சிகிச்சைக்காக அமெரிக்க செல்லும் ஷாருக்கான்… என்ன காரணம்?
Actor Shah Rukh Khan: ‘ஜானே ஜான்’ படத்தை இயக்கிய சுஜாய் கோஷ் இயக்கத்தில் நடிக்கிறார் ஷாருக்கான். இந்தப் படத்துக்கு ‘கிங்’ என தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார் ஷாருக்கானின் மகள் சுஹானா. மேலும் அபிஷேக் பச்சன் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. தற்போது படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது படம், ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜவான் படத்தின் இசையை வழங்கிய அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ள தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. ஷாருக்கான் கடந்த வருடம் பதான், ஜவான், டன்கி ஆகிய படங்களில் நடித்திருந்தார். சித்தார்த் ஆனந்த் இயக்கிய பதான் படத்தில் தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நான்கு ஆண்டுகளுக்கு பின்பு ஷாருக்கான் நடித்திருந்ததால் அந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உருவாக்கியது. படத்தின் சிங்கிள் பாடல் வெளியானபோது அதில் தீபிகா படுகோன் அணிந்திருந்த உடையின் நிறத்தை வைத்து ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்தார் ஷாருக்கான். படத்துக்கு தமிழ்நாட்டில் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் வட மாநிலங்களில் பலத்த வரவேற்பு கிடைத்தது. படமும் ஆயிரம் கோடி ரூபாய்வரை வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்தப் படத்தை தொடர்ந்து டங்கி படத்தில் நடித்தார் ஷாருக்கான். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனைப் படைத்தது. கடந்த ஆண்டு தொடர்ந்து மூன்று படங்களின் ஹிட் கொடுத்து சாதனைப் படத்தார் ஷாருக்கார். மேலும் அவரது ரசிகர்களும் அதனை கொண்டாடி தீர்த்தனர்.
‘ஜானே ஜான்’ படத்தை இயக்கிய சுஜாய் கோஷ் இயக்கத்தில் நடிக்கிறார் ஷாருக்கான். இந்தப் படத்துக்கு ‘கிங்’ என தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார் ஷாருக்கானின் மகள் சுஹானா. மேலும் அபிஷேக் பச்சன் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. தற்போது படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது படம், ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜவான் படத்தின் இசையை வழங்கிய அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ஷாருக்கான் நேற்று மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு கண் சிகிச்சைக்காகச் சென்றிருந்தார். ஆனால், அந்த மருத்துவமனையில் திட்டமிட்டபடி கண் சிகிச்சை நடக்காததால், ஷாருக் கான் கண் சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு செல்வதாக கூறப்படுகிறது. அவருக்கு கண்ணில் என்ன பிரச்சினை என்பது குறித்த எந்தத் தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக, மே மாதம் அகமதாபாத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் கலந்து கொண்டபோது ‘ஹீட் ஸ்ட்ரோக்’ காரணமாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.