Actor Sivakarthikeyan : நடிகர் சிவகார்த்திகேயனின் “SK25” படத்தின் தரமான அப்டேட்!
SK25 Movie Update : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று பிளாக் பஸ்டர் திரைப்படமாக அமைந்தது. இப்படத்தினை தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் SK 23 திரைப்படத்திலும் மற்றும் சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் SK 24 படத்திலும் கமிட்டாகியுள்ளார்.
தமிழ்த் திரைப்படங்களில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சிவகார்த்திகேயன். இயக்குநர் ராஜ் குமார் இயக்கத்தில் வெளியான அமரன் திரைப்படம் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. இந்நிலையில் இவர் தற்போது இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் SK 23 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படமான SK25 படத்தைப் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி வருகிறது. இயக்குநர் சுதா கொங்கரா இயக்கும் “புறநானூறு” ( SK 25) இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் முன்னணி கதாநாயகனாக நடிக்க உள்ளார். ஆரம்பத்தில் நடிகர் சூர்யா நடிக்கவிருந்த இப்படம் சில காரணங்களால் சூர்யா இப்படத்திலிருந்து விலகினார்.
இதைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்திற்குக் கதாநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜெயம் ரவி, அதர்வா மற்றும் ஸ்ரீலீலா என் பலரும் நடிக்கவுள்ளனர். இதில் நடிகர் ஜெயம் ரவி இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
பல பிரபலங்களுடன் பிரம்மாண்ட கதைகளுடன் உருவாகிவரும் இப்படத்திலிருந்து தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகி வருகிறது. சிவகார்த்திகேயன் நடிக்கும் SK25 திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் இன்று சென்னையில் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிவருகிறது.
சிவகார்த்திகேயனின் SK 25 பற்றிய தகவல் :
நடிகர் சிவகார்த்திகேயன் முன்னணி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தினை சூரரை போற்று பட இயக்குநர் சுதா கொங்கரா இயக்க உள்ளார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் SK23 மற்றும் SK24 போன்ற திரைப்படங்களில் தொடர்ந்து கமிட்டான நிலையில், தற்போது SK25 (புறநானூறு) திரைப்படத்திலும் நடிக்க உள்ளார்.
இப்படத்தின் கதைக்களமானது இந்தி மொழி திணிப்பிற்குத் தொடர்பான கதைக்களத்துடன் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி வில்லனாக நடிக்க உள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தைப் பிரபல தயாரிப்பு நிறுவனமான டான் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இதையும் படிங்க:மீண்டும் இணையும் செல்வராகவன் -ஜிவி பிரகாஷ்.. மேஜிக் நிகழுமா?
இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இப்படத்தினை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படங்களை பற்றிய தகவல்:
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அமரன் திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் ராஜ் குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நடிகை சாய் பல்லவி முன்னணி கதாநாயகியாக நடித்து அச்சத்திருந்தார்.
2024ம் ஆண்டில் எதிர்பார்ப்புகள் இல்லாமல் பெரும் வெற்றி பெற்ற தமிழ்த் திரைப்படத்தில் இப்படம் முன்னிலை வகிக்கிறது. இந்த திரைப்படம் உலகளாவிய வசூலில் சுமார் ரூ 350 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பல நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பாராட்டுகளையும் பெற்றது.
இதையும் படிங்க:குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டும் புகைப்படம்.. ராதிகா ஆப்தேவுக்கு குவியும் பாராட்டு!
இப்படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் SK23 என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்ட திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முக்கியமாகச் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்கள் பகுதிகளில் நடந்து வருகிறது.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் 2025ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இப்படத்தினை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார்.
இந்நிலையில் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் SK24 என்ற திரைப்படத்திலும் நடிக்க உள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்புகள் 2025ம் ஆண்டு இடைப்பட்ட மாதத்தில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக்க உள்ள “புறநானூறு” திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் ஜெயம் ரவி,அதர்வா மற்றும் நடிகை ஸ்ரீலீலா எனப் பல பிரபலங்கள் நடிக்க உள்ளார்கள்.
இந்நிலையில் SK24 திரைப்படத்திற்கு முன்னதாக SK (புறநானூறு) திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இன்று சென்னையில் ஆரம்பமாகி உள்ளது என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. இதைத் தொடர்ந்து இப்படத்தினை பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:அரசு கட்டிடத்தை விலைக்கு கேட்டாரா விக்னேஷ் சிவன்? நடந்தது என்ன?