நடிகர் விஜயின் அரசியல் குறித்து எஸ்.ஏ.சந்தரசேகரின் கருத்து!
Actor Vijay Politics: கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், யாருக்கும் ஆதரவுமில்லை என்றும், 2026ஆம் ஆண்டு தேர்தலே தனது இலக்கு என்றார். தீவிர அரசியலுக்கு பின் சினிமாவில் இருந்து விலகுவேன் என அறிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர்.
நடிகர் விஜய், அம்மா ஷோபா, அப்பா எஸ்.ஏ.சந்திரசேகருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வந்தது. அந்த புகைப்படத்தில் நடிகர் விஜய், அப்பாவின் தோளில் கை போட்டுக்கொண்டு அழகாக போஸ் கொடுத்திருந்தார். அப்பாவிற்கும் மகனுக்கும் மனக்கசப்பு இருந்ததாக கூறப்பட்ட நிலையில், அந்த குடும்ப புகைப்படம் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. வரும் ஜூன் 22ஆம் தேதி விஜய் தனது 50வது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ள நிலையில், தனது பெற்றோரை சந்தித்துள்ளார். இந்நிலையில் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவருடைய தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் முதல் முறையாக மகனின் கட்சி குறித்து தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இது இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
நடிகர் விஜய் தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜயுடன் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாக்ஷி செளதரி, லைலா, வைபவ் , பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். எ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தைத் தயாரித்து வருகிறார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இரண்டு வேடங்களில் விஜய் நடிப்பதாக கூறப்பட்டாலும், கோட் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி பற்றிய அப்டேட் இதுவரை வெளியாகவில்லை.
இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘விசில் போடு’ கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது. இதையடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு சினிமாவில் 17 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்ட நிகழ்ச்சியில் 2 -வது சிங்கிள் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22- ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. மேலும், செபடம்பர் 5-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. மேலும் மலேசியாவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
Also read… மோடியாக நடிக்க ரெடி… ஆனால், சத்யராஜ் போட்ட கண்டிஷன்!
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், யாருக்கும் ஆதரவுமில்லை என்றும், 2026ஆம் ஆண்டு தேர்தலே தனது இலக்கு என்றார். தீவிர அரசியலுக்கு பின் சினிமாவில் இருந்து விலகுவேன் என அறிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி பின்னர் தனது பெற்றோரான இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபாவை கடந்த மே மாதம் 27ஆம் தேதி சந்தித்தார். இது தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று காலை திடீரென நடிகர் விஜயின் தந்தையும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகரும், அவரது மனைவியும் விஜயும் தாயாருமான சோபனாவுடன் காஞ்சிபுரம் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக சென்றிருந்தனர். இதனையெடுத்து எஸ்ஏ சந்திரசேகரிடம் விஜயின் அரசியல் பயணம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும் எனது பிள்ளைக்கு எப்போது இருக்கும் என அவர் பதிலளித்துள்ளார்.