நலமான தீபாவளி வாழ்த்துகள்… கங்குவா படக்குழு வெளியிட்ட சிறப்பு போஸ்டர்
இந்தப் படம் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் படம் எடுக்கப்பட்டு வருகிறது. நடிகர் சூர்யா இந்தப் படத்தில் 13 விதமான தோற்றங்களில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டிருப்பதால் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படம் கடந்த பொங்கலுக்கே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டதால் படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடிக்க முடியாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா படக்குழு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய போஸ்டருடன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிக் கட்டிப் பறப்பவர் நடிகர் சூர்யா. தொடர்ந்து தமிழ் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்த நடிகர் சூர்யா தற்போது ஹிந்தி சினிமாவிலும் தனது கவனத்தை திருப்பியிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் சூர்யா ஒரு ஹிந்தி படத்தில் நடிப்பார் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. நடிகர் சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான படம் எதற்கும் துணிந்தவன். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக தோல்வியையே சந்தித்தது. அதனை தொடர்ந்து வணங்கான், கங்குவா, வாடிவாசல், புறநானூறு ஆகிய படங்களில் கமிட்டானார். இந்த வரிசையில் முன்னதாக வணங்கானிலிருந்து வெளியேறிய சூர்யா வாடிவாசலில் நடிக்கிறாரா இல்லையா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.
நடிகர் சூர்யாவின் உண்மையான பெயர் சரவணன் சிவக்குமார். இதுதான் அவரது பெற்றோர்கள் அவருக்கு வைத்த பெயர். சரவணனின் பெயரை சூர்யா என்று மாற்றியது இயக்குநர் மணிரத்னம். சரவணன் என்று ஒரு நடிகர் திரைத்துறையில் இருப்பதால் குழப்பம் ஏற்படாமல் இருக்கு இந்த பெயரை அவர் வைத்துள்ளார். சூர்யாவுக்கு ஆரம்பத்தில் நடிப்பில் ஆர்வம் இல்லை, சிறுவயதில் இருந்தே இயக்குனராக வேண்டும் என்றே விரும்பினார்.
படிப்பை முடித்துவிட்டு நடிப்பு துறைக்கு வருவதற்கு முன் கார்மென்ஸ் கம்பெனி ஒன்றில் மேனேஜராக பணிபுரிந்துள்ளார் நடிகர் சூர்யா. 1997-ம் ஆண்டு இயக்குநர் வசந்த் இயக்கத்தில் மணிரத்னம் தயாரிப்பில் உருவான ’நேருக்கு நேர்’ என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் சூர்யா. சினிமாவிற்கு வந்த முதல் 4 வருடங்களுக்கு பெரிய அளவில் ஹிட் கொடுக்க முடியாமல் இருந்தார் சூர்யா. சூர்யாவின் திரை வாழ்வில் திருப்பு முனையாக அமைந்தது 2001-ம் ஆண்டு வெளியான ‘நந்தா’ படம். இந்தப் படத்தை இயக்குநர் பாலா இயக்கியிருந்தார்.
கடந்த 2003-ம் ஆண்டு காவல் துறை அதிகாரியாக இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான காக்க காக்க படத்தில் கலக்கியிருப்பார் சூர்யா. இது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. கஜினி மற்றும் சிங்கம் போன்ற அவரது பல படங்கள் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டன. சமீபத்தில் சூரரைப் போற்று படமும் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது குறிப்பிடதக்கது.
நடிகர் சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது கங்குவா படம். இயக்குநர் சிறுத்தை சிவா இந்த படத்தினை இயக்கியுள்ளார். இந்தப் படம் மன்னர் காலக் கதையைக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யாவின் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வரும் இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
Also read… சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படத்திலிருந்து வெளியானது ‘உயிரே’ லிரிக்கள் வீடியோ
இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், கோவை சரளா, யோகிபாபு, ரெட்டின் கிங்ஸ்லி, நடராஜன் சுப்பிரமணியன், ஜெகபதி பாபு, கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். நடிகர் சூர்யா கங்குவா மற்றும் சூர்யா 44 என இரண்டு படங்களிலும் பிசியாக வேலை செய்து வருகிறார். கிட்டதட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. யுவி கிரியேஷன்ஸ் நிறுவனமும், ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து பெரும் பொருட்செலவில் சூர்யாவின் கங்குவா படத்தை தயாரித்துள்ளது.
இந்தப் படம் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் படம் எடுக்கப்பட்டு வருகிறது. நடிகர் சூர்யா இந்தப் படத்தில் 13 விதமான தோற்றங்களில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டிருப்பதால் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படம் கடந்த பொங்கலுக்கே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டதால் படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடிக்க முடியாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.
Ignite a Fire of courage, Unleash the Warrior within and Conquer the World 🔥🎇
Wishing you all a #Nalamaa-na Diwali 🪔
From team #Kanguva 🦅#KanguvaFromNov14 🦅@Suriya_offl @thedeol @directorsiva @ThisIsDSP @DishPatani #StudioGreen @gnanavelraja007 @vetrivisuals… pic.twitter.com/1lJDUo0BSY
— Studio Green (@StudioGreen2) October 31, 2024
இந்த நிலையில் படம் வருகின்ற நவம்பர் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில் படக்குழுவினர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.