ஓடிடி வெளியீட்டில் தள்ளிப்போகும் ‘அமரன்’… காரணம் இதுதான்

Amaran OTT Release: நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் படத்தின் ஓடிடி உரிமையைப் பெற்றுள்ளது. படம் வெளியான 28 நாட்களில் ஓடிடியில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் படம் தற்போது திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் மேலும் ஒரு வாரம் கழித்து ஓடிடியில் வெளியாகும் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஓடிடி வெளியீட்டில் தள்ளிப்போகும் ‘அமரன்’... காரணம் இதுதான்

அமரன்

Published: 

12 Nov 2024 16:07 PM

நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 31-ம் தேதி வெளியான ‘அமரன்’ படம் ஓடிடியில் வெளியாக தாமதம் ஆகும் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது 21-வது படத்திற்காக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் கூட்டணி வைத்தார். இந்தப் படத்திற்கு ‘அமரன்’ என்று பெயர் வைத்தனர். சோனி பிக்சர்ஸுடன் இணைந்து இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

தமிழில் மீண்டும் ஒரு தேசபக்தி படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. முன்னதாக ஒரு விருது வழங்கும் விழாவில் சிவகார்த்திகேயனைப் பார்த்து நடிகர் விஜய் ‘புடுச்சிட்டாரு… குட்டீஸ் எல்லாரையும் புடுச்சிட்டாரு’ என்ற கூறியது போல ஒருதரப்பட்ட ரசிகர்கள் மட்டும் இன்றி நடிகர் விஜய்க்கு இருப்பது போல குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களும் சிவகார்த்திகேயனுக்கு உண்டு.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான மாவீரன் மற்றும் அயலான் ஆகிய இரண்டு படங்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக அயலான் படம் வெளியீட்டில் தாமதம் ஆனாலும் குழந்தைகளை கவரும் வகையில் இருந்ததால் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

நடிப்பு மட்டும் இன்றி பாடல்கள் எழுவது, படங்களை தயாரிப்பது போன்ற பணிகளிலும் நடிகர் சிவகார்த்திகேயன் ஈடுபட்டு வருகிறார். இவர் நடித்து தயாரித்த ‘கனா’ படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து காமெடி கதைகளைக் கொண்ட படங்களில் மட்டுமே நடித்து வந்த சிவகார்த்திகேயன் தற்போது கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார்.

சினிமாவில் நடிப்பதற்கு முன்பே இவர் தமிழ் ரசிகர்களிடையே பரிட்சையமான நபராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சின்னத்திரையில் அறிமுகமாகி பிறகு வெள்ளித்திரையில் நுழைந்த சிவகார்த்திகேயன் இப்போது கோலிவுட்டின் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக உள்ளார். நாயகனாக நடிக்கத் தொடங்கிய சிறிது காலத்திலேயே தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார் சிவகார்த்திகேயன்.

வெள்ளித்திரைக்கு வருவதற்கு முன்னரே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சின்னத்திரையிலேயே பிடித்தவர் தான் சிவகார்த்திகேயன். சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆவதற்கு முன் சிவகார்த்திகேயன் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகப் பணியாற்றினார். இவர் தொகுத்து வழங்கிய அத்தனை நிகழ்சிகளுமே டிஆர்பியில் நல்ல இடத்தைப் பிடித்தது.

Also read… படப்பிடிப்பில் சமந்தாவிற்கு நடந்த சோகம்… நடிகர் விளக்கம்!

மேஜர் முகுந்த் வரதராஜன் தனது 31-வது வயதில் இந்திய நாட்டை எதிரிகளிடம் இருந்து காப்பதற்காக தனது உயிர் தந்ததன் காரணமாக நாட்டின் மிக உயரிய விருதான அசோக் சக்ரா விருது அவருக்கு அறிவிக்கப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு குடியரசு தின விழாவில் அந்த விருதை மறைந்த முகுந்த்தின் மனைவி இந்து முகுந்த் பெற்றுக்கொண்டார்.

இந்த நிலையில் படம் கடந்த 31-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து படம் வெளியாகி 10 நாட்களை கடந்துள்ள நிலையில் படத்தின் வசூல் குறித்த படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி படம் உலகம் முழுவதும் ரூ. 200 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Also read… கங்குவா படத்திற்கு கூடுதல் காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி

இதனை தொடர்ந்தும் படம் நல்ல வசூலை செய்து வருகிறது. படம் தற்போது வரை 250 கோடிகளை கடந்தகாகவும் இணையத்தில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் படத்தின் ஓடிடி வெளியீடு தள்ளிப்போவதாக இணையத்தில் தகவல் வைரலாகி வருகின்றது.

அந்த வகையில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் படத்தின் ஓடிடி உரிமையைப் பெற்றுள்ளது. படம் வெளியான 28 நாட்களில் ஓடிடியில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் படம் தற்போது திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் மேலும் ஒரு வாரம் கழித்து ஓடிடியில் வெளியாகும் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

உணவில் தக்காளி சேர்ப்பது ஆபத்தானதா? - ஆய்வுகள் கூறுவது என்ன?
புரதத்தை எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும்?
குழந்தைகளிடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பது எப்படி?
... இதுதான் அதுக்கு காரணம் - ஐஸ்வர்ய லட்சுமி