Kanguva Box Office Collections: கல்லா கட்டிய கங்குவா.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? - Tamil News | Actor Suriya's Kanguva Movie day 1 Box office collections Details | TV9 Tamil

Kanguva Box Office Collections: கல்லா கட்டிய கங்குவா.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Updated On: 

15 Nov 2024 08:56 AM

Kanguva: கங்குவா படத்தில் நடிகர் சூர்யா 2 மாறுபட்ட கேரக்டரில் நடித்துள்ளார். குறிப்பாக கங்குவா கேரக்டரில் நடிக்க அதிக சிரமம் எடுத்துக் கொண்டுள்ளார். படத்திற்கு மிகப்பெரிய பலமாக கலை, கிராபிக்ஸ், ஒளிப்பதிவு ஆகியவை அமைந்துள்ளது. பெருமாச்சி உலகத்தை நம் கண் முன்னே ரியலாக காட்டியிருக்கிறார்கள். கங்குவா படம் கண்டிப்பாக சூர்யாவின் நடிப்பில் மிகச்சிறந்த படமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

1 / 6நடிகர்

நடிகர் சூர்யா நடித்த கங்குவா படம் நவம்பர் 14 ஆம் தேதியான நேற்று உலகமெங்கும் வெளியானது. 2 ஆண்டுகளுக்குப் பின் சூர்யா படம் வெளியானதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். தியேட்டர்கள் திருவிழாக்கோலம் பூண்டது.

2 / 6

சிவா இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள கங்குவா படத்தில் ஹீரோயினாக திஷா பதானி நடித்துள்ளார். மேலும் பாபி தியோல், ரெட்டி கிங்ஸ்லி, கே.எஸ்.ரவிகுமார், கோவை சரளா, ஆனந்தராஜ், நட்டி, யோகிபாபு என பலரும் நடித்திருக்கின்றனர்.

3 / 6

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகர் கார்த்தி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் கங்குவா 2ஆம் பாகத்துக்கான லீடும் கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று வெளியான கங்குவா ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.

4 / 6

13 மொழிகளில் வெளியாகியுள்ளதாக சொல்லப்படும் கங்குவா, 2டி மற்றும் 3டி தொழில்நுட்பத்திலும் ரிலீசாகியுள்ளது. படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் பிரமாண்டமாக உள்ள நிலையில் திரைக்கதையில் சொதப்பியுள்ளதாக பலரும் தெரிவித்துள்ளனர்.

5 / 6

இதனிடையே கங்குவா படம் முதல் நாளில் ரூ.22 கோடி இந்தியாவில் வசூல் செய்துள்ளதாக sacnilk தளம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகமெங்கிலும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்கிரீனில் கங்குவா படம் வெளியாகியுள்ளது.

6 / 6

வார விடுமுறை நாளை தொடங்கவுள்ள உள்ள நிலையில் இனிமேல் தான் படத்தின் வசூல் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சமூக வலைத்தளங்களில் நெகட்டிவ் விமர்சனம் பரவி வருவதால் படக்குழு கவலையடைந்துள்ளது.

கிராம்பை வாயில் வைத்து தூங்கலாமா?
3 வேளை சாதம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்னையா?
கரும்பு சாறு குடிப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்..!
தேங்காய் பால் கூந்தலுக்கு ஏன் வரப்பிரசாதம் தெரியுமா..?