Rajini vs Suriya: விஜய், அஜித்தை தொடர்ந்து ரஜினியை எதிர்க்க தயாரான சூர்யா! - Tamil News | actor suriya 2nd time clash with actor rajinikanth on movie release | TV9 Tamil

Rajini vs Suriya: விஜய், அஜித்தை தொடர்ந்து ரஜினியை எதிர்க்க தயாரான சூர்யா!

Updated On: 

25 Sep 2024 09:15 AM

அண்ணாத்த படத்தை எடுத்த சிறுத்தை சிவா இப்போது சூர்யாவை வைத்து கங்குவா எடுத்துள்ளார். அதேபோல் சூர்யாவை வைத்து ஜெய்பீம் எடுத்த ஞானவேல் ரஜினியை வைத்து வேட்டையன் இயக்கியுள்ளார். இந்த நிலையில் திரையில் இதுவரை நேருக்கு நேர் மோதாத ரஜினி, சூர்யா படங்கள் களம் காண்பதால் ஆட்டம் சூடுபிடித்துள்ளது. 

Rajini vs Suriya: விஜய், அஜித்தை தொடர்ந்து ரஜினியை எதிர்க்க தயாரான சூர்யா!

கோப்பு புகைப்படம்

Follow Us On

வேட்டையன்: லைகா நிறுவனம் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், அமிதாப்பச்சன், ஃபகத் ஃபாஸில்,  ராணா டகுபதி, அபிராமி, ரம்யா சுப்ரமணியம், கிஷோர், ரெட்டின் கிங்ஸ்லி,  ரோகிணி, ரவி மரியா ரமேஷ் திலக், சிங்கம்புலி, ஜி எம் சுந்தர் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 12 ஆம் தேதி ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி விடுமுறை வருவதால் அதனை கருத்தில் கொண்டு படம் வெளியாகவுள்ளது. முன்னதாக அக்டோபர் மாதம் படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டபோது கண்டிப்பாக தீபாவளி வெளியீடாக இருக்கும் என ரஜினி ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால் முன்கூட்டியே படம் வெளியாவது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: மனைவியை மகிழ்ச்சியாக வைக்க கணவர் செய்ய வேண்டியவை..!

அதேசமயம் இம்முறை ரஜினியுடன் நேருக்கு நேராக நடிகர் சூர்யாவின் கங்குவா படம் மோதப்போகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், ரெட்டின் கிங்ஸ்லி, யோகிபாபு, கோவை சரளா, கே.எஸ்.ரவிகுமார், நட்டி சுப்பிரமணியம், ஜெகபதி பாபு என பலரும் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தை மிகப் பிரமாண்டமான முறையில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. கங்குவா படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பே அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படி வேட்டையன் படமும் அதேநாளில் களம் காண்பதால் கங்குவா ரிலீஸ் தேதி தள்ளிப்போகுமா என்பது கேள்வி எழுந்துள்ளது.

விஜய், அஜித்தை தொடர்ந்து சூர்யா

 

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ரஜினி படங்கள் ரிலீசாகும்போது பெரும்பாலும் மற்ற நடிகர்கள் தங்கள் படங்களை வெளியிட தயங்குவார்கள். அதற்கு காரணம் கதையே இல்லையென்றாலும் ரஜினிக்கு இருக்கும் மார்க்கெட் நிலவரம் மற்ற படங்களை ஒன்றும் இல்லாமல் செய்து விடும். இப்படியான நிலையில் 2004 ஆம் ஆண்டு ரஜினி நடித்த சந்திரமுகி படம் வெளியானபோது விஜய் நடித்த சச்சின் படம் வெளியானது. இது அப்போது தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டது. சந்திரமுகி 800 நாட்கள் ஓட, சச்சின் வெற்றிப்படமாக அமைந்தாலும் வெளியே தெரியாமல் போனது.

இதையும் படிங்க: Temple Special: ரக்‌ஷாபந்தன் அன்று மட்டுமே திறக்கப்படும் கோயில்.. ஏன் தெரியுமா?

இதன்பின்னர் கிட்டதட்ட 15 ஆண்டுகள் ரஜினி படம் வெளியாகும் போதெல்லாம் மற்ற நடிகர்கள் படம் ரிலீசாகாமல் இருந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு ரஜினியின் பேட்ட படம் வெளியானது. அதே நாளில் அஜித்குமார் நடித்த பேட்ட படம் வெளியானது. இதில் இரண்டு படங்களும் நல்ல வெற்றியைப் பெற்றது. 2021 ஆம் ஆண்டு ரஜினி நடித்த அண்ணாத்த படம் வெளியானது.அதே வாரத்தில் இரண்டு தினங்கள் முன்னதாக சூர்யா நடித்த ஜெய்பீம் படம் ஓடிடியில் வெளியானது. அப்போது அண்ணாத்த படத்தை எடுத்த சிறுத்தை சிவா இப்போது சூர்யாவை வைத்து கங்குவா எடுத்துள்ளார். அதேபோல் சூர்யாவை வைத்து ஜெய்பீம் எடுத்த ஞானவேல் ரஜினியை வைத்து வேட்டையன் இயக்கியுள்ளார். இந்த நிலையில் திரையில் இதுவரை நேருக்கு நேர் மோதாத ரஜினி, சூர்யா படங்கள் களம் காண்பதால் ஆட்டம் சூடுபிடித்துள்ளது.

நடிகை ஹன்சிகா மோத்வானியின் ரீசென்ட் ஆல்பம்
அழகியே... மிருணாள் தாகூரின் அசத்தல் ஆல்பம்
இணையத்தை கலக்கும் டாப்ஸி பன்னுவின் லேட்டஸ்ட் ஆல்பம்
நடிகை ஐஸ்வர்ய லட்சுமியின் நியூ ஆல்பம்
Exit mobile version