Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் வாழ்க்கையில் இப்படி ஒரு சோக சம்பவமா?

Amaran: நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேசிய விஷயங்கள் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது. அதாவது, “அமரன் படத்தில் நான் சிவகார்த்திகேயனாக தெரியவில்லை. முழுக்க முழுக்க மேஜர் முகுந்த் வரதராஜனாக தெரிந்ததாக பலரும் கூறினார்கள். இந்த நேரத்தில் அவரின் குடும்பத்தினருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முகுந்த் வரதராஜன் பற்றி நாம் செய்திகள் மூலமாக அறிந்து கொண்டோம்.

Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் வாழ்க்கையில் இப்படி ஒரு சோக சம்பவமா?

கோப்பு புகைப்படம்

Published: 

05 Nov 2024 07:13 AM

சிவகார்த்திகேயன்: மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த வரதராஜனின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட அமரன் படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நேற்று (நவம்பர் 5) சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேசிய விஷயங்கள் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது. அதாவது, “அமரன் படத்தில் நான் சிவகார்த்திகேயனாக தெரியவில்லை. முழுக்க முழுக்க மேஜர் முகுந்த் வரதராஜனாக தெரிந்ததாக பலரும் கூறினார்கள். இந்த நேரத்தில் அவரின் குடும்பத்தினருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முகுந்த் வரதராஜன் பற்றி நாம் செய்திகள் மூலமாக அறிந்து கொண்டோம். ஆனால் நான் என்னுடைய வீட்டில் பார்த்த முகுந்து வரதராஜன் ஒருவர் இருக்கிறார். அதாவது என்னுடைய அப்பா ஜி.தாஸ்.

Also Read: Amaran: முகுந்த் வரதராஜனுக்கு சாதி அடையாளம் தேவையில்லை.. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி!

அப்பாவின் நினைவுகளை பகிர்ந்த சிவகார்த்திகேயன்

ஒரு ஜெயில் கண்காணிப்பாளராக இருந்த அவர் காவல்துறை உடையில் எப்போதும் கண்டிப்பான மனிதராக, நேர்மையாக இருக்க வேண்டும் என நினைப்பவர். தமிழக சிறைத்துறையில் இப்போது கேட்டாலும் அவரைப்பற்றி சொல்வார்கள். கைதிகளிடம் கூட அன்பாக என்னுடைய அப்பா பழகுவார் என கூறுவார்கள். என் வாழ்க்கையில் அப்பா ஒரு நாள் கூட உடல்நிலை சரியில்லை என்று கூட விடுமுறை எடுத்துப் பார்த்ததில்லை. அவர்தான் அமரன் படம் பண்ண மிக முக்கிய காரணம். எப்படியாவது இந்த படத்தில் நடித்து விட வேண்டும் என நினைத்தேன்.

காரணம் கடந்த 21 வருடங்களாக அவர் நினைவுகளுடன் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அப்பாவை திரும்ப ஒருமுறை பார்க்க அவராக நான் இருக்க ஒரு வாய்ப்பு அமைந்ததற்கு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய முதல் ஹீரோ அப்பா தான். நான் அவரின் காவல்துறை சீருடையில் பேட்ச் மாட்டி வைப்பேன். ஷூக்கு பாலிஷ் போடுவேன். பெல்ட் எல்லாம் மாட்டி விட்டு சல்யூட் அடிப்பேன். முகுந்த் வரதராஜனுக்கும் என்னுடைய அப்பாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளது. அப்பா இறந்து 21 வருடங்கள் ஆனாலும் அவருடன் பணியாற்றியவர்கள் இன்னும் அம்மாவிடம் வந்து வாழ்த்துக்களை பெற்று செல்கிறார்கள. அப்பாவுக்கும் முகுந்த் வரதராஜனுக்கும் இருந்த ஒற்றுமைகள் தான் என்னை கதை கேட்ட அன்று தூங்கவிடாமல் செய்தது.

Also Read:’தி கோட்’ பட வசூலை மிஞ்சும் ‘அமரன்’ .. தெலுங்கில் சீறும் கலெக்‌ஷன்! 

கண்கலங்கிய தருணம்

படத்தின் கிளைமாக்ஸ் கட்சியில் முகுந்த் வரதராஜனுக்கு அடிபட்டு ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்வார்கள். அவர் இறந்தது தொடர்பாக வீட்டுக்கு போன் வரும். இது போன்ற காட்சி என் வாழ்க்கையிலும் நடந்தது. அப்போது என்னுடைய அப்பா கோவையில் வேலை செய்தார். நாங்கள் திருச்சியில் குடும்பத்துடன் இருந்தோம். அவருக்கு இரண்டு நாட்களில் திருமண நாள் வருவதாக இருந்தது. மறைந்த அன்றைய தினம் காலை 8 மணிக்கு எனக்கு போன் செய்த அப்பா நான் விடுமுறை எடுத்திருக்கிறேன். நீ கல்லூரிக்கு போயிட்டு வா நான் வீட்டுக்கு வந்து விடுகிறேன் என தெரிவித்தார்.

நான் கல்லூரிக்கு சென்று விட்டு வந்தால் வீட்டு வாசலில் மிகப்பெரிய கூட்டம் இருந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. உள்ளே சென்று பார்த்தல் அம்மா ஒருபுறம் தரையில் உட்கார்ந்து இருந்தார்கள். மறுபுறம் அக்கா அழுது கொண்டிருந்தார். அவரிடம் சென்று என்னவென்று கேட்ட போது அப்பா இறந்ததை சொன்னார். அந்த நிமிடம் என்னுடைய வாழ்க்கையும் நானும் மாறிவிட்டோம். நிறைய பேர் வாழ்க்கையில் இந்த வேதனையை அனுபவித்து இருப்பீர்கள் என நினைக்கிறேன்.

வாழ்க்கையில் அப்பா இருக்கும்போது எல்லாமே பாசிட்டிவாக தெரியும். அப்பாவின் இறுதிச் சடங்குகள் எல்லாம் முடிந்த பிறகு நான் சென்று அவரின் நொறுங்கிப் போன எலும்புளை எல்லாம் பார்த்தேன். அன்றைக்கு நொறுங்கியது  எலும்புகள் மட்டுமல்ல ஒரு 17 வயது சிறுவனின் இதயம் தான். என் அம்மாவுக்கு குடியரசுத் தலைவர் விருது கொடுத்தார்கள். 8 ஆம் வகுப்பு மட்டுமே படித்திருந்த அவர் பெரிய படிப்பறிவு எதுவும் இல்லாமல் அந்த நிகழ்வை எதிர்கொண்டார். நான் தூரத்திலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். என் அப்பாவை பற்றி ஒரு வாழ்க்கை வரலாறு எடுக்க முடியாது. அதை சொல்வதற்கு நான் இருக்கிறேன். கண்டிப்பாக இந்த படத்தை பார்த்து என்னுடைய அப்பா மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார் என நினைக்கிறேன்” என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?