ரஜினியுடன் மோதும் சூர்யா… கங்குவா ரிலீஸ் தேதியை வெளியிட்டது படக்குழு! - Tamil News | Actor suriya starrer Kanguva movie hit screen From October 10th | TV9 Tamil

ரஜினியுடன் மோதும் சூர்யா… கங்குவா ரிலீஸ் தேதியை வெளியிட்டது படக்குழு!

Published: 

28 Jun 2024 07:40 AM

Kanguva Movie Update: இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், கோவை சரளா, யோகிபாபு, ரெட்டின் கிங்ஸ்லி, நடராஜன் சுப்பிரமணியன், ஜெகபதி பாபு, கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்து வருகின்றனர்.  தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். 10க்கும் மேற்பட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் படம் எடுக்கப்பட்டு வருகிறது.  13 விதமான தோற்றங்களில் சூர்யா நடிப்பதாக தெரிவிக்கப்பட்டிருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ரஜினியுடன் மோதும் சூர்யா... கங்குவா ரிலீஸ் தேதியை வெளியிட்டது படக்குழு!

கங்குவா

Follow Us On

நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘கங்குவா’ படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறித்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். சூர்யாவின் நடிப்பில் தற்போது உருவாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கங்குவா. இந்த படத்தினை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்குகின்றார். மன்னர் காலக் கதையைக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த படம்தான் சூர்யாவின் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வரும் படம். கிட்டதட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும், யுவி கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து பெரும் பொருட்செலவில் கங்குவா படத்தை தயாரிக்கிறது. படம் குறித்த எந்தவித அப்டேட்டும் இல்லாததால் சூர்யா ரசிகர்கள் தங்களது அதிர்ப்த்தியை வெளிபடுத்தி வந்த நிலையில் படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்து ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது படக்குழு.

இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், கோவை சரளா, யோகிபாபு, ரெட்டின் கிங்ஸ்லி, நடராஜன் சுப்பிரமணியன், ஜெகபதி பாபு, கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்து வருகின்றனர்.  தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். 10க்கும் மேற்பட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் படம் எடுக்கப்பட்டு வருகிறது.  13 விதமான தோற்றங்களில் சூர்யா நடிப்பதாக தெரிவிக்கப்பட்டிருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த படம் கடந்த பொங்கலுக்கே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்புத் தளத்தில் சூர்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டதால், படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடிக்க முடியாமல் போனது. இதனால் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்தது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்துவிட்டது எனவும் தற்போது கம்யூட்டர் க்ராஃபிக்ஸ் வேலைகள்தான் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

Also read… பிரபாஸின் ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக இந்த படத்தின் டீசர் வெளியாகி சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். சரியானநேரத்தில் ரிலீஸ் செய்ய முடியவில்லை என்றால் எதற்காக தயாரிக்க வேண்டும் என்பது போன்ற போஸ்டர்களையும் ரசிகர்கள் பொதுவெளியில் ஒட்டி தங்களது அதிர்ப்த்தியை வெளிப்படுத்தினர்.

இதற்கு மேல் அப்டேட் எதுவும் கொடுக்காமல் இருந்தால் ரசிகர்களின் கோபம் அதிகரிக்கும் என்பதை உணர்ந்த படக்குழுவினர் தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அக்டோபர் மாதம் 10ம் தேதி இந்த படம் உலக அளவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் தங்களது எக்ஸ் தள பக்கத்தில் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அத்துடன் நடிகர் ரஜினி நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கி வரும் ‘வேட்டையன்’ திரைப்படம், ‘கங்குவா’ வெளியாகும் அதே நாளில் வெளியாக உள்ளது. ரஜினியும் சூர்யாவும் நேருக்கு நேர் மோத உள்ளது ரசிகர்களிடையே இன்னும் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version