சூரியின் ‘கருடன்’ படம் எப்படி இருக்கு… இதோ முதல் விமர்சனம்!
Garudan Movie Review: படத்தில் சூரி தவிர்த்து, சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். “நம்ம ஆசைப்பட்ட ஒரு விஷயத்துக்காக தப்பான வழியில போனா, கடவுளோ, இயற்கையோ அத சரியான வழியில முடிச்சு வைக்கும். ஏன்னா அது நம்ம தலைக்கு மேல கருடனா சுத்திட்டு இருக்கு” என்ற வசனத்துடன் தொடங்கும் ட்ரெய்லர் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பேசுபொருளானது.
‘எதிர் நீச்சல்’, ‘காக்கிச் சட்டை’, ‘கொடி’, ‘பட்டாசு’ படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்தப் படம் ‘கருடன்’. இந்தப் படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தினை பிரிவியூ ஷோவில் பார்த்தவர்கள் படம் குறித்த விமர்சனத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் கலக்கிக்கொண்டிருந்த நடிகர் சூரி, இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலை படத்திற்கு பின் கதாநாயகனாக மாறியிருக்கிறார். இப்படம் அவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்ததால் அடுத்தடுத்து நல்ல ஹீரோயிசம் உள்ள கதைகளில் தற்போது நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது வெற்றிமாறன் கதையில் சூரி நடித்துள்ள படம் ‘கருடன்’.
படத்தில் சூரி தவிர்த்து, சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். “நம்ம ஆசைப்பட்ட ஒரு விஷயத்துக்காக தப்பான வழியில போனா, கடவுளோ, இயற்கையோ அத சரியான வழியில முடிச்சு வைக்கும். ஏன்னா அது நம்ம தலைக்கு மேல கருடனா சுத்திட்டு இருக்கு” என்ற வசனத்துடன் தொடங்கும் ட்ரெய்லர் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பேசுபொருளானது.
இந்நிலையில், இப்படத்திற்கு தணிக்கைக்குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியிருந்தது. இதனை நடிகர் சூரி தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்திருந்தார்.
#Garudan Good rural action drama…
Racy screenplay with strong emotion and raw action…Good role for Sasikumar & Unni Mukunthan…
Interval, Preclimax, Climax Soori na Sambhavam🔥🔥🔥 pic.twitter.com/M5WkbwSKaH
— Karthik Ravivarma (@Karthikravivarm) May 30, 2024
இந்த நிலையில் படத்தை ரிலீஸுக்கு முன் படத்தை பார்த்தவர்கள் தங்களுடைய விமர்சனங்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளனர். “சிறந்த ஆக்ஷன் ட்ராமா திரைப்படம் கருடன். வலுவான எமோஷன் மற்றும் வெறித்தனமான ஆக்ஷன். சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தனின் கதாபாத்திரங்கள் சிறப்பு. இடைவேளை காட்சி, ப்ரீ கிளைமாக்ஸ் மற்றும் கிளைமாக்ஸில் சூரியின் சம்பவம்” என விமர்சனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.