இணையத்தில் கவனம் பெறும் SK25 படத்தின் பூஜை வீடியோ!

சிவகார்திகேயன் இயக்குநர் முருகதாஸ் இயக்கதில் நடிக்க கமிட்டானார். படத்தின் அப்டேட்ட்குகள் அவ்வப்போது வந்தாலும் அந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இணையத்தில் கவனம் பெறும் SK25 படத்தின் பூஜை வீடியோ!

ஜெயம் ரவி, அதர்வா, சிவகார்த்திகேயன்

Published: 

17 Dec 2024 09:01 AM

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் சுதா கொங்குரா இயக்கத்தில் உருவாகவுள்ள SK25 படத்தின் பூஜை வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி நடிகர் சிவகார்த்திகேயன் தனது 25-வது படத்திற்காக இயக்குநர் சுதா கொங்குராவுடன் கூட்டணி வைத்துள்ளார். இந்தப் படத்தின் பூஜைகள் நடைப்பெற்று புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்தப் படத்திற்கு புறநானூறு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிகர்கள் ஜெயம் ரவி மற்றும் அதர்வா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளனர். நடிகை ஸ்ரீலீலா நாயகியாக நடிக்க உள்ள இந்தப் படத்திற்கு அமரன் படத்தை தொடர்ந்து தற்போது ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைக்க உள்ளது குறிப்பிடதக்கது. இந்தப் படம் இந்தி திணிப்பு தொடர்பான கதையில் உருவாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான படம் அமரன். இந்தப் படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய் பல்லவி நாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தை நடிகர் கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.

Also read… Cinema Year Ender: 2024-ல் வசூல் சாதனை படைத்த படங்களை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

தமிழில் மீண்டும் ஒரு தேசபக்தி படமாக உருவான இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தில் அனைத்து பாடல்கள் இணையத்தில் கோடிக்கனக்கான பார்வைகளைப் பெற்று ட்ரெண்டிங்கில் இடம்பிடித்தது.

Also read… சூரி நாயகனாக நடிக்கும் அடுத்தப் படத்தின் அப்டேட் இதோ!

இந்த படத்தைத் தொடர்ந்து சிவகார்திகேயன் இயக்குநர் முருகதாஸ் இயக்கதில் நடிக்க கமிட்டானார். படத்தின் அப்டேட்ட்குகள் அவ்வப்போது வந்தாலும் அந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

அதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது 25-வது படத்திற்காக இயக்குநர் சுதா கொங்குராவுடன் தற்போது கூட்டணி வைத்துள்ளார். இந்தப் படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைப்பெற்றது. இந்தநிலையில் அந்த பூஜை வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது

காலையில் அலாரம் வைத்து எழுந்திருப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்..!
நடிகை ரித்திகா சிங் சினிமா பயணம்
கொய்யா பழத்தின் பல ஆரோக்கிய நன்மைகள்!
இந்தியாவின் தலைசிறந்த செஸ் வீரர்கள்!