Amaran: அமரன் வெற்றி.. தாறுமாறாக உயர்ந்த சிவகார்த்திகேயன், சாய் பல்லவி சம்பளம்!
Sivakarthikeyan - Sai Pallavi : தமிழ்த் திரைப்படங்களில் கடந்த அக்டோபர் 31ம் தேதி தீபாவளியை முன்னிட்டு மிகப் பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் அமரன். இயக்குநர் ராஜ்குமார் பெரிய சாமியின் இயக்கத்தில் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் ராணுவ வாழ்க்கை, மற்றும் காதல் பற்றியும் அதிரடி கதைகளுடன் வெளியான இந்த திரைப்படம் வசூலிலும் சரி, விமர்சனங்களில் சரி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அமரன் திரைப்படமானது சிவகார்த்திகேயனுக்கு, நடிகை சாய் பல்லவிக்கு வெற்றியாக அமைந்த நிலையில் தற்போது அவர்களின் சம்பளத்தை உயர்த்தியதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது.
தமிழ் ரங்கூன் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தற்போது பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்ற அமரன் திரைப்பட இயக்குநர் ராஜ் குமார் பெரியசாமி. இவர் இயக்கத்திலும் நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்த இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இருவரும் நடித்திருந்தனர். மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் ராணுவம் மற்றும் காதல் சார்ந்த கதைக்களத்துடன் அமைந்த இப்படமானது வெளியான முதல் நாளிலே உலகளாவிய வசூலில் சுமார் ரூ42.3 கோடியை வசூல் செய்து சாதனை படைத்தது. நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களில் அதிக வசூல் பெற்ற முதல் திரைப்படமாக இந்த அமரன் இருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் வெற்றியினை தொடர்ந்து சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இருவருக்கும் அதிக பட வாய்ப்புகள் குவிந்துவரும் நிலையில் இவர்கள் தற்போது அவர்களில் சம்பத்தை இருமடங்காக உயர்த்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயனின் சினிமா பயணம் ..
நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு வருவதற்கு முன் தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளராக பணிபுரிந்து தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். அதைத் தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் விஜய்க்கு அடுத்தாக திரைப்படங்களில் இவர்தான் என்று மக்கள் இவரை ஆதரித்து வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன் 2012ம் ஆண்டு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான “மெரினா” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து 3 படத்தில் துணைநடிகராக நடித்திருக்கிறார்.
சினிமாவின் மீது இவருக்கு இருந்த ஆர்வத்தால் கண்டிப்பாக நடிகராக வேண்டும் என்ற ஆசையினாலும் இவருக்கு வெற்றி திரைப்படமாக அமைந்தது “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”. 3, மனம் கொத்தி பறவை மற்றும் எதிர் நீச்சல் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்குச் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான ரசிகர்களைக் கொடுத்து “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” திரைப்படம்.
இதையும் படிங்க :Kanguva Box Office Collections: கல்லா கட்டிய கங்குவா.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
இந்த திரைப்படத்தின் வெற்றியினை தொடர்ந்து மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன் மற்றும் ரெமோ போன்ற திரைப்படங்கள் தொடர் வெற்றியாக அமைந்தது. இந்நிலையில் தொடர்ந்து பிரபல நடிகராக வலம்வந்த இவருக்கு “கோட்” திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்து மிகவும் ஆச்சரியப்படுத்தினார். அதில் விஜய் இவரிடம் துப்பாக்கியைக் கொடுப்பது போன்ற காட்சிகள் மிகவும் வைரலானது. இந்நிலையில் விஜய்க்கு அடுத்தாக இவர்தான் என்று மக்களும் கூறிவருகின்றனர். இந்நிலையில் தற்போது இவர் சூரரைப்போற்று இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சாய் பல்லவியின் சினிமா பயணம்..
இதேபோல் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி எனப் பல மொழி திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக வளம் வருபவர் சாய் பல்லவி. ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக “தாம் தூம்” போன்ற திரைப்படங்களில் நடித்து தனது திரைப்பட வாழ்க்கையை ஆரம்பித்த இவர் 2015ம் ஆண்டு இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான “பிரேமம்” என்ற திரைப்படத்தில் “மலர்” என்ற கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகினார்.
இதையும் படிங்க :OTT Update : ஓடிடியில் இந்த வாரம் வெளியான மாஸ் திரைப்படங்களின் லிஸ்ட் இதோ..!
இவர் ஆரம்பத்தில் சினிமா மீது ஆர்வம் காட்டாத இவர் “பிரேமம்” படத்தின் வெற்றியினை அடுத்து நடிகையாகத் திரைப்படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டினார். தொடர்ந்து மலையாள திரைப்படங்களில் நடித்துவந்த இவர் 2018 ஆண்டு இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான மாரி 2 திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் நடித்து தமிழில் அறிமுகமானார்.
இதையடுத்து தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்த நிலையில் டோலிவுட்டிலும் பிரபல நடிகையாக வலம்வந்தார். இந்நிலையில் தற்போது இவரின் நடிப்பில் பிரம்மாண்ட வெற்றி திரைப்படமாக வெளியானதுதான் அமரன். இப்படத்தில் இந்து ரெபேக்கா வர்கீஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவர் இப்படத்திற்காக அதன் கதாபாத்திரமாகவே மாறினார் என்றுதான் கூறவேண்டும் அந்த அளவிற்கு தத்துரூபமாக நடித்திருந்தார்.
சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி..!
தற்போது இந்த திரைப்படமானது வெளியான 2 வாரங்களிலே தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூ. 132 கோடியைத் தண்டி வசூல்செய்த திரைப்படம் உலகளாவிய வசூலில் சுமார் ரூ.260 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து வெற்றி திரைப்படமாக தற்போது வரை திரையரங்குகளில் ஹவுஸ்புல் ஆக ஓடிவருகிறது.இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடிப்பதற்காக ரூ 30 கோடியும், நடிகை சாய் பல்லவி ரூ 3 கோடியும் வாங்கிய நிலையில் இவர்கள் தற்போது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிவருகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்துவரும் திரைப்படமானது ‘புறநானூறு’ திரைப்படத்தில் நடிப்பதற்கு சுமார் 50 கோடிகளுக்கு மேல் வாங்குவதாகவும், நடிகை சாய் பல்லவி இதுவரை நடித்த திரைப்படங்களுக்கு அதிகபட்சமாக 3 கோடியை மட்டும் வாங்கிய நிலையில் தற்போது அமரன் வெற்றியினை தொடர்ந்து பாலிவுட் திரைப்படமான ராமாயணம் திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் இந்தி திரைப்படத்திலும் நடிக்க ஆரம்பித்ததால் இவர் அவரின் சம்பளத்தை ரூ 6 கோடியாக உயர்த்தியதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது.