5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Sivakarthikeyan: சிவகார்த்திகேயனின் மகனின் பெயர் என்ன தெரியுமா? வெளியானது பெயர் சூட்டு விழா வீடியோ!

Actor Sivakarthikeyan Son Name: சிவகார்த்திகேயன்  நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியான 'அயலான்' திரைப்படம், மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில், ஏனோ எதிர்பார்த்த அளவுக்கு பெறவில்லை. மேலும் இந்த படம் ரிலீசாக வேண்டும் என்பதற்காக, தன்னுடைய சம்பளப்பணமே வேண்டாம் என சிவகார்த்திகேயன் விட்டுக்கொடுத்து குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தைத் தொடந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

Sivakarthikeyan: சிவகார்த்திகேயனின் மகனின் பெயர் என்ன தெரியுமா? வெளியானது பெயர் சூட்டு விழா வீடியோ!
சிவகார்த்திகேன்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 15 Jul 2024 11:15 AM

நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் சமீபத்தில் மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில் அந்த குழந்தைக்கு நடைப்பெற்ற பெயர் சூட்டு விழா வீடியோவை சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் போட்டியளராக முதன் முதலில் தொலைக்காட்சி முன்பு தோன்றினார், பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளார், காமெடி நடிகர், பாடலாசிரியர், நடிகர், தயாரிப்பாளர் என பல்வேறு பரிமாணங்களை தனக்காக உருவாக்க்கி கொண்டார். தமிழில் மெரினா படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த சிவகார்த்திகேயன் சினிமாவில் தொடர்ந்து பல மெகா ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது மாமா பெண், ஆர்த்தி என்பவரை கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட சிவகார்த்திகேயன் 3 குழந்தைகளுக்கு தற்போது அப்பாவாக மாறியுள்ளார். இந்த நிலையில் மூன்றாவது குழந்தையின் பெயர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சிவகார்த்திகேயன்  நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியான ‘அயலான்’ திரைப்படம், மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில், ஏனோ எதிர்பார்த்த அளவுக்கு பெறவில்லை. மேலும் இந்த படம் ரிலீசாக வேண்டும் என்பதற்காக, தன்னுடைய சம்பளப்பணமே வேண்டாம் என சிவகார்த்திகேயன் விட்டுக்கொடுத்து குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தைத் தொடந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். கமல் ஹாசன் தயாரிக்கிறார். மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் இது. இந்தப் படத்தில் சிவாவின் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். பிற மாநிலங்களில் உள்ள தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்கள், காஷ்மீரி வீரர்கள், ‘விஸ்வரூபம்’ வில்லன் ராகுல் போஸ், புவன் அரோரா எனப் பலரும் நடித்துள்ளனர். மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டது. சில மாதங்களுக்கு முன் படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Also read… Prabhas: ”நீங்க இல்லனா நான் ஜீரோ” – ரசிகர்களுக்கு நன்றி சொன்ன பிரபாஸ்… வைரலாகும் வீடியோ!

இதனைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து நடந்து வருகின்றனர். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்து வர வில்லனாக பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால் நடிக்கிறார். அண்மையில் இப்படத்தின் கதை அருமையாக இருந்ததாகவும் துப்பாக்கி படத்திற்கு பிறகு முருகதாஸுடன் இணைவது மகிழ்ச்சி என வில்லன் நடிகர் வித்யூத் கூறியிருந்தார்.

நடிகராக மட்டுமில்லாமல், ஒரு பொறுப்பான அப்பாவாக நடந்துகொள்ளும் சிவகார்த்திகேயன் குடும்பத்திற்காகவும் நேரத்தை செலவிடுகிறார். முன்னதாகா இவருக்கு ஆராதனா மற்றும் குகன் என இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த ஜூன் மாதம் 2-ம் தேதி சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதிக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு ‘பவன்’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்த பெயர் சூட்டு விழாவின் வீடியோவை சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Latest News