எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத சிவகார்த்திகேயனின் சில படங்கள்.. லிஸ்ட் இதோ! - Tamil News | actor Sivakarthikeyan flop movies list and Box Office Verdicts of his movies | TV9 Tamil

எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத சிவகார்த்திகேயனின் சில படங்கள்.. லிஸ்ட் இதோ!

Updated On: 

19 Sep 2024 13:58 PM

Actor Sivakarthikeyan : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரில் ஒருவரானவர் சிவகார்த்திகேயன். இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராகத் தனது சின்னத்திரை பயணத்தைத் தொடங்கினார். இவர் நடிகர் தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடித்த 3 திரைப்படத்தில் தனுஷிற்கு நண்பனாக நடித்து பின்னர் தனுஷ் இயக்கிய எதிர்நீச்சல் மூலம் தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார்.

எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத சிவகார்த்திகேயனின் சில படங்கள்.. லிஸ்ட் இதோ!

சிவகார்த்திகேயன் - கோப்புப்படம்

Follow Us On

தமிழ் திரையுலகில்  முன்னணி நடிகரில் ஒருவரானவர் சிவகார்த்திகேயன். இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராகத் தனது சின்னத்திரை வாழ்க்கையைத் தொடங்கினார். பின் 3 படத்தில் நடிகர் தனுஷின் நண்பனாக நடித்து சிமாவில் தனது முதல் காலடியைப் பதித்தார் . அடுத்து  இவர் நடிப்பில் வெளியான மெரினா, எதிர்நீச்சல், கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களின்  மூலம்  குழந்தைகளின் விருப்பமான நடிகர்களில் ஒருவராக மாறினார். இந்த திரைப்படங்களுக்குப் பிறகு நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நிறைய வெற்றிப் படங்களாகத் தான் அமைந்தது. ஆனாலும் அவ்வப்போது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத படங்களும் சிவகார்த்திகேயன் லிஸ்டில் இணைந்தன

பிரின்ஸ்:

பிரின்ஸ் திரைப்படம் 2022ல் இயக்குநர் அனுதீப் இயக்கி தமிழ் மற்றும் தெலுங்கு மொழி என இரு மொழிகளில் வெளியான திரைப்படமாகும்.  SK’s 20  என்று அழைத்த இத்திரைப்படத்தை “ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்” மற்றும் “சுரேஷ் புரொடக்ஷன்ஸ்” இணைந்து தயாரித்தது. இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், மரியா ரியாபோஷப்கா மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பள்ளியில் பிரிட்டிஷ் ஆசிரியையான ஜெசிகாவை காதலிப்பது போன்ற கதையைக் கொண்டுள்ளது.
இப்படத்தில்  தமன் எஸ் இசையமைத்துள்ளார். பிரின்ஸ் திரைப்படம்  2022ல் அக்டோபர் 21ல் வெளியானது. இத்திரைப்படமானது வசூலிலும் விமர்சனங்கள் ரீதியாகவும் பெரிதும் பேசப்படவில்லை.  அதனால் இத்திரைப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத படமாக சிவகார்த்திகேயனுக்கும் மாறியது.

Also Read : மட்ட பாடலுக்கு திரிஷாவுக்கு பதிலாக முதலில் தேர்வான நடிகை யார் தெரியுமா?

ஹீரோ:

2019ல் இயக்குநர் எஸ்.மித்ரன் இத்திரைப்படத்தை  இயக்கினார்.   “கேஜேஆர் ஸ்டுடியோஸ்” தயாரித்த இப்படத்தில்  சிவகார்த்திகேயன், அர்ஜுன் சர்ஜா, கல்யாணி பிரியதர்ஷன், இவானா மற்றும் அபய் தியோல்  ஆகிய நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இதில் திரைப்பட தயாரிப்பாளர் போஸ்கோ பிரபு, மித்ரன் தனது கதையைத் திருடினார் என்று இப்படத்தின் இயக்குநர் மீது குற்றம் சாற்றப்பட்டது. இப்படம் 2019ல் டிசம்பர் மாதம் 20 தேதி உலகமெங்கும் வெளியாகியது. குற்றச்சாட்டுக் காரணமாக அமேசான் பிரைமிலிருந்து  இப்படம் நீக்கப்பட்டது.

MR.லோக்கல்:

இயக்குநர் என்.ராஜேஷ் இயக்கத்தில் நடிகர்  சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடிப்பில் 2019ல் மே 17ல் வெளியான திரைப்படம்தான் மிஸ்டர் லோக்கல். இத்திரைப்படம் நகைச்சுவை மற்றும் காதல்  கலந்த திரைப்படமாகும். வேலைக்காரன் திரைப்படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா இருவரும் நடித்த படம் இது.

இப்படத்தில் நண்பர்களுடன் ஜாலியாக சுற்றித்திரியும் மிடில்க்ளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த  வாலிபர், பல கோடி சொத்துக்குச் சொந்தக்காரியான திமிறு பிடித்த மாடர்ன் பெண்ணை தனது காதலில் விழவைப்பது இக்கதையின் கரு.  ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமல் ஏமாற்றியது மிஸ்டர் லோக்கல்.

எதிர்பார்ப்பு

அடுத்தடுத்த படங்கள் தோல்வியை என்ற நிலையில் இருந்த போது “கம் பாக்”  கொடுக்கும் விதத்தில் அடுத்தடுத்த வெற்றிப்படங்களான மாவீரன், டான்  மற்றும் அயலான் போன்ற திரைப்படங்கள் சிவகார்த்திகேயனுக்கு வெற்றி வாகை சூடிய திரைப்படங்களாக மாறியது.

தற்போது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் கமல்ஹாசன் மற்றும் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகும் படம்தான்  “அமரன்”.  இப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வரும் அக்டோபர் 31ல் வெளியாகும் எனத் தகவல். இப்படம் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version