மூன்று வார முடிவில் கங்குவா வசூலித்தது எவ்வளவு தெரியுமா? விவரம் இதோ

350 கோடிக்கும் அதிகமாக செலவு செய்து எடுக்கப்பட்ட படம் 100 கோடியை தாணவே திணறியது. படத்தில் ஒலி அதிகமாக இருப்பதாக வந்த விமர்சனத்தை தொடர்ந்து ஒலியின் அளவை படக்குழு குறைத்தது. ஆனாலும் படத்தில் வரும் வசனங்களை விட பின்ன்ணி ஒலி அதிகமாக இருந்ததால் வசனம் சரியாக புரியவில்லை என்றும் படத்தை பார்த்தவர்கள் விமர்சனம் செய்தனர்.

மூன்று வார முடிவில் கங்குவா வசூலித்தது எவ்வளவு தெரியுமா? விவரம் இதோ

கங்குவா

Published: 

02 Dec 2024 12:49 PM

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் 14-ம் தேதி வெளியான ‘கங்குவா’ படத்தின் மூன்று வார வசூல் குறித்த விவரம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான படம் எதற்கும் துணிந்தவன். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தது. அதனை தொடர்ந்து வணங்கான், கங்குவா, வாடிவாசல், புறநானூறு ஆகிய படங்களில் கமிட்டானார். இந்த வரிசையில் முன்னதாக வணங்கானிலிருந்து வெளியேறிய சூர்யா வாடிவாசலில் நடிக்கிறாரா இல்லையா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. இந்த நிலையில்  நடிகர் சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது கங்குவா படம். இந்தப் படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். சூர்யாவின் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 

இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், கோவை சரளா, யோகிபாபு, ரெட்டின் கிங்ஸ்லி, நடராஜன் சுப்பிரமணியன், ஜெகபதி பாபு, கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். யுவி கிரியேஷன்ஸ் நிறுவனமும், ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து பெரும் பொருட்செலவில் சூர்யாவின் கங்குவா படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படம் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் படம் எடுக்கப்பட்டது.

இந்தப் படம் மன்னர் காலக் கதையைக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. கிட்டதட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான படம் எதற்கும் துணிந்தவன். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தது.

படம் கி.பி 1070-ல் தொடங்குவது போன்று காட்டப்படும். அப்போது கடலுக்குள் சுற்றும் ரோமானியர்களின் கப்பல் படை தங்களது வீரர்கள் ஓய்வு பெற ஒரு இடத்தை தேடுகின்றனர்.  அப்போது கடலை சுற்றி உள்ள 5 தீவுகளில் எந்த தீவை தேர்ந்தெடுப்பது என்று வரும் போது நடிகர் சூர்யா இருக்கும் பெருமாச்சி தீவை ரோமானியர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.

அந்த தீவின் இளவரசனாக சூர்யா இருக்கிறார். அந்த தீவை அடைவதற்காக பல சூழ்ச்சிகள் நடக்கிறது.போஸ் வெங்கெட் ரோமானியர்களுடன் கூட்டு சேர்ந்து நட்டியை வைத்து சூர்யாவின் பெருமாச்சி தீவை கைப்பற்ற சூழ்ச்சி செய்கிறார். இந்த சூழ்ச்சியில் பெருமாச்சியில் உள்ள 100 பேர் நட்டியால் கொலை செய்வதற்காக அழைத்து செல்லப்படுகின்றனர்.

Also read… Bigg Boss Tamil Season 8: பிக்பாஸில் இந்த வாரம் ஓபன் நாமினேஷன்… யார் யாரை நாமினேட் செய்கிறார்கள்?

அந்த கூட்டத்தில் இருந்து கருணாஸ் தப்பித்து பெருமாச்சி இளவரசனான சூர்யாவிடம் தகவலை கூறுகிறார். அதனை தொடர்ந்து நட்டியை பெருமாச்சி இளவரசன் சூர்யா கொலை செய்கிறார். அவருடன் சேர்ந்து அவரது மனைவியும் இறந்துவிடுகிறார். இதனை நேரில் பார்த்த நட்டியின் மகன் சூர்யாவை கொலை செய்ய சூர்யாவுடனே இருந்து திட்டம் தீட்டுகிறான்.

ஆனால் அந்த சிறுவனை சூர்யா தனது மகனாக நினைத்து வளர்க்க நினைக்கிறார். அப்போது மீண்டும் போஸ் வெங்கட் சூர்யாவின் பெருமாட்சி தீவிற்கு எதிரியாக இருக்கும் பாபி தியியோல் மன்னனாக இருக்கு ஆரத்தி தீவிற்கு சென்று அந்த தீவை பெற்றுத் தருமாறு கோரிக்கை வைக்கிறார்.

எதிரி தீவை அழித்தால் தங்க காசுகள் கிடைக்கிறது என்ற ஆசையில் பாபி தியோல் அதற்கு சம்மதித்து அந்த தீவின் மீது போர் தொடுக்க முடிவு செய்கிறார். எதிரிகளிடம் இருந்து சூர்யா தனது தீவை காப்பாற்றினாறா? நட்டியின் மகன் அந்த  சிறுவன் சூர்யாவை என்ன செய்கிறார் என்பது படத்தின் கதை.

Also read… ஓடிடியில் கலக்கும் ’லக்கி பாஸ்கர்’ படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

350 கோடிக்கும் அதிகமாக செலவு செய்து எடுக்கப்பட்ட படம் 100 கோடியை தாணவே திணறியது. படத்தில் ஒலி அதிகமாக இருப்பதாக வந்த விமர்சனத்தை தொடர்ந்து ஒலியின் அளவை படக்குழு குறைத்தது. ஆனாலும் படத்தில் வரும் வசனங்களை விட பின்ன்ணி ஒலி அதிகமாக இருந்ததால் வசனம் சரியாக புரியவில்லை என்றும் படத்தை பார்த்தவர்கள் விமர்சனம் செய்தனர்.

இந்த நிலையில் படம் வெளியாகி தற்போது 3 வாரங்களை கடந்துள்ள நிலையில் படம் எவ்வளவு வசூலித்தது என்பது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி படம் இதுவரை

குளிர் காலத்தில் பட்ஜெட்டில் சுற்றுலா செல்ல வேண்டுமா?
எந்த மாதிரி பார்ட்னர் கிடைத்தால் ஓகே சொல்லலாம்?
40 வயதிற்கு பிறகு கைவிட வேண்டிய பழக்கங்கள்..!
பூண்டு சாப்பிடுவது யாருக்கு நல்லதல்ல..?