இணையத்தைக் கலக்கும் சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் முதல் விமர்சனம்!

இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், கோவை சரளா, யோகிபாபு, ரெட்டின் கிங்ஸ்லி, நடராஜன் சுப்பிரமணியன், ஜெகபதி பாபு, கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். கங்குவா மற்றும் சூர்யா 44 என இரண்டு படங்களிலும் பிசியாக வேலை செய்து வருகிறார் சூர்யா.

இணையத்தைக் கலக்கும் சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் முதல் விமர்சனம்!

‘கங்குவா’

Published: 

24 Oct 2024 14:37 PM

நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா படம் குறித்து வெளியான முதல் விமர்சனம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிக் கட்டிப் பறப்பவர் நடிகர் சூர்யா. தமிழில் மட்டும் கவனம் செலுத்தி வந்த சூர்யா தற்போது ஹிந்தி சினிமா பக்கமும் கவனத்தை திருப்பியிருக்கிறார். விரைவில் அவர் ஒரு ஹிந்தி படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தோல்வியையே சந்தித்தது. அதனையடுத்து வணங்கான், கங்குவா, வாடிவாசல், புறநானூறு ஆகிய படங்களில் கமிட்டானார். இவற்றில் வணங்கானிலிருந்து வெளியேறிய அவர் வாடிவாசலில் நடிக்கிறாரா இல்லையா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.

நடிகர் சூர்யாவின் உண்மையான பெயர் சரவணன் சிவக்குமார். இதுதான் அவரது பெற்றோர்கள் அவருக்கு வைத்த பெயர். சரவணனின் பெயரை சூர்யா என்று மாற்றியது இயக்குநர் மணிரத்னம். சரவணன் என்று ஒரு நடிகர் திரைத்துறையில் இருப்பதால் குழப்பம் ஏற்படாமல் இருக்கு இந்த பெயரை அவர் வைத்துள்ளார். சூர்யாவுக்கு ஆரம்பத்தில் நடிப்பில் ஆர்வம் இல்லை, சிறுவயதில் இருந்தே இயக்குனராக வேண்டும் என்றே விரும்பினார்.

படிப்பை முடித்துவிட்டு நடிக்கத் தொடங்குவதற்கு முன் கார்மென்ஸ் தொழிற்சாலை ஒன்றில் மேனேஜராக பணிபுரிந்துள்ளார். 1997-ம் ஆண்டு இயக்குநர் வசந்த் இயக்கத்தில் மணிரத்னம் தயாரிப்பில் உருவான ’நேருக்கு நேர்’ என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் சூர்யா. முதல் 4 வருடங்களுக்கு பெரிய ஹிட் கொடுக்க முடியாத சூர்யாவின் திரை வாழ்வில் திருப்பு முனையாக அமைந்தது 2001-ம் ஆண்டு வெளியான ‘நந்தா’ படம்.

2003-ம் ஆண்டு காவல் துறை அதிகாரியாக காக்க காக்க படத்தில் கலக்கியிருப்பார். இது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. கஜினி மற்றும் சிங்கம் போன்ற அவரது பல படங்கள் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டன. சமீபத்தில் சூரரைப் போற்று படமும் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது குறிப்பிடதக்கது. ராம் கோபால் வர்மாவின் கேங்ஸ்டர் படமான ரக்த சரித்ரா 2 மூலம் சூர்யா ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் அறிமுகமானார்.

சூர்யாவின் நடிப்பில் தற்போது உருவாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கங்குவா. இந்த படத்தினை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்குகின்றார். மன்னர் காலக் கதையைக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த படம்தான் சூர்யாவின் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வரும் படம். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

Also read… Bigg Boss Tamil Season 8: பிக்பாஸில் ஆண்கள் பெண்கள் கலந்து விளையாடும் டாஸ்க்… நடக்கப்போவது ஜாலியா? சண்டையா?

இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், கோவை சரளா, யோகிபாபு, ரெட்டின் கிங்ஸ்லி, நடராஜன் சுப்பிரமணியன், ஜெகபதி பாபு, கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். கங்குவா மற்றும் சூர்யா 44 என இரண்டு படங்களிலும் பிசியாக வேலை செய்து வருகிறார் சூர்யா. கிட்டதட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும், யுவி கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து பெரும் பொருட்செலவில் கங்குவா படத்தை தயாரிக்கிறது.

இந்தப் படம் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் படம் எடுக்கப்பட்டு வருகிறது.  13 விதமான தோற்றங்களில் சூர்யா நடிப்பதாக தெரிவிக்கப்பட்டிருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படம் கடந்த பொங்கலுக்கே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்புத் தளத்தில் சூர்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டதால், படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடிக்க முடியாமல் போனது.

இத்திரைப்படம் வருகிற நவம்பர் 14-ந் தேதி படத்தை வெளியிடுவதாக கங்குவா தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் படம் குறித்த முதல் விமர்சனம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி பாடலாசிரியர் மதன் கார்க்கி தனது ட்விட்டர் பக்கத்தில் கங்குவா படம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கங்குவாவின் முழுப் பதிப்பைப் பார்த்தேன். டப்பிங் செய்யும் போது ஒவ்வொரு காட்சியையும் நூறு தடவைகளுக்கு மேல் பார்த்திருக்கிறேன், ஆனாலும் ஒவ்வொரு பார்வைக்கும் படத்தின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. படத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பு மிகச்சிறப்பாக உள்ளது என்றும் அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!