தீவிர சினிமா ரசிகன் டூ எஸ்கே 25… ரசிகர்களுக்கு நன்றி சொன்ன சிவகார்த்திகேயன்
திருச்சியில் ஒரு தீவிர சினிமா ரசிகனாக இருந்து இங்கே வந்து தற்போது #SK25 வரை வந்திருப்பது எல்லாம் அற்புதமான பயணம். இதை சாத்தியப்படுத்திக்கொடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் என்றும் நன்றியுடையவன் என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் தனது 25-வது படத்திற்காக இயக்குநர் சுதா கொங்குராவுடன் கூட்டணி அமைத்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான படம் அமரன். இந்தப் படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய் பல்லவி நாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தை நடிகர் கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழில் மீண்டும் ஒரு தேசபக்தி படமாக உருவான இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. மேஜர் முகுந்த் வரதராஜன் தனது 31-வது வயதில் இந்திய நாட்டை எதிரிகளிடம் இருந்து காப்பதற்காக தனது உயிர் தந்ததன் காரணமாக நாட்டின் மிக உயரிய விருதான அசோக் சக்ரா விருது அவருக்கு அறிவிக்கப்பட்டது.
கடந்த 2015-ம் ஆண்டு குடியரசு தின விழாவில் அந்த விருதை மறைந்த முகுந்த்தின் மனைவி இந்து முகுந்த் பெற்றுக்கொண்டார். படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தில் அனைத்து பாடல்கள் இணையத்தில் கோடிக்கனக்கான பார்வைகளைப் பெற்று ட்ரெண்டிங்கில் இடம்பிடித்தது.
Also read… Bigg Boss Tamil Season 8: சூடுபிடிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி… ஓபன் நாமினேஷனால் அதிரடியான ஆட்டம்!
இந்த படத்தைத் தொடர்ந்து சிவகார்திகேயன் இயக்குநர் முருகதாஸ் இயக்கதில் நடிக்க கமிட்டானார். படத்தின் அப்டேட்ட்குகள் அவ்வப்போது வந்தாலும் அந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் அப்டேட்டுகள் வந்துக்கொண்டே இருந்தாலும் தற்போது சிவகார்த்திகேயன் வெளியிட்ட அப்டேட் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also read… அரசு சொத்தை விலை பேசினேனா? விக்னேஷ் சிவன் விளக்கம்!
அதன்படி நடிகர் சிவகார்த்திகேயன் தனது 25-வது படத்திற்காக இயக்குநர் சுதா கொங்குராவுடன் கூட்டணி வைத்துள்ளார். இந்தப் படத்தின் பூஜைகள் நடைப்பெற்று புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதில் அவர் கூறியிருப்பதாவது, திருச்சியில் ஒரு தீவிர சினிமா ரசிகனாக இருந்து இங்கே வந்து தற்போது #SK25 வரை வந்திருப்பது எல்லாம் அற்புதமான பயணம். இதை சாத்தியப்படுத்திக்கொடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் என்றும் நன்றியுடையவன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிகர்கள் ஜெயம் ரவி மற்றும் அதர்வா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளனர். நடிகை ஸ்ரீலீலா நாயகியாக நடிக்க உள்ள இந்தப் படத்திற்கு அமரன் படத்தை தொடர்ந்து தற்போது ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைக்க உள்ளது குறிப்பிடதக்கது.