Viduthalai 2: அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு? – கேள்வி கேட்ட ரசிகருக்கு விஜய் சேதுபதி பதிலடி!
Actor Vijay Sethupathi :தமிழ்த் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகர்கள் வரிசையிலிருந்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரின் நடிப்பில் தற்போது வெளியீட்டிற்குத் தயாராகிவரும் படம் விடுதலை பாகம் 2. இப்படத்தின் ப்ரோமோஷன் மேடையில் விஜய் சேதுபதி கூறிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2023ல் வெளியான திரைப்படம் விடுதலை பாகம் 1. இப்படத்தில் நடிகர் சூரி, பவானி ஸ்ரீ மற்றும் விஜய் சேதுபதி எனப் பல முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர். ஆக்ஷ்ன் மற்றும் க்ரைம் த்ரில்லர் கதைக்களத்துடன் வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று ஹிட்டானது. தற்போது இப்படத்தின் தொடர்ச்சியாக விடுதலை பாகம் 2 விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதை அடுத்தாக தற்போது விடுதலை பாகம் 2 திரைப்படம் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது. ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனியின் என இரு நிறுவனங்களும் இணைத்து தயாரித்து வருகிற்து. இப்படத்தில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி, பவானி ஸ்ரீ, கவுதம் வாசுதேவ் மேனன் எனப் பலரும் நடித்துள்ளனர்.
இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், திரைப்படத்தின் ப்ரோமோஷன் வேலைப்பாடுகள் நடந்து வருகிறது. இந்நிலையில் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி படத்தைப் பற்றிப் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:தியேட்டரில் மாஸ் காட்டும் புஷ்பா 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?
ஹைதராபாத்தில் விடுதலை 2 ப்ரோமோஷன் மேடையில் நடிகர் விஜய் சேதுபதி பேசிய விஷயம் :
இந்நிலையில் ஹைதராபாத்தில் நடந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ரசிகர்கள் விஜய் சேதுபதியிடம் ” உங்களின் இளமை பருவ காட்சிகளுக்கு டீஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அது உண்மையா? என்று கேள்வி கேட்டார்.
அதற்கு நடிகர் விஜய் சேதுபதி என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விஜய் சேதுபதி, “அதெல்லாம் உங்களுக்கு எதற்கு என்றும், என் படத்தை பாருங்க,பார்த்திட்டு பிடிச்சிருக்கா, பிடிக்கலையான்னு சொல்லுங்க, திரைப்படங்களில் கண்டிப்பாக தொழில்நுட்பங்களை பயன்படுத்தித்தான் எடுக்கப்படுகிறது. ஆனால் அந்த விஷயங்களைப் பார்வையாளர்கள் எதற்காக என தெரிஞ்சிக்க வேண்டும்? என்று கேள்வி கேட்ட நபருக்கு தக்க பதிலடி வழங்கினார்.
இதையும் படிங்க:தனுஷ் ரசிகர்களுக்கு குட்நியூஸ் சொன்ன ஜி.வி. பிரகாஷ்.. சூப்பர் அப்டேட்!
பழங்குடியின மக்களின் அடிமைத்தனத்தை எதிர்த்தும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் இந்த விடுதலை 2. பாகம் 1ல் சூரி முன்னணி நாயகனாக நடித்ததை போல், பாகம் 2 விஜய் சேதுபதி முன்னணி கேரக்டரில் நடித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்திலிருந்து 2 பாடல்கள் இதுவரை வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த விடுதலை பாகம் 2 வருகின்ற டிசம்பர் 20ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் எனப் பல மொழிகளைத் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என ப்ரோமோஷன் வேலைகள் நடந்துவருகிறது. விடுதலை பாகம் 1 போல இந்த பாகம் 2 திரைப்படமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:அஜித் படத்துக்கு அடுத்து ‘மார்க் ஆண்டனி 2’ படமா? ஆதிக் ரவிச்சந்திரன் பிளான் இதுதான்!