விஜய், அஜித்துக்கு பிறகு சிவகார்த்திகேயன்.. தொடர்ந்து வசூல் சாதனை படைக்கும் ’அமரன்’ படம்!

Amaran Box Office Collection : தமிழ்த் திரைப்படங்களில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். தற்போது இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம் அமரன். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் சோனி பிச்சர்ஸ் இணைந்து தயாரித்த திரைப்படமானது கடந்த அக்டோபர் 31ம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியது.

விஜய், அஜித்துக்கு பிறகு சிவகார்த்திகேயன்.. தொடர்ந்து வசூல் சாதனை படைக்கும் ’அமரன்’ படம்!

அமரன்

Published: 

13 Nov 2024 15:00 PM

தமிழ்த் திரைப்படங்களில் 2017ம் ஆண்டு வெளியான ரங்கூன் திரைப்படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியவர் ராஜ்குமார் பெரியசாமி. இவர் இயக்கிய முதல் திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவர் அடுத்து மிகப் பிரம்மாண்ட படைப்பாக உருவாக்கிய திரைப்படம் அமரன். மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிகப் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான  திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்ச்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

அமரன் வசூல் விவரம்

கடந்த அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகிய இந்த திரைப்படம் நடிகர் அஜித் மற்றும் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படங்களுக்குப் போட்டியாக வசூல் வேட்டையில் பல கோடிகளை வசூல் செய்துவருகிறது. அமரன் திரைப்படம் வெளியாகி தற்போது 12 நாட்களைக் கடந்த நிலையில் உலகளாவிய வசூலில் சுமார் ரூ 250 கோடிகளை வசூல் செய்துள்ளது. வசூலில் வென்ற இப்படம் உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்களுக்குச் சவால் விடும் தோரணையில் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்நிலையில் வசூலில் மாஸ் காட்டிவரும் அமரன் 12 நாட்களில் ரூ 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து விஜய் நடிப்பில் வெளியான சர்கார் மற்றும் மெர்சல் போன்ற திரைப்படங்களை பின்னுக்குத் தள்ளி உள்ளது.

இதையும் படிங்க :ஓடிடி வெளியீட்டில் தள்ளிப்போகும் ‘அமரன்’… காரணம் இதுதான்

ராணுவம், ஆக்ஷ்ன் சார்ந்த திரைப்படங்கள் என்றாலே அதில் மக்களுக்குத் தனி ஈர்ப்புகள் உண்டு. இந்நிலையில் பெரும் தேசபக்தி மற்றும் ஆக்ஷன் நிறைந்த திரைப்படமாக வெளியான திரைப்படம் அமரன் வெற்றி பெற்றுள்ளது.   இந்த திரைப்படத்திற்காக பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

சிவகார்த்திகேயன் சினிமா பயணம்

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலிருந்து வந்து தற்போது வெள்ளித் திரையில் டாப் கதாநாயகனாக இருப்பவர் சிவகார்த்திகேயன். 2012ம் ஆண்டு வெளியான மெரினா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிய இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார்.

இதையும் படிங்க : கங்குவா படத்திற்கு கூடுதல் காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி

இதை தொடர்ந்து மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்க மற்றும் எதிர்நீச்சல் போன்ற திரைப்படங்களில்  நடித்தார். இதையடுத்து 2013ம் ஆண்டு இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் வெளியான “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” என்ற திரைப்படத்தின் மூலமாகச் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என்று தனது ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கினார்.

தொடர்ந்து தனது நகைச்சுவை மற்றும் மாறுபட்ட நடிப்பினால் பிரபலமான இவர் ரசிகர்களால் அன்போடு SK என்றும் அழைக்கப்பட்டார். இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான மாவீரன், டான் மற்றும் டாக்டர் போன்ற திரைப்படங்கள் மூலமாக இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதிலும் மாவீரன் திரைப்படம் மிகவும் பிரம்மாண்ட வெற்றியை இவருக்குத் தந்தது. தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்துவரும் இவர் நடிகர், பாடகர், பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் எனப் பல துறைகளில் கலக்கி வருகிறார்.

வேறு கதைக்களம்

தொடர்ந்து நகைச்சுவை திரைப்படங்களில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்துவந்த இவர் தற்போது தான் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் மற்றும் கருத்து சார்ந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். இந்நிலையில் அவர் எதிர்பார்த்த மாதிரி கதையாக அமைந்த திரைப்படம் அமரன்.  அமரன் திரைப்படத்திற்கு அடுத்ததாக சிவகார்த்திகேயன் இயக்குனர் சுதா கொங்கரா “புறநானூறு” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க :தனுஷின் அடுத்தப்படம்.. “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” படத்தின் ரிலீஸ் தேதி எப்போது?

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?