ரிலீஸாகி 3 வருடங்களுக்கு பிறகு ஆங்கிலத்தில் டப் செய்யப்படும் ‘மாநாடு’ படம்
Maanaadu Movie: நடிகர் சிம்புவின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் மாநாடு. இப்படத்தை சுரேஷ் காமாட்சி தான் தயாரித்து இருந்தார். இப்படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது. கதைக்களத்தை சிறப்பாக அமைத்து படத்தின் வெற்றியை வெங்கட் பிரபு உறுதி செய்திருந்தார் என்று விமர்சனங்கள் எழுந்தன.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ‘மாநாடு’ படம் தற்போது ஆங்கிலத்தில் டப் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு மற்றும் எஸ்ஜே சூர்யா இணைந்து கடந்த 2021ம் ஆண்டில் வெளியான படம் மாநாடு. டைம் லூப் அடிப்படையில் உருவாகியிருந்த இந்தப் படத்தின் திரைக்கதையை மிகவும் கவனத்துடன் ரசிகர்களை கவரும் வகையில் அமைத்திருந்தார் வெங்கட் பிரபு. இந்த படத்தில் சிம்புவின் லுக், கல்யாணி பிரியதர்சனின் பிரஷ்னஸ், எஸ்ஜே சூர்யாவின் அதிரடி நடிப்பு உள்ளிட்டவை மிகப்பெரிய பலமாக அமைந்து படத்தை 100 கோடி கிளப்பில் இணைத்தது.
கோலிவுட் சினிமாவின் இளைஞர்களை கவரும் வகையில் மிகவும் ஜாலியான படங்களை இயக்கும் இயக்குநர் என்று அழைக்கப்படும் வெங்கட் பிரபு. இவர் இயக்கியிருந்த படம் மாநாடு. இந்த படத்தில் சிலம்பரசன் ஹீரோவாக நடித்திருந்தார். ஒரு மாநாடு, அங்கு நடக்கவிருக்கும் அசம்பாவிதம், அதை தடுக்க நினைக்கும் இளைஞன், அவனுக்கு அந்த நாள் மட்டுமே நாள் கணக்காக ரிபீட் ஆகிறது. இறுதியில் என்ன நடந்தது? என்பதே கதை. இந்த கதையை அதிகம் டென்ஷன் இல்லாமல் மக்கள் ரசிக்கும் வகையில் கூறியிருப்பார் வெங்கட் பிரபு.
நடிகர் சிம்புவின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் மாநாடு. இப்படத்தை சுரேஷ் காமாட்சி தான் தயாரித்து இருந்தார். இப்படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது. கதைக்களத்தை சிறப்பாக அமைத்து படத்தின் வெற்றியை வெங்கட் பிரபு உறுதி செய்திருந்தார் என்று விமர்சனங்கள் எழுந்தன. இந்த படத்தின் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா இருந்த நிலையில் படத்தின் பாடல்களும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தன. இந்த படம் சிம்புவின் கேரியரில் நீண்ட இடைவேளைக்குப் பின் அவருக்கு கம்பேக் என்றே சொல்லலாம்.
Also read… நாகர்ஜூனாவை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய தனுஷ்… வைரலாகும் வீடியோ!
மாநாடு படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது எஸ்.ஜே.சூர்யாவின் கதாபாத்திரம் என்று சொன்னால் அதை யாராலும் மறுக்க முடியாது. அந்த கதாபாத்திரத்தை அவரை தவிர்த்து யாராலும் செய்திருக்க முடியாது என சொல்லும் அளவுக்கு தரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் எஸ்.ஜே.சூர்யா. அதில் அப்படத்தில் அவர் பேசும் தலைவரே என்கிற டயலாக்கும், வந்தான் சுட்டான் செத்தான் ரிப்பீட்டு என்கிற டயலாக்கும் மீம் டெம்பிளேட்டாக மாறி இன்றளவும் டிரெண்டிங்கில் உள்ளது.