5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Actor Vijay: வரிகளைப் பார்த்து பயந்து போன விஜய்.. என்ன பாட்டு தெரியுமா?

A.Venkatesh: சாக்லேட் பாயாக தமிழ் சினிமாவில் வலம் வந்த விஜய்யை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியதில் மிக முக்கிய பஃக்கு ஏ. வெங்கடேஷுக்கு உண்டு. குறிப்பாக ஹீரோவாக ஜொலிக்க தொடங்கிய காலக்கட்டத்தில் விஜயை நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க வைத்தவர்.

Actor Vijay: வரிகளைப் பார்த்து பயந்து போன விஜய்.. என்ன பாட்டு தெரியுமா?
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 11 Jul 2024 13:14 PM

ஏ.வெங்கடேஷ்: தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர் ஏ.வெங்கடேஷ். இவர் விஜய்யை வைத்து இயக்கிய பகவதி படத்தில் முதலில் “சிங்கம் ஒன்று சிங்கம் ஒன்று வருதே” என்ற பாடல் வரிகள் இடம் பெற்றிருந்தது. அந்த பாடலை பதிவு செய்த நிலையில் கடைசி வரை நடிக்கவே மாட்டேன் என சொல்லி விட்டார். சிங்கம் ஒன்று சிங்கம் ஒன்று வருதே என்ற வரிகளை கேட்டதும் என்ன மாதிரியான காட்சிகள் வரும் என கேட்டார். நான், நீங்க நடந்து வர்றீங்க, ஜீப்ல வர்றீங்க என சொன்னேன். ஆனால் அவரோ ரொம்ப ஓவரா இருக்கும் நான் நடிக்க மாட்டேன் என சொல்லி விட்டார்.நான் விஜய்யிடம் முடியவே முடியாது, சிங்கம் ஒன்று சிங்கம் ஒன்று வருதேன்னு நீங்க நடந்து வர்றீங்க என கறாராக கூறி விட்டேன். உடனே விஜய் அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகருக்கு போன் செய்து, இயக்குனர் ரொம்ப பிடிவாதம் பிடிக்காரு. ரொம்ப ஓவரா இருக்கு. நீங்களே சொல்லுங்க என தெரிவித்தார்.எஸ்.ஏ.சி சாரும் விஜய் ரொம்ப பயப்படுறான். பாட்டு வேண்டாம் என சொல்லி விட்டார்.

Also Read: Nepolean: டபுள் ஹேப்பி.. மருமகளும் திருநெல்வேலி தான்..நன்றி மறக்காத நெப்போலியன்!

நான் முதலில் அதற்கு மறுத்தேன்.பின்னர் பாட்டு வேண்டும் என்பதால் வரிகளை மாற்றி கொள்கிறேன் என சொல்லி காட்சிகளை எடுத்தேன். இதனைத் தொடர்ந்து “சிங்கம் ஒன்று சிங்கம் ஒன்று வருதே” என்ற பாடல் வரி, “அச்சமில்லை அச்சமில்லை மனமே” என மாற்றம் செய்யப்பட்டது என கூறினார்.

ஏ.வெங்கடேஷ் – விஜய் கூட்டணி

இயக்குனர்கள் ராஜேஷ்வர், பவித்ரன், சங்கர், ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வெங்கடேஷ் 1996 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான மகாபிரபு படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இதனைத் தொடர்ந்து விஜயை வைத்து செல்வா, நிலாவே வா மற்றும் பகவதி ஆகிய மூன்று படங்களை இயக்கினார்.

சாக்லேட் பாயாக தமிழ் சினிமாவில் வலம் வந்த விஜய்யை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியதில் மிக முக்கிய பஃக்கு இவருக்கு உண்டு. குறிப்பாக ஹீரோவாக ஜொலிக்க தொடங்கிய காலக்கட்டத்தில் விஜயை நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க வைத்தவர்.

Also Read: Dulquer Salmaan : துல்கர் சல்மானின் அடுத்தப் படம்.. லக்கி பாஸ்கர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஆக்ஷன் கதைகளை சிறப்பாக கையாள்வதில் முக்கியமான இயக்குனராக திகழ்ந்த ஏ.வெங்கடேஷ் சாக்லேட், தம், குத்து, ஏய், சாணக்யா, வாத்தியார், மலை மலை, துரை, சிங்கக்குட்டி, மாஞ்சா வேலு, வாடா, வல்லக்கோட்டை , கில்லாடி, சண்டமாருதம் என ஏகப்பட்ட படங்களை இயக்கியுள்ளார். பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த வெங்கடேஷ் 2010 ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த  அங்காடி தெரு திரைப்படத்தில்  முக்கியமான கேரக்டரில் நடித்து மிரட்டி இருந்தார். இதன் பின்னர் கோலிசோடா, ஆண்டவன் கட்டளை, தொடரி, கடுகு, அசுரன், ருத்ரன் என பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார்.

Latest News