரைட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளியாகிய இப்படத்தில் இசையமைப்பாளராக கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார்.
நடிகர் ஆர்.ஜே.பாலாஜியுடன் இந்த திரைப்படத்தில் இயக்குநர் செல்வராகவன், நட்டி சுப்ரமணியம் , கருணாஸ் , சாமுவேல் அபியோலா ராபின்சன் , சானியா ஐயப்பன் மற்றும் ஷரஃப் யு தீன் எனப் பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். 1999ம் ஆண்டில் சிறைச்சாலைகளில் நடந்த கதைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படமானது தற்போது ஓடிடியில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படம் வெளியாகி 3 வாரங்களைக் கடந்த நிலையில், வரும் டிசம்பர் 27ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமான தகவலைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க:விடாமுயற்சி படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? இணையத்தை கலக்கும் தகவல்
ஆர்.ஜே.பாலாஜியின் முற்றிலும் மாறுபட்ட நடிப்பில் வெளியான இப்படமானது தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு என நான்கு மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
ஆக்ஷ்ன் மற்றும் க்ரைம் போன்ற கதைக்களத்துடன் வெளியான இந்த திரைப்படம் உலகளாவிய வசூலில் சுமார் ரூ 8 கோடியைக் கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. முற்றிலும் க்ரைம் த்ரில்லர் கதைக்களத்துடன் வெளியாகிய ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் வெளியிட்டு உரிமத்தைப் பெற்றுள்ளது.
இதைத் தொடர்ந்து இந்த சொர்க்கவாசல் திரைப்படம் வரும் டிசம்பர் 27ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளிலும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க:2024-ம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய மொழி படங்களின் லிஸ்ட் இதோ!
இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடிகர் சூர்யாவை வைத்து சூர்யா45 என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் நடிகர்கள் த்ரிஷா, சுவஸ்திகா, ஷிவதா, யோகிபாபு, இந்திரன்ஸ் மற்றும் நட்டி நடராஜன் எனப் பல பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.
ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் மற்றும் வீட்ல விசேஷம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இவரின் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக இந்த சூர்யா 45 திரைப்படம் உருவாகிவருகிறது.
இப்படத்தின் கதைக்களமானது ஆக்ஷ்ன் மற்றும் க்ரைம் கதைக்களத்துடன் உருவாக்குவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. தற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் கோவையில் ஆரம்பமான நிலையில், வரும் 2025ம் ஆண்டு இறுதியில் இந்த திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:தீவிர சினிமா ரசிகன் டூ எஸ்கே 25… ரசிகர்களுக்கு நன்றி சொன்ன சிவகார்த்திகேயன்