அல்லு அர்ஜுனை கைது செய்தது நியாயமே இல்லை – நடிகர் சரத்குமார் காட்டம்
அல்லு அர்ஜுன் திரையரங்கிற்கு செல்வதற்கு முன் காவல் துறையினரிடம் பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு தர முடியாது என்றால் தரமுடியாது என்று கூறியிருக்கலாம். அப்படி செய்யாமல் அளவுக்கு அடங்காமல் கூட்டம் வந்ததற்கு அல்லு அர்ஜுன் எப்படி பொறுப்பேற்பார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் காட்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டது நியாயமே இல்லாத ஒரு செயல் என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில், சுனில் உள்ளிட்டோர் நடித்து கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம், ‘புஷ்பா: தி ரைஸ்’. இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். வட மாநிலங்களில் இந்தப் படம் மாபெரும் வெற்றிப் பெற்றது. வழக்கமான ‘டான்’, ‘கேங்ஸ்டர்’ படங்களில் பார்த்த அதே கதைதான் என்றாலும் இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனின் நடிப்பும் மேனரிசமும் ரசிகர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்தது.
புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் கூலித் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கும் அல்லு அர்ஜுனின் புஷ்பா கதாபாத்திரம் எப்படி ஒரு கடத்தல் கும்பலுக்கே தலைவனாக மாறுகிறார் என்பதுதான் படத்தின் ஒன்லைன். படத்தின் இடைவேளை வரை எங்கும் நிற்காமல் செல்லும்.
ஆரம்பத்திலேயே படம் நேரடியாக மையத்துக்குள் பயணிக்கத் தொடங்கி விடுகிறது. படத்தின் இரண்டாம் பாதியில் பகத் பாசில் வருகிறார். அது இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் துவக்கப் புள்ளியாக அமைகிறது. இந்தப் படத்தின் முதல் பாகம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை அடுத்து, இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி ‘புஷ்பா 2 தி ரூல்’ எனப் பெயரிடப்பட்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Also read… தோற்றத்தை வைத்து எடைபோடாதீங்க… உருவ கேலி செய்தவருக்கு அட்லியின் நெத்தியடி பதில்
இந்த நிலையில் படம் வெளியாவதற்கு முன்னர் ப்ரீ புக்கிங்கிலேயே 100 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக தகவல்கள் வெளியானது. தற்போது 1292 கோடிகளை கடந்து வசூலில் கலக்கி வருகிறது புஷ்பா 2 படம். அனல் பறக்கும் காட்சிகளுடன் திரையரங்குகளில் படம் வெளியானது. முதல் பாகத்தில் கூலி தொழிலாளியாக இருந்த அல்லு அர்ஜூன் இரண்டாம் பாகத்தில் பெரிய கடத்தல் மன்னனாக காட்சியளிக்கிறார்.
சுமார் 3 மணி நேரம் 25 நிமிடங்களை கொண்ட இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் கலவையான விமர்சனத்தை கூறுகின்றனர். சிலர் நீலம் அதிகம் என்கிறார்கள். சிலர் சீரியல் போல உள்ளது என்கிறார்கள். படத்தில் நடிகர்களின் நடிப்பு மிகையாக உள்ளது என்றும் சில காட்சிகள் வழிந்து திணிக்கப்பட்டுள்ளது என்றும் படம் பார்த்தவர்கள் விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர்.
Also read… Bigg Boss Telugu season 8: பிக்பாஸ் தெலுங்கு சீசன் 8-ன் கோப்பையை வென்றார் நிகில்!
இந்த நிலையில் படத்தின் ப்ரீமியர் காட்சி கடந்த 5-ம் தேதி திரையரங்கில் வெளியானது. அப்போது சிறப்புக் காட்சியை ரசிகர்களுடன் இணைந்து பார்க்க நடிகர்கள் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா எந்தவித முன் ஏற்பாடுகள் இல்லாமலும் சென்றுள்ளனர். இதனால் இவர்கள் இருவரையும் பார்க்க ரசிகர்கள் கூட்டமாக குவிந்த போது படத்தைப் பார்க்க குடும்பத்துடன் வந்த ரேவதி என்பவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.
இந்த வழக்கில் அந்த தியேட்டர் உரிமையாளர், மேலாளர் உள்பட 3 பேரை போலீசார் முன்னதாக கைது செய்தனர். இந்த நிலையில் கடந்த 13-ம் தேதி அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதுகுறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது நடிகர் சரத்குமார் பேசியுள்ளார்.
அப்போது, அல்லு அர்ஜுன் திரையரங்கிற்கு செல்வதற்கு முன் காவல் துறையினரிடம் பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு தர முடியாது என்றால் தரமுடியாது என்று கூறியிருக்கலாம். அப்படி செய்யாமல் அளவுக்கு அடங்காமல் கூட்டம் வந்ததற்கு அல்லு அர்ஜுன் எப்படி பொறுப்பேற்பார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், அவரை கைது செய்ததில் எந்த நியாயமும் இல்லை. சென்னையில் விமானப்படை சாகசம் நிகழ்ச்சி நடந்த போது அளவுக்கு அதிகமான கூட்டம் மெரினாவில் கூடியதால் கூட்ட நெரிசலில் சிக்கியும், வெயிலின் தாக்கம் தாங்க முடியாமலும் 5 பேர் உயிரிழந்தார்கள். அப்போது யாரை கைது செய்தார்கள் எனவுக் கேள்வி எழுப்பி உள்ளார் சரத்குமார்.