ஆப்ராம் என்று மகனுக்கு பெயர் வைத்தது ஏன்? – நடிகர் ஷாருக்கான் விளக்கம் - Tamil News | Actor Shah Rukh Khan revealed why he kept his youngest sons name AbRam | TV9 Tamil

ஆப்ராம் என்று மகனுக்கு பெயர் வைத்தது ஏன்? – நடிகர் ஷாருக்கான் விளக்கம்

Published: 

29 Sep 2024 13:15 PM

நடிகர் ஷாருக்கான் மற்றும் கெளரி கான் தம்பதிக்கு மூன்று குழந்தைகள். இதில் மூன்றாவது குழந்தை ஆப்ராம், வாடகைத்தாய் மூலம் பிறந்தவர். இந்து மற்றும் முஸ்லிம் பெயர்களை சேர்த்து ஷாருக்கான் தனது மகனுக்கு ஆப்ராம் என்று பெயர் வைத்துள்ளார்.

ஆப்ராம் என்று மகனுக்கு பெயர் வைத்தது ஏன்? - நடிகர் ஷாருக்கான் விளக்கம்

நடிகர் ஷாருக்கான்

Follow Us On

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது இளைய மகனுக்கு ‘ஆப்ராம்’ என்று பெயர் வைத்தது ஏன் என்று விளக்கம் அளித்துள்ளார். ஷாருக்கான் கடந்த வருடம் பதான், ஜவான், டன்கி ஆகிய படங்களில் நடித்திருந்தார். சித்தார்த் ஆனந்த் இயக்கிய பதான் படத்தில் தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நான்கு ஆண்டுகளுக்கு பின்பு ஷாருக்கான் நடித்திருந்ததால் அந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உருவாக்கியது. படத்தின் சிங்கிள் பாடல் வெளியானபோது அதில் தீபிகா படுகோன் அணிந்திருந்த உடையின் நிறத்தை வைத்து ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்தார் ஷாருக்கான். படத்துக்கு தமிழ்நாட்டில் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் வட மாநிலங்களில் பலத்த வரவேற்பு கிடைத்தது. படமும் ஆயிரம் கோடி ரூபாய்வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்தப் படத்தை தொடர்ந்து டங்கி படத்தில் நடித்தார் ஷாருக்கான். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனைப் படைத்தது. கடந்த ஆண்டு தொடர்ந்து மூன்று படங்களின் ஹிட் கொடுத்து சாதனைப் படத்தார் ஷாருக்கார். மேலும் அவரது ரசிகர்களும் அதனை கொண்டாடி தீர்த்தனர்.

Also read… கார் பந்தய அணியை தொடங்கிய நடிகர் அஜித் – வைரலாகும் போட்டோஸ்

‘ஜானே ஜான்’ படத்தை இயக்கிய சுஜாய் கோஷ் இயக்கத்தில் நடிக்கிறார் ஷாருக்கான். இந்தப் படத்துக்கு ‘கிங்’ என தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார் ஷாருக்கானின் மகள் சுஹானா. மேலும் அபிஷேக் பச்சன் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. தற்போது படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது படம், ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜவான் படத்தின் இசையை வழங்கிய அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also read… லப்பர் பந்து படத்தை தமிழில் பாராட்டி பதிவிட்ட ஹர்பஜன் சிங்

நடிகர் ஷாருக்கான் மற்றும் கெளரி கான் தம்பதிக்கு மூன்று குழந்தைகள். இதில் மூன்றாவது குழந்தை ஆப்ராம், வாடகைத்தாய் மூலம் பிறந்தவர். இந்து மற்றும் முஸ்லிம் பெயர்களை சேர்த்து ஷாருக்கான் தனது மகனுக்கு ஆப்ராம் என்று பெயர் வைத்துள்ளார். இப்பெயர் குறித்து ஷாருக்கானிடம் ரசிகர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த ஷாருக்கான், இஸ்லாமில் உள்ள ஹஸ்ரத் இப்ராஹிம் பெயர், பைபிளில் ஆப்ரஹாம் ஆகும். எனவேதான் எனது மகனுக்கு ஆப்ராம் என்று பெயர் வைத்தோம். எனது மனைவி இந்து. நான் முஸ்லிம் என்பதால் எனது குழந்தைகள் வீட்டில் மதசார்பின்மையை உணரவேண்டும் என்று விரும்பினேன். அதனால் அப்படி பெயர் வைத்ததாக தெரிவித்துள்ளார்.

நடிகை ஐஸ்வர்ய லட்சுமியின் நியூ ஆல்பம்
ஆரோக்கியத்தை அள்ளி தரும் ஆலிவ் ஆயிலின் நன்மைகள்..!
சருமத்திற்கு பல நன்மைகளை தரும் கற்றாழை..!
புதினாவை தினமும் மென்று சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
Exit mobile version