மோடியாக நடிக்க ரெடி… ஆனால், சத்யராஜ் போட்ட கண்டிஷன்!
பிரதமர் மோடியின் பயோபிக்கில் நான் நடிக்கவில்லை. அப்படியே நடித்தாலும், என்னுடைய நண்பர் மணிவண்ணனன் போல ஒரு இயக்குநர் படத்தை இயக்கினால் அது நன்றாக இருக்கும். விஜய் மில்டன் எடுக்கிறேன் என்றாலும் ஓகே. தவிர்த்து வெற்றிமாறன், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் இயக்கினால் பிரதமர் மோடி பியோபிக் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்” என்று பதிலளித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் படத்தில், நடிகர் சத்யராஜ் பிரதமர் மோடி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பேசிய நடிகர் சத்யராஜ் பிரதமர் மோடியின் பயோபிக்கில் நான் நடிக்கவில்லை. அப்படியே நடித்தாலும், என்னுடைய நண்பர் மணிவண்ணனன் போல ஒரு இயக்குநர் படத்தை இயக்கினால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, கோலிசோடா, 10 எண்றதுக்குள்ள, கோலிசோடா 2, கடுகு உள்ளிட்ட படங்களை இயக்கிய ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் அடுத்ததாக “மழை பிடிக்காத மனிதன்” படத்தை எடுத்துள்ளார். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். இதில் விஜய் ஆண்டனி உடன் சரத்குமார், சத்யராஜ், டாலி தனஞ்செயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பிரித்வி அம்பேர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கமல் போஹ்ரா, லலிதா, பிரதீப் மற்றும் பன்கஜ் போஹ்லரா இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் சத்யராஜிடம், “ரஜினியுடன் நடிக்கிறீர்களா? இந்தியில் சல்மான்கானுக்கு வில்லனாக நடிக்கிறீர்களா? பிரதமர் மோடி பயோபிக்கில் நடிக்கிறீர்களா?” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
Also read… சென்னையில் வலம் வரும் பிரபாஸின் கல்கி ‘புஜ்ஜி’ கார்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!
அதற்கு பதிலளித்து பேசிய சத்யராஜ், ‘கூலி திரைப்படத்தில் நான் ரஜினிகாந்த் உடன் நடிக்கிறேன். ஆனால் மோடியுடன் வாழ்க்கை வரலாற்றில் நான் நடிக்கிறேன் என்பதை தயாரிப்பு நிறுவனமே முறையாக அறிவிக்க வேண்டும் என நினைக்கிறேன்.
பிரதமர் மோடியின் பயோபிக்கில் நான் நடிக்கவில்லை. அப்படியே நடித்தாலும், என்னுடைய நண்பர் மணிவண்ணனன் போல ஒரு இயக்குநர் படத்தை இயக்கினால் அது நன்றாக இருக்கும். விஜய் மில்டன் எடுக்கிறேன் என்றாலும் ஓகே. தவிர்த்து வெற்றிமாறன், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் இயக்கினால் பிரதமர் மோடி பியோபிக் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்” என்று பதிலளித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.