’கோட்’ படத்தில் விஜயகாந்த்… பிரேமலதா விஜயகாந்திற்கு நேரில் நன்றி கூறிய விஜய்!

Vijay Meets Premalatha: கோட் படத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் கேமியோ கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏஐ தொழில்நுட்பம் மூலம் அவரை இந்த படத்தில் படக்குழுவினர் நடிக்க வைத்துள்ளனர். இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் பிரேமலதா விஜயகாந்தை நடிகர் விஜய் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, விஜய பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

’கோட்’ படத்தில் விஜயகாந்த்... பிரேமலதா விஜயகாந்திற்கு நேரில் நன்றி கூறிய விஜய்!

பிரேமலதா விஜயகாந்திற்கு நேரில் நன்றி கூறிய விஜய்!

Updated On: 

20 Aug 2024 08:44 AM

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடிகர் விஜயகாந்த் மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் ‘ஏஐ’ மூலம் இடம்பெறும் நிலையில் அவரது மனைவி பிரேமலதாவை நேரில் சந்தித்து விஜய் நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துள்ள படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. இந்தப் படத்தில் விஜயுடன் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாக்‌ஷி செளதரி, லைலா, வைபவ் , பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். எ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தைத் தயாரித்து வருகிறார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சென்னை, ரஷ்யா, திருவனந்தபுரம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி திரைக்கு வர உள்ளது. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது முழுவீச்சில் கிராபிக்ஸ் பணிகள் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. அப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அதன் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக கசிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு கடந்த 17-ம் தேதி வெளியிட்டது. அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

கோட் படத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் கேமியோ கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏஐ தொழில்நுட்பம் மூலம் அவரை இந்த படத்தில் படக்குழுவினர் நடிக்க வைத்துள்ளனர். இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் பிரேமலதா விஜயகாந்தை நடிகர் விஜய் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, விஜய பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பின்போது பிரேமலதா விஜயகாந்த்திற்கு நடிகர் விஜய் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை பெற்றுள்ளார். மேலும் விஜயகாந்தின் உருவப்படத்திற்கும் விஜய் மரியாதை செலுத்தியுள்ளார். கோட் படத்தில் விஜயகாந்த் நடித்துள்ள காட்சிகளை அவர்களிடம் காண்பித்து கோட் டீம் ஆலோசனை மேற்கெண்டதாக கூறப்பட்டுள்ளது. சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள வெங்கட் பிரபு, “விஜயகாந்த் ஆசியுடன் ‘தி கோட்” என பதிவிட்டுள்ளார்.

Also read… இயக்குநர் தனுஷ் குறித்து வெற்றிமாறனின் கருத்து… வைரலாகும் தகவல்!

முன்னதாக கோட் படத்தின் சென்சார் பணிகள் முடிந்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல் வெளியானது. மேலும், இப்படத்தின் நீளம் 2.45 (hours) மணி நேரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. கோட் திரைப்படம் நிச்சயம் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தோல்வியில் இருந்து குழந்தைகள் கற்றுக்கொள்ளும் பாடம்!
பனிக்காலத்தில் நாம் சுற்றுலா செல்ல வேண்டிய இடங்கள்!
காலை அல்லது இரவு? முட்டை எப்போது சாப்பிடலாம்?
தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?