5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

கங்குவா வசூல் என்ன? 5 நாட்கள் கலெக்‌ஷன் விவரம்!

Kanguva Movie Collection : தமிழ் சினிமாவில் அஜித், விஜய் மற்றும் சூர்யா என்று தமிழ்த் திரைப்படங்களில் முன்னணி நடிகர்களில் முதன்மை நடிகராக இருந்து வருபவர் நடிகர் சூர்யா. இவரின் நடிப்பிலும், இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்திலும் மிகப் பிரமாண்டமாக வெளியான திரைப்படம் கங்குவாவின் வசூல் விவரம் பார்க்கலாம்

கங்குவா வசூல் என்ன? 5 நாட்கள் கலெக்‌ஷன் விவரம்!
கங்குவா திரைப்படம்
barath-murugan
Barath Murugan | Published: 19 Nov 2024 16:27 PM

தமிழ் சினிமாவில் மிகப் பிரம்மாண்ட திரைப்படமாக வெளியான கங்குவா கடந்த நவம்பர் 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகியது. இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில், யுவி கிரியேஷன்ஸ், ஸ்டூடியோ கிரீன் என இரண்டு தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து பெரும் பொருட்செலவில் வெளியாகியது. நடிகர் சூர்யாவுடன் இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், கோவை சரளா, யோகிபாபு, ரெட்டின் கிங்ஸ்லி, நடராஜன் சுப்பிரமணியன், ஜெகபதி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். 700 ஆண்டுகளுக்கும் முன்னால் நடந்த மன்னர் கால கதைகளை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட்ட இந்த திரைப்படமானது சுமார் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியது. சூர்யாவின் 2 ஆண்டுகள் கடின உழைப்பில் உருவான கங்குவா திரைப்படத்திற்குப் பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

5 நாட்களில் கங்குவா திரைப்படம் செய்த மொத்த வசூல்..

சூர்யாவின் நடிப்பில் ரூ 300 கோடியிலிருந்து 350 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த திரைப்படம் தமிழ் மட்டுமில்லாமல், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம், மற்றும் ஸ்பானிஷ் போன்ற 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியது. சூர்யா மற்றும் இயக்குநர் சிறுத்தை சிவாவின் 2 ஆண்டுகள் கடின உழைப்பில் வெளியான இந்த கங்குவா.

கிராபிக்ஸ், பல கலைப்பாடுகள், ஒளிப்பதிவு என ஹாலிவுட் திரைப்படங்களுக்கு டப் கொடுக்கு விதத்தில் உருவான இந்த திரைப்படம் 5 நாட்கள் முடிவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? இத்திரைப்படம் உலகளாவிய வசூலில் ரூ 192.10 கோடிகளையும், தமிழ்நாட்டில் சுமார் 60 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது உலகளாவிய வசூலில் ரூ 192.10 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ள இந்த திரைப்படம் சில நாட்களில் 200 க்கும் மேல் வசூல் செய்துவிடும் என்றார் எதிர்பார்க்கப் படுகிறது.

இவரின் இசையமைப்பில் வெளியான பாடல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுவரும் நிலையில் அதில் யொலோ மற்றும் ஆதி நெருப்பே போன்ற பாடல்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க :டிசம்பரில் கீர்த்தி சுரேஷ் திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

கங்குவா சர்ச்சை

கடந்த நவம்பர் 14ம் தேதி உலகமெங்கும் வெளியான பான் இந்திய திரைப்படமான இது மக்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதிலும் கங்குவா திரைப்படத்தின் ஒலி அதிகமாக இருப்பதாக முக்கியமாகத் தெரிவிக்கப் பட்டுவந்த நிலையில் திரையரங்கு உரிமையாளர்களிடம் 2 பாயிண்டுகள் குறைத்துக் கொள்ளுமாறு திரையரங்கு உரிமையாளர்களிடம் தயாரிப்பாளர் ஞானவேல் கோரிக்கை வைத்தார்.

இதையும் படிங்க :ஜெயம் ரவியின் “காதலிக்க நேரமில்லை” – வெளியான புதிய அப்டேட்!

இது மட்டுமில்லாமல் தொடர்ந்து திரையுலகிலும் சரி, ரசிகர்கள் மத்தியிலும் சரி, விமர்சனங்களை இணையத்தில் தெரிவித்து வந்த நிலையில் நடிகை ஜோதிகா அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் தனது இணையப்பக்கத்தில் படத்தைக் குறித்தும், அதன் விமர்சனங்கள் குறித்தும் கூறியிருந்தார். அதில் அவர் “சூர்யாவின் மனைவியாக அல்லாமல் ஒரு சினிமா ரசிகையாகக் கூறுகிறேன்.

ஜோதிகா கருத்து

கங்குவா படத்தில் முதல் அரைமணி நேரம் அதிகமான சத்தம் காரணமாக ரசிகர்களிடம் சென்று சேரவில்லை. 3 மணி சேர படத்தில் அது வெறும் முதல் அரைமணி நேரம் மட்டுமே அதிக சத்தமாக இருக்கிறது, இதற்காக மொத்த திரைப்படத்தையும் குறை கூறவேண்டாம் என்றும் அந்த பதிவில் கங்குவா விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் படி அந்த பதிவில் தெரிவித்திருந்தார்.

கங்குவா திரைப்படத்தைத் தாண்டியும் இவரின் பதிவு திரையுலகினர் மட்டுமில்லாமல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து. அதிலும் பின்னணி பாடகி சுசித்ரா, ஜோதிகாவை கடுமையாக விமர்சித்தார். நடிகர் சூர்யாவின் இந்த திரைப்படம் கடும் விமர்சனங்களுக்கு மத்தியிலும் தற்போதுவரை திரையரங்குகளில் நல்ல வரவேற்புகளும் இருந்துவருகிறது.

இதையும் படிங்க:நடிகை நயன்தாராவின் “ராக்காயி” படத்தின் டைட்டில் டீசர்!

Latest News