தமிழ் திரையுலகிலும் ‘ஹேமா கமிட்டி’.. அதிரடியில் இறங்கிய நடிகை ரோகிணி.. பெரிய தலைகள் சிக்குமா?

நடிகர் சங்கத்தின் 68வது பொதுக் கூட்டம் இன்று சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்திக், துணைத்தலைவர்கள் கருணாஸ், பூச்சி முருகன், செயற்குழு உறுப்பினர் லதா சேதுபதி, சோனியா, பசுபதி, ராஜேஷ், கோவை சரளா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழ் திரையுலகிலும் ஹேமா கமிட்டி.. அதிரடியில் இறங்கிய நடிகை ரோகிணி.. பெரிய தலைகள் சிக்குமா?

நடிகர் சங்க பொதுக் கூட்டம்

Updated On: 

08 Sep 2024 21:34 PM

இன்று கூடிய நடிகர் சங்க கூட்டம்: நடிகர் சங்கத்தின் 68வது பொதுக் கூட்டம் இன்று சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்திக், துணைத்தலைவர்கள் கருணாஸ், பூச்சி முருகன், செயற்குழு உறுப்பினர் லதா சேதுபதி, சோனியா, பசுபதி, ராஜேஷ், கோவை சரளா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், மன்சூர் அலிகான், லொள்ளு சபா மாறன், சார்லி, பெசன்ட் நகர் ரவி, ரோகினி சுரேஷ், ரித்விகா உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் சினிமா பணிகளை நிறுத்துவது குறித்த தயாரிப்பாளர் சங்க முடிவு, நடிகர் சங்க கட்டிட விவகாரம், நட்சத்திர கலைவிழா நடத்தி நிதி திரட்டுதல் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், கேரளாவின் ஹேமா கமிட்டி குறித்து பொதுக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மலையாள திரையுலகில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் தென்னிந்திய திரையுலகை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது. குறிப்பாக, ஹேமா கிமிட்டி அறிக்கைகு பிறகு பாலியல் குற்றச்சாட்டில் பலரும் சிக்கியிருக்கின்றனர். கேரளா மட்டுமில்லாமல் மற்ற திரையுலகிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக சில நடிகைகள் அடுத்தடுத்த புகார்களை கூறி வருகின்றனர்.

Also Read: மனசிலாயோ… ரஜினியின் வேட்டையன் அப்டேட் கொடுத்த படக்குழு!

 நடிகை ரோகிணி தலைமையில் குழு:

இந்த விவகாரம் தொடர்பாக மற்ற திரையுலகினரும் ஹேமா கமிட்டி போல குழு அமைக்க வேண்டும் என கூறியிருந்தனர். அதன்படி, இன்று நடந்த நடிகர் சங்க கூட்டத்தில் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக புகார் அளிக்க நடிகை ரோகிணி தலைமையில் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.  பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நடிகை ரோகிணி தலைமையில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.  பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் தங்களது புகார்களை சிறப்பு எண்கள், மின்னஞ்சல் முகவரி வழங்கப்பட்டிருப்பதாகவும், அதன் மூலம் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று நடிகை ரோகிணி கேட்டுக் கொண்டார்.

மேலும், பாலியல் புகார்கள் தொடர்பாக நேரடியாக ஊடகங்களில் கருத்து தெரிவிக்க வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்தார். மேலும், பொதுக்குழுவில் பாலியல் புகாரில் சிக்கும் நடிகர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் 5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதுமட்டுமின்றி, சமூக வலைதளங்களில் நடிகர்கள், நடிகைகள் பற்றி அவதூறாக கருத்துகளை பரப்பினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளளது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நடிகர் சங்கத்தின் சார்பில் 2019ஆம் ஆண்டிலேயே விசாகா கமிட்டி குழு உருவாக்கப்பட்டது. அதன்பிறகு சில புகார்கள் வந்தன. தற்போது சில விஷயங்கள் வெடித்துள்ளது. இதனால், நாங்கள் இன்னும் விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம். இந்த கமிட்டில் நடிகர், நடிகைகள் தாண்டி யார் வேண்டுமானாலும் புகார் கொடுக்கலாம்.

Also Read: நீல நிலவே நிலவின் அழகே… நடிகை ரம்யா பாண்டியனின் நியூ ஆல்பம்!

புகார் கொடுப்பதற்காக இமெயில், சிறப்பு நம்பர் வழங்கப்பட்டுள்ளது. இதில் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் புகார் கொடுங்கள். இனிமேல் எந்த ஒரு அத்துமீறல்களையும் யாரும் சகித்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. புகாருக்கு உள்ளானவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள். யாரும் பயப்பட வேண்டும். அனைத்து பெண்களுக்கு துணையாகவும் நடிகர் சங்கம் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!