வசூலில் பட்டையை கிளப்பும் ‘கருடன்’… இதுவரை எத்தனை கோடிகள் தெரியுமா?
Garudan Box Office collection: படத்தில் சூரி தவிர்த்து, சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். “நம்ம ஆசைப்பட்ட ஒரு விஷயத்துக்காக தப்பான வழியில போனா, கடவுளோ, இயற்கையோ அத சரியான வழியில முடிச்சு வைக்கும். ஏன்னா அது நம்ம தலைக்கு மேல கருடனா சுத்திட்டு இருக்கு” என்ற வசனத்துடன் தொடங்கும் ட்ரெய்லர் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பேசுபொருளானது. இந்நிலையில் இந்தப் படம் கடந்த 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
சூரி நடிப்பில் மிக பிரமாண்டமாக கடந்த வாரம் வெளியான ‘கருடன்’ படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. ‘எதிர் நீச்சல்’, ‘காக்கிச் சட்டை’, ‘கொடி’, ‘பட்டாசு’ படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்தப் படம் ‘கருடன்’. இந்தப் படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தினை பிரிவியூ ஷோவில் பார்த்தவர்கள் படம் குறித்த விமர்சனத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் கலக்கிக்கொண்டிருந்த நடிகர் சூரி, இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலை படத்திற்கு பின் கதாநாயகனாக மாறியிருக்கிறார். இப்படம் அவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்ததால் அடுத்தடுத்து நல்ல ஹீரோயிசம் உள்ள கதைகளில் தற்போது நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது வெற்றிமாறன் கதையில் சூரி நடித்துள்ள படம் ‘கருடன்’.
படத்தில் சூரி தவிர்த்து, சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். “நம்ம ஆசைப்பட்ட ஒரு விஷயத்துக்காக தப்பான வழியில போனா, கடவுளோ, இயற்கையோ அத சரியான வழியில முடிச்சு வைக்கும். ஏன்னா அது நம்ம தலைக்கு மேல கருடனா சுத்திட்டு இருக்கு” என்ற வசனத்துடன் தொடங்கும் ட்ரெய்லர் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பேசுபொருளானது. இந்நிலையில் இந்தப் படம் கடந்த 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
Also read… Movies List : இந்த வாரம் திரையரங்கில் வரிசைக் கட்டும் 7 தமிழ் படங்கள்… என்னென்ன தெரியுமா?
கிராமத்துப் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வசூலில் சாதனை படைத்து வருகிறது. கருடன் முதல் வாரத்திலேயே 18 கோடி மேல் வசூல் தாண்ட, தற்போது இரண்டாவது வாரம் தொடங்கிவிட்டது. கருடன் தற்போது வரை உலகம் முழுவதும் ரூ 30 கோடிகள் வசூல் செய்ய, தமிழகத்தில் 23 கோடிகள் வசூலை தாண்டியுள்ளது. கண்டிப்பாக இப்படம் இந்த வாரம் ரூ 40 கோடி தாண்டும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.