5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

விஜயின் அரசியல் என்ட்ரி… மறைமுகமாக வாழ்த்திய சூர்யா!

கங்குவா படம் வருகிற நவம்பர் 14-ந் தேதி படத்தை வெளியிடுவதாக கங்குவா தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் நேற்று படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றது. அதில் நடிகர் விஜயின் அரசியல் பயணத்திற்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்ததாக இணையத்தில் தகவல்கள் வைரலாகி வருகின்றது.

விஜயின் அரசியல் என்ட்ரி… மறைமுகமாக வாழ்த்திய சூர்யா!
விஜய், சூர்யா
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 27 Oct 2024 14:31 PM

நடிகர் விஜயின் அரசியல் வருகைக்கு நடிகர் சூர்யா மறைமுகமாக வாழ்த்தியதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகி வருகின்றது. சூர்யாவின் நடிப்பில் தற்போது உருவாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கங்குவா. இந்த படத்தினை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்குகின்றார். மன்னர் காலக் கதையைக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த படம்தான் சூர்யாவின் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வரும் படம். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், கோவை சரளா, யோகிபாபு, ரெட்டின் கிங்ஸ்லி, நடராஜன் சுப்பிரமணியன், ஜெகபதி பாபு, கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். கங்குவா மற்றும் சூர்யா 44 என இரண்டு படங்களிலும் பிசியாக வேலை செய்து வருகிறார் சூர்யா.

இந்தப் படம் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் படம் எடுக்கப்பட்டு வருகிறது.  13 விதமான தோற்றங்களில் சூர்யா நடிப்பதாக தெரிவிக்கப்பட்டிருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படம் கடந்த பொங்கலுக்கே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்புத் தளத்தில் சூர்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டதால், படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடிக்க முடியாமல் போனது.

கிட்டதட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும், யுவி கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து பெரும் பொருட்செலவில் கங்குவா படத்தை தயாரிக்கிறது.

இத்திரைப்படம் வருகிற நவம்பர் 14-ந் தேதி படத்தை வெளியிடுவதாக கங்குவா தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் நேற்று படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றது. அதில் நடிகர் விஜயின் அரசியல் பயணத்திற்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்ததாக இணையத்தில் தகவல்கள் வைரலாகி வருகின்றது.

அதன்படி சூர்யா பேசியதாவது, சமீபத்தில் துணை முதல்வராக பதியேற்ற நண்பர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். அதனை தொடர்ந்து, “இன்னொரு நண்பர் இருக்கிறார், ஒரு புதிய பாதை போட்டு, ஒரு புதிய பயணத்திற்காக காத்திருக்கிறார். அவருடைய வரவி நல்வரவாக இருக்கட்டும்” என்று நடிகர் விஜயின் அரசியல் வரவிற்கு மறைமுகமாக வாழ்த்து தெரிவித்துள்ளார் என்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also read… சினிமாவில் நடிக்க வந்ததற்கு இதுதான் காரணம்… நடிகர் சூர்யா சொன்ன விஷயம்!

விஜய் அரசியலில் களமிறங்க உள்ளார் என்ற தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்த நிலையில், அவர் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தனது கட்சி பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவர் தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம்(Tamizhaga Vetri kazhagam) என்று அறிவித்தார். கட்சி பெயரில் எழுதுப் பிழை இருப்பதாக பலர் கருத்து தெரிவித்ததும் கட்சியின் பெயரினை, தமிழக வெற்றிக் கழகம் என மாற்றி அறிவித்தார்.

Also read… வைரலான வீடியோ… அதிரடி முடிவெடுத்த சாய் பல்லவி!

முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதால் படங்களில் நடிப்பதை நிறுத்துவதாகவும் விஜய் தரப்பில் இருந்து தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வந்தது. இதனை அடுத்து தனது கடைசி படம் தளபதி 69 என்று அறிவித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தப் படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்கவுள்ளார். படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பூஜையுடன் தொடங்கியது.

இந்த நிலையில் இன்று விஜயின் அரசியல் மாநாடு விக்ரவாண்டியில் நடைபெற உள்ளது. இதன் ஏற்பாடுகள் அனைத்தும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இருந்தே விறுவிறுப்பாக தொடங்கியது. இந்த நிலையில் மாலை நடைபெற உள்ள மாநாட்டிற்கு காலையில் இருந்தே மக்களின் வருகை குவியத் தொடங்கியது குறிப்பிடதக்கது.

Latest News